அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

*’மெட்ராஸ் மேட்னி’  பிரஸ் மீட் நியூஸ்!*

0

திருச்சியில் அடகு நகையை விற்க

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ்  வாழக்கையை பிரதிபலிக்கும்,  அழகான டிராமாவாக உருவாகியுள்ள படம்   ‘மெட்ராஸ் மேட்னி’.

வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் மே.27- ஆம் தேதி  நடந்தது..

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இந்நிகழ்வினில்… பேசிய சிலர்..

'மெட்ராஸ் மேட்னி*நடிகை ஷெல்லி*

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

“நான் மலையாளி எனக்குத் தெரிந்த தமிழில் பேசுகிறேன். இந்தப்படம் மிக சிறந்த அனுபவம். இப்படத்தில் எல்லோரும் சமமாக நடத்தப்பட்டார்கள் அது சினிமாவில் அரிதான விசயம். அதற்காக இயக்குநர் கார்த்திகேயன் மணிக்கு நன்றி. அவர் மிக அமைதியாக, பொறுமையாக அனைவரையும் பார்த்துக்கொண்டார். காளிவெங்கட்டும் நானும் இந்த படக் கதாபாத்திரத்திற்கு உயிர் தந்துள்ளோம். ரோஷினி, விஷ்வா எல்லோரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். இது நிஜமான வாழக்கையை சொல்லும் படம், கண்டிப்பாக இந்தப்படம் உங்களை மகிழ்விக்கும்”.

*நடிகர் கலையரசன்*

“நான் இந்தப்படத்தில் நடிக்கவில்லை. ஆனால் நான் நடித்த மாதிரி சந்தோசமாக உள்ளது. சின்னப்படம் பெரிய படம் என்பதெல்லாம் ரிலீஸ் வரை மட்டும் தான். அதன்பிறகு கண்டென்ட் தான் முடிவு செய்யும். இது ரொம்ப நல்ல படமா தெரிகிறது. நான் ரெண்டு மூன்று தடவை பாக்க வாய்ப்பு  கிடைத்தும் மிஸ் பண்ணிட்டேன் சாரி.   ஒரு நல்ல படம் வந்தால் எப்படியாவது இண்டஸ்ட்ரிக்குள்  எங்கேயாவது அதைப் பற்றி பேச்சு  வந்துவிடும்.இப்படம் பற்றியும் நிறையப் பேர் சொல்கிறார்கள், மகிழ்ச்சி. எல்லோரும் உழைத்திருப்பது திரையில் தெரிகிறது. கார்த்திகேயன் இந்த மாதிரி புதுமையா இன்னும் நிறையப் படங்கள் செய்யுங்கள்”.

*நடிகர் ரமேஷ் திலக்*

“டூரிஸ்ட் ஃபேமிலி பட சக்சஸ் மீட்டுக்கு  வரவில்லை. அதற்குக் காரணம் காளி வெங்கட் தான், அவருடன் தான் ஷூட்டில்  இருந்தேன். நீங்கள் தந்த பாராட்டுக்கள் என் 15 வருட சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிதாக இருந்தது. இந்த மேடையைக் காளி வெங்கட் எனக்குத் தந்திருக்கிறார் நன்றி. இந்தப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும்”.

*ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரபு*

“மெட்ராஸ் மேட்னி படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமா வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி. இன்றைக்கு மொத்த இந்திய சினிமாவும் முக்கியமான ஒரு காலகட்டத்தில இருக்குன்னு நினைக்கிறேன். சினிமாவின் மார்க்கெட் முழுக்க மாறியிருக்கு.  என்ன படம் செய்வது என்பதில் எல்லோரிடமும் குழப்பம் இருக்கிறது.ஆனால் மக்கள் இன்னும் தியேட்டருக்கு நிறைய வந்து படம் பார்க்கறாங்க. நல்ல படங்களை சப்போர்ட் பண்றாங்க. எல்லாரும் ஒரு படம் ஆரம்பிக்கிறப்போ, இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறணும். நமக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கணும்.

