அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மடப்புரம் அஜீத் குமார் கொட்டடி கொலை வழக்கு என்ன ஆச்சு?

திருச்சியில் அடகு நகையை விற்க

  1. வழக்கு புலன் விசாரணையை முடித்து இறுதி குற்றப் பத்திரிக்கையை மதுரை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்து விட்டது. சிபிஐ தரப்பில் புலன் விசாரணை  பணி முடிந்து விட்டது.
  2. முதற்கட்ட குற்றப்பத்திரிக்கை அடிப்படையில் மதுரை மாவட்ட 5- வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் காவலர்கள் 6 பேர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப் பத்திரிக்கை நகல்கள் வழங்கி மேல் விசாரணைக்கு மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். பின்னர் 6 காவலர்கள் மீதான வழக்குடன் இணைத்து சாட்சிகள்  விசாரணை   நடக்க வேண்டும். அடுத்த வாய்தா 03.06.2026.
  3. இறுதி குற்றப்பத்திரிக்கையில் குற்றம்சாட்டப்பட்ட டிஎஸ்பி இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 பேர் மீதான வழக்கு மதுரை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 15.05.2026 ல் வாய்தா போடப்பட்டுள்ளது.
  4. இறுதி குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்ப்டவர்களின் முன்ஜாமின் மனுக்கள் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உத்தரவிற்காக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
  5. வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுக்களும் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
  6. முதலில் கைது செய்யப்பட்ட காவர்கள் 6 பேர் சிறையில்  உள்ளனர்.  டிஎஸ்பி இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 பேர் வெளியில் உள்ளார்கள்.
  7. அடுத்த கட்ட நிலை, உயர்நீதிமன்ற தடை உள்ள நிலையில் உயர்நீதிமன்ற மனுக்கள் மீது தீர்ப்புகள் வந்த பின்னர் தான் மதுரை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நகல் வழங்கப்பட்டு பின்னர் மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் 6 காவலர்கள் மீதான வழக்குடன் டிஎஸ்பி இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 பேர் மீதான வழக்கும் இணைக்கப்பட்டு சாட்சிகள் விசாரனை துவக்கப்படும். இதற்கு  சில மாதங்கள்  பொறுத்திருக்க தான் வேண்டும்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

—   வழக்கறிஞர் Dr நல்வினை விஸ்வராஜு .

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.