காதல்மனைவி தலித் என்பதால் வாழ முடியாது ! கழற்றிவிட்ட ஐபிஎஸ் அதிகாரி !
காதல்மனைவி தலித் என்பதால் வாழ முடியாது ! கழற்றிவிட்ட ஐபிஎஸ் அதிகாரி !
ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர் தான் ரகசியமாக திருமணம் செய்து கொண்ட பெண்ணை கலட்டி விட முயற்சிப்பதால் அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்திலுள்ள கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வர ரெட்டி. இவர் ஹைதராபாத்திலுள்ள பிரபல உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருக்கும் போது அதே பல்கலைக்கழகத்தை சேர்ந்த பிருதுலா பாவனா என்ற இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.
இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். காதல் குறித்து பாவனா வீட்டில் சொல்லி விடலாம் என கூறவே மகேஸ்வர ரெட்டி மறுத்துள்ளார்.
பிறகு இருவரும் ரகசிய திருமணம் செய்து தனிமையில் வாழ்ந்து வந்துள்ளனர்.
பாவனா சில மாதங்களுக்கு முன்பு நடந்தவற்றை தன் வீட்டில் கூறியுள்ளார். ஆனால் மகேஸ்வர ரெட்டி தன் வீட்டில் கூற மறுத்துள்ளார். மேலும் அந்த பெண்ணை ரகசியமாக விவாகரத்து செய்து விட்டு வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். இதற்கு இடையில் இவர் ஐபிஎஸ் பரீட்சையிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
மகேஸ்வர ரெட்டி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போவதை அறிந்த பாவனா காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார். இதனால் மகேஸ்வர ரெட்டி அந்த பெண்ணை அழைத்து சமரசம் பேசியுள்ளார். அதில் பிடி கொடுக்காத பாவனாவிடம், நீ ஒரு தலித் பெண். உன்னை எங்கள் வீட்டில் ஏற்றுக் கொள்ள மாட்டர்கள். எனவே உன்னுடன் சேர்ந்து வாழ முடியாது" என தெரிவித்துள்ளார்
இதில் ஆத்திரமடைந்த பாவனா அந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் குறித்த நிலையை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து முகநூலில் பகிர்ந்துள்ளார். மேலும் திருமண புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளார்.
ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற ஒருவர் இப்படி சாதி பார்த்து கல்யாணம் செய்த மனைவியை கழற்றிவிடுவது என்ன வித மனநிலை என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.