நம்முடைய கனவு நிறைவேறணும். நிறைய பணம் சம்பாதிக்கணும். பேர சம்பாதிக்கணும் இந்த மாதிரி  ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான விஷயத்தோட ரொம்ப பாசிட்டிவாதான் ஆரம்பிக்கிறோம். ஆனால் ஆரம்பிக்கிற எல்லா படங்களும் அதே மாதிரியான அவுட்புட்டோட வந்து முழுமை பெறறதில்லை. அது ரொம்ப சிக்கலான விஷயம். நிறைய வெவ்வேறு விதமான கலைஞர்களுடைய  பணிகள் ஒரு படத்துக்கு தேவைப்படுது .அது அழகா அமைஞ்ச்ச படமா மெட்ராஸ் மேட்னி படத்தைப் பார்க்கிறேன்.

'மெட்ராஸ் மேட்னிசின்ன படம் பெரிய படம் அப்படின்னு எப்பவுமே நம்மளே வகைப்படுத்திட்டே இருக்கோம். அப்படி இல்லாம  பெரும்பான்மையாக இருக்கக்கூடிய ஒரு மிடில் கிளாஸ் லைஃபை, ரொம்ப எதார்த்தமா அதே நேரத்துல ரசிக்கும்படியா இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு கேரக்டர்ஸும் நம்ம வாழ்க்கையில  பார்த்த கேரக்டர்ஸ. திரும்பி பார்க்கிற மாதிரி இருந்தது. ஒரு மிடில் கிளாஸ் லைஃப்  மேட்னி ஷோவா  பாக்குற மாதிரியான ஒரு அனுபவம்தான் இந்தப்படம். நிறைய விஷயங்கள் ரொம்ப நாஸ்டாலஜிக்கா இருந்தது.   கார்த்திகேயன் மணி மிகச்சிறப்பாக படத்தை தந்துள்ளார்.  எல்லா நடிகர்களும் சிறப்பான நடிப்பைத் தந்துள்ளார்கள். காளி வெங்கட்டை வைத்து ஒரு ஆக்சன் படமே எடுக்கலாம் அவர் நடிப்பு அவ்வளவு சிறப்பாக இருந்தது. இப்படத்தை ஒரு மாஸ் கமர்ஷியல் சினிமாவாகத்தான் நான் பார்க்கிறேன்”.

*நடிகை ரோஷினி*

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

“படத்தில் எல்லோரும் மிகச்சிறப்பா வேலை பார்த்திருக்கிறார்கள். இந்தப்படம் பார்க்கும் போது உங்களுடைய பழைய நினைவுகள் எல்லாம் ஞாபகம் வரும். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்”.

*இயக்குநர் கார்த்திகேயன் மணி*

“என் அம்மா  நிறைய இலக்கிய வட்டம் போவார்கள். தமிழ் மொழியின் சிறப்பை பற்றி நிறைய சொல்லுவார்கள். உண்மையிலேயே தமிழ் எவ்வளவு பழமை வாய்ந்தது என்ற கேள்வி எனக்குள் வந்தது. அதன் பிறகு நிறையப் புத்தகங்கள் படித்தேன். நம்மளோட வரலாறு இப்ப இருக்குறவங்க யாருக்குமே தெரியலைன்றது  எனக்கு மிகப்பெரிய வருத்தமா இருந்தது.

ஒரு சில கவிதைகள வச்சே நாலு படம் எடுக்கலாம்.அந்த மாதிரி கதைகள் நமக்கே தெரியவில்லை. அது உண்மையிலேயே வருத்தத்துக்குரிய விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன், ஏன் மத்தவங்க எடுக்கலன்றத கேக்குறத விட்டுட்டு, நான் ஏதாச்சும் பண்ணனும்னு தான் இந்தப்படம் எடுக்க முயற்சி செய்தேன்.

நான் ஐடில இருந்தாலும் எனக்கு  சினிமா மேல பயங்கரமான பேஷன் உண்டு. அதன் தொடக்கமாகத் தான் இந்தக்கதை எழுதினேன், நான் வாழ்க்கையில் சந்தித்த, பார்த்த அனுபவங்கள் தான் இந்தப்படம். ஒரு அப்பா பசங்களுக்காக நாய் மாதிரி ஓடுறாரு. திடீரென்று பார்த்தா பசங்களுக்கும் அவருக்கும் ஒரு கேப் இருக்கு. அந்த அப்பாவிற்கு எவ்வளவு வலிக்கும்.

