மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் செல்போன் ரிங் அடித்ததால் விசிக கவுன்சிலரை வெளியேற்றம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

வுன்சிலர்கள் 2 மணி நேரம் செல்போன் இல்லாமல் இருக்க முடியாதா? என கேள்வி!

எனது செல்போன் எதிர்பாராத விதமாக ரிங் அடித்து விட்டது அதற்கு வெளியேற்றுங்கள் என்று மேயர் கூறி இருந்தால் அது கண்டிக்ககூடிய செயல் என விசிக கவுன்சிலர் ஆதங்கம்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

மதுரை மாநகராட்சியின் 31 வது மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் இன்று தொடங்கியது. அப்போது பல்வேறு தீர்மானங்களை மேயர் வாசித்துகொண்டிருந்தார். அப்போது மாமன்ற கூட்டத்திற்குள் மாநகராட்சி 71ஆவது வார்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாமன்ற உறுப்பினர் இன்குலாப்(எ) முனியாண்டியின் செல்போன் ரிங் அடித்தது.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

இதனை கேட்டு டென்சன் ஆன மேயர் யார் செல்போன் ரிங் அடித்ததோ அவரை வெளியேற்றுங்கள் என எச்சரிக்கை விடுத்தார். இதனையடுத்து விசிக கவுன்சிலர் முனியாண்டி சாரி சொல்லிவிட்டு மீண்டும் அமர்ந்த பின்னர் இதுபோன்று செல்போன் ரிங் அடித்தால் அவர்களை வெளியேற்றுங்கள் என மேயர் கூறினார்மேலும் கவுன்சிலர் கூட்டத்தில் 2 மணி நேரம் செல்போன் இல்லாமல் இருக்க முடியாதா? என அட்வைஸ் செய்ததோடு மாமன்றத்தில் மக்கள் பிரச்சினை குறித்து பேசனுமே தவிர மாமன்றத்தில் செல்போனில் பயன்படுத்தக்கூடாது என்றார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இது குறித்து பேசிய விசிக கவுன்சிலர் இன்குலாப் : மாமன்ற கூட்டத்திற்கு வரும்போது செல்போனை வாங்குவதற்கு ஆட்கள் இல்லை அதனால் உள்ளே கொண்டு வந்தேன் ஏராளமான கவுன்சிலர்கள் செல்போன்களை உள்ளே செல்ஃபி எடுப்பது புகைப்படம் எடுப்பது சமூகவலைத் தளங்களில் பதிவிடுவது என செய்து வருகிறார்கள்

கவுன்சிலர் இன்குலாப்
கவுன்சிலர் இன்குலாப்

 

எனது செல்போன் எதிர்பாராத விதமாக ரிங் அடித்து விட்டது அதற்கு வெளியேற்றுங்கள் என்று மேயர் கூறி இருந்தால் அது கண்டிக்ககூடிய செயல் என்றார்

இன்றைய இணைய யுகத்தில் அனைத்து தகவல்களும், அனைத்து தேவைகளும் செல்போன் மட்டுமே பிரதானமாக உள்ள மக்கள் பிரதிநிதிகளை செல்போன் 2 மணி நேரம் பயன்படுத்தக்கூடாது என்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது எனவே செல்போன்களை அனுமதித்து சைலண்ட் மோடில் வைத்து பேசுவதற்கு மட்டும் வெளியில் செல்வதற்கான அனுமதி போன்ற சில தளர்வுகளை அளிக்கலாம் எனவும் கவுன்சிலர்கள் என கூறிவருகின்றனர்.

— ஷாகுல்,  படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.