மதுரை மத்திய தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் எங்கே?கிறிஸ்தவ ஆலயம் மட்டும் இனிக்குது! இந்து ஆலயம் மட்டும் கசக்குதா?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மதுரை மத்திய தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் எங்கே?கிறிஸ்தவ ஆலயம் மட்டும் இனிக்குது!
இந்து ஆலயம் மட்டும் கசக்குதா?

Flats in Trichy for Sale

மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட கீழவாசல் சி.எஸ்.ஐதேவாலயத்தில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பிரச்சனை இருந்ததை அறிந்து அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.பூமிநாதன் தேவலாயத்திற்க்கு நேரில் சென்று அதிகாரிகளை வரவழைத்து குடிநீர்,பாதாள சாக்கடை சரி செய்து பிரச்சனைகளை உடனடியாக தீர்த்து வைத்துள்ளதை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறதுஅதேபோல் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் வரக்கூடிய அரசு கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நான்கு சித்திரை வீதிகளில் போதுமான கழிப்பறை வசதி,குடிநீர் வசதி இல்லை, அடிக்கடி பாதாளசாக்கடை அடைப்பு ஏற்பட்டு பக்தர்கள் நடந்து செல்லும் வீதியில் கழிவுநீர் பல நாட்களாக ஓடுகிறது.கோவிலை சுற்றியுள்ள பெரும்பாலான ஸ்மார்ட்சிட்டி தெருமின்விளக்குகள் பலநாட்களாக எரியாமல் கோவிலே இருளில் மூழ்கி கிடக்கிறது என்று இந்துமக்கள்கட்சி பலமுறை குரல் கொடுத்து வருகிறதுஆனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி இவ்வளவு பிரச்சனைகள் இருந்தும் இதனை பற்றி நேரில் சென்று ஆய்வு செய்யாமல், மேற்கண்ட பிரச்சனைகள் மீது நடவடிக்கை எடுக்காமல்,கண்டும் காணாமல் இருக்கும்
இத்தொகுதியில் அனைத்து தரப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராகவும்,தமிழக நிதிஅமைச்சராகவும் இருக்கும் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் எங்கே?
தெற்கு தொகுதியில் இருக்கும் தேவலாயத்திற்க்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினராக மட்டும் இருக்கும் திரு.பூமிநாதன் அவர்கள் உடனே நேரில் சென்று பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறார்.
ஆனால் மத்திய தொகுதியில் இருக்கும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மட்டுமல்ல தமிழக நிதி அமைச்சராக இருக்கும் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் நேரில் சென்று கோவிலின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க தயங்குவது ஏன்அரசு கட்டுபாட்டிலும்,அரசுக்கு வருமானம் இல்லாத கிறிஸ்தவ தேவலாயம் மட்டும் மதசார்பற்ற அரசாங்கத்திற்க்கு இனிக்குதுஅரசு கட்டுபாட்டிலும்,அரசுக்கு கோடிக்கணக்கான வருமானம் ஈட்டும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மட்டும் மதசார்பற்ற கூட்டணி என்றும், மதசார்பற்ற அரசும் என்றும் கூறும் தமிழக அரசாங்கத்திற்க்கு கசக்குதா என
இந்துமக்கள்கட்சி
மதுரை மாவட்டத்தலைவர்சோலை கண்ணன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Sri Kumaran Mini HAll Trichy

-ஷாகுல் படங்கள்: ஆனந்த்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.