11 வயது சிறுவனுக்கு “சயாடிக் நரம்பு மறு இணைப்பு சிகிச்சை” செய்து திருச்சி அரசு மருத்துவர்கள் சாதனை!
ஆந்திரப் பிரதேச எல்லைக்குப் பக்கத்தில் உள்ள வட சென்னை நாயுடு குப்பத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவனான ஹரிக்கு, திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அரிய சயாடிக் நரம்பு மறு இணைப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக ஹரியின் இடது தொடையின் பின்புறம் ஏற்பட்ட வெட்டு காயத்தால் சயாடிக் நரம்பு பாதிக்கபட்டு , பல மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் திருச்சி திருவரங்கம் மருத்துவமனையில் தலைமை எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் ஜான் விஸ்வநாத் அவர்களிடம் சிகிச்சைக்காக வந்து சேர்ந்தனர்.
மேற்படி சிறுவனை பரிசோத்தித்த மரு.ஜான் விஸ்வநாத் திருவரங்கம் அரசு மருத்துவ மனையிலேயே அறுவை சிகிச்சை அளிக்க முடிவு செய்தார். அதன்படி இந்த சிக்கலான நுண் அறுவை சிகிச்சையை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையிலேயே இன்று முதுநிலை எலும்பியல் மருத்துவர் டாக்டர் ஜான் விஸ்வநாத் தலைமையில் வெற்றிகரமாக செய்து முடிக்க பட்டது.
மூன்று மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையில், நுண்ணோக்கி பெரிதாக்கி மூலம் தலைமுடியிலும் 10-ல் ஒரு பங்கு தடிமன் உள்ள 8-0 ப்ரோலின் அறுவை சிகிச்சை தையல் நூல்களை பயன்படுத்தி பாதிக்கபட்ட நரம்பு பகுதிகளை அகற்றிவிட்டு ஓட்டு நரம்புகள் மூலம் நரம்புகளின் இடைவெளியை நுணுக்கமாக சேர்த்து வெற்றிகரமாக இணைக்கப்பட்டன. இந்த அறுவை சிகிச்சை முதல்வரின் முழுமையான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் (CMCHIS) இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.
“இந்த வகை சயாடிக் நரம்பு ஓட்டு இணைப்புஅறுவை சிகிச்சை மிகவும் அரிதானது, பொதுவாக மிகவும் மேம்பட்ட சிறப்பு உயர் மருத்துவமனைகளில் கூட செய்ய தயங்கும் இந்த சவலான அறுவை சிகிச்சையை சாதரண துணை தாலுக்கா மருத்துவமