‘மதராஸி’யின் “சலம்பல’ சாதனை!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தின் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யுத் ஜம்வால் உட்பட பலர் நடிக்கும் ‘மதராஸி’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. வருகிற செப்.05-ஆம் தேதி படம் ரிலீசாவதால், அனிருத் இசையில், இன்னும் எந்தப் படமும் வெளிவராமலேயே பத்து படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கும் மியூசிக் டைரக்டர் சாய் அபயங்கர் குரலில், ”சலம்பல” என்ற முதல் பாடல் கடந்த வெள்ளிகிழமை வெளியானது. பாடல் வெளியாகி ஐந்து நாட்களில் பல லட்சம் வியூஸ்களை யூடியூப்பில் அள்ளி சாதனை படைத்துள்ளது “சலம்பல”.
படத்தின் ஆடியோ ரைட்சை வாங்கியுள்ள ‘ஜங்லீ மியூசிக்’ நிறுவனத்தின் மந்தர் தாக்கூர் கூறும் போது, “சிவகார்த்திகேயன் –ஏ.ஆர்.முருகதாஸ், அனிருத் ஆகிய மூவரின் சக்தி வாய்ந்த கூட்டணியின் ”சலம்பல” வெளியான நிமிடத்திலிருந்து இப்ப வரை லட்சக்கணக்கான இசை ரசிகர்களை ஈர்த்துள்ளது. இதற்காக நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” என்கிறார்.
“எஸ்.கே.வின் எனெர்ஜியும் முருகதாஸின் தொலை நோக்குப் பார்வையும் இணைந்ததால் இந்த “சலம்பல” சகல திசைகளிலும் ஹிட்டடித்துள்ளது” என்கிறார் அனிருத்.
— மதுரைக்காரன்