இந்தக் கதையை நான்  எழுதி முடித்த பிறகு,  ஒரு நல்ல அப்பா கிடைக்கவேண்டுமென்று நான்  வலைவீசி தேடிட்டு இருந்தேன். சரியான அப்பா கிடைக்கலைனா இந்தப்படம் எடுக்க வேண்டாமென்று முடிவு செய்திருந்தேன் . அப்போதுதான்  காளி சார்   இந்த கதைக்கு ஓகே சொன்னார்.  காளி வெங்கட் நடிப்பைப் பற்றி சொல்லத் தேவையில்லை.

காளி வெங்கட்
காளி வெங்கட்

காளி வெங்கட் சாரோட நடிப்பு எல்லாமே ரொம்ப உண்மையா இருந்தது. ஷெல்லி, விஷ்வா, ரோஷினி எல்லோரும் உங்க வாழ்க்கையைப் பார்ப்பது போலவே நடிப்பைத் தந்துள்ளார்கள். சத்யராஜ் சார் கேரக்டர் இந்த டிரெய்லர்ல  மிடில் கிளாஸ் லைஃப்ல என்ன இருக்கும் நோ ஆக்ஷன், நோ அட்வென்சர், நோ ரொமான்ஸ்,  அப்படின்னு சொல்லுவார்.

ஆனால் இதில் எல்லாமே இருக்கும். அது உங்க லைஃப்லயும் இருக்கு.  இந்த படம் மூலமா உங்களுக்கும் உங்கள் வாழ்க்கை ஞாபகம் வரும். எடிட்டர் சதீஷ், ஹரிகிருஷ்ணன்  இல்லையென்றால் இந்தப் படம் நடந்திருக்காது. இருவருக்கும் நன்றி. எங்களை நம்பி இந்தப்படத்தை எடுத்துக்கொண்ட ட்ரீம் வாரியர்ஸ் எஸ் ஆர் பிரபு சாருக்கு நன்றி”.

*காளி வெங்கட்*…

“முதலில் எஸ் ஆர் பிரபு சாருக்கு நன்றி. ஒரு படம் எப்படிப்பட்ட படம் என்பது நீங்கள் வாங்கும்போது தெரிந்துவிடும். சத்யராஜ் சாருக்கு  ரொம்ப ரொம்ப நன்றி.  படம்  முடியற ஸ்டேஜ்லதான் இயக்குநர் அவரை அணுகினார் .ஆனால், எந்த தயக்கமும் இல்லாமல் படம் செய்து தந்தற்கு நன்றி. வடிவேல் சாருக்கு மிக்க நன்றி. அபிஷேக் மூலம் தான் இயக்குநரைச் சந்தித்தேன், வீட்டுக்கு கூப்பிட்டு கதை சொன்னார், அதுவே எனக்குப் புதிதாக இருந்தது. இந்தக்கதை சொன்னவுடனே எனக்குப் புரிந்துவிட்டது. எனக்கு என் அப்பாவின் ஞாபகம் வந்தது. எல்லோர் வாழ்க்கையிலும் இதை உணர்ந்திருப்பீர்கள். ஒரு கட்டத்தில் எல்லா அப்பாவும் தன் பிள்ளைகள் தன்னிடம் இருந்து பிரிந்து செல்வதை உணர்வார்கள். நான் அதிகம் சொல்லவில்லை படம் பார்க்கும் போது நீங்களே உணர்வீர்கள். ஷெல்லி யுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது, மிகச் சிறப்பாக நடித்துள்ளார். விஷ்வா, ரோஷினி எல்லோருக்கும் நன்றி. படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. அனைவரும் ஆதரவு தாருங்கள்’.

இப்படத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா,  மதுமிதா,  சாம்ஸ்,  கீதா கைலாசம்,  பானுப்பிரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆனந்த் ஜி. கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. சி. பாலசாரங்கன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சதீஷ்குமார் சமுஸ்கி மேற்கொள்ள, கலை இயக்க பொறுப்புகளை ஜாக்கி ஏற்றிருக்கிறார். இந்த திரைப்படத்தை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. மொமெண்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் எக்ஸிகியூடிவ் புரொடக்ஷன் பணிகளை மேற்கொடுள்ளது. இப்படத்தை முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

 

—    மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.