திருச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்யேக – மா காவேரி மருத்துமனை !
காவேரி மருத்துவ குழுமம் சார்பில் திருச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்யேக மருத்துவமனை. கடந்த 25 ஆண்டுகளாக குழந்தைகள் நலத்துறை மற்றும் மகளிர் மருத்துவத் துறையில் பயணம் செய்து வரும் காவேரி மருத்துவ குழுமம் சார்பில் திருச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக 200 படுக்கைகள் கொண்ட பிரத்யேக மருத்துவமனையான மா காவேரி மருத்துவ சேவையை தொடங்கியது. இதனை அமைச்சர் கே .என் .நேரு திறந்து வைத்தார்.

உயர் பயிற்சி பெற்ற நிபுணர் குழுவின் சேவை 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில் குழந்தைகள் நலப் பிரிவில் தீவிர சிகிச்சை பிரிவு, புற்று நோய் , இரைப்பை ,குடல், சிறுநீரகவியல், நியோநாட்லஜி போன்ற பல்வேறு சிகிச்சைகளுக்கு அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, தீவிர கண்காணிப்பு பிரிவு, பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் எலும்பு மஜ்சை, கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறப்பு பிரிவுகள் ஆகிய அனைத்தும் இம் மருத்துவமனையில் அமையப்பட்டுள்ளது.

மகளிர் மற்றும் மகப்பேறு துறையில் மேம்படுத்தப்பட்ட லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை ,கரு மருத்துவம், குழந்தையின்மை சிகிச்சை, புற்றுநோயியல் சிகிச்சை உட்பட அனைத்தும் 24 மணி நேரமும் கிடைக்கும் வகையிலும், ஆலோசனை மற்றும் சிகிச்சை பிரிவு, பிரசவ அறைகள், நவீன மயமான அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் மருத்துவமனை அமையப்பட்டுள்ளதாக நிர்வாகத்தின் இணை இயக்குனர் மற்றும் தலைமை குழந்தைகள் நல மருத்துவருமான டாக்டர் செங்குட்டுவன், காவேரி குழும மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ் மணிவண்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.

திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு உயர்தர குழந்தைகள் , மகளிர் களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையின் திறப்பு விழாவில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் காவேரி மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் எக்சிகியூட்டிவ் சேர்மன் சந்திரசேகர் உட்பட நகரின் முக்கிய பிரமுகர்கள், மருத்துவமனை நிர்வாகிகள், பணியாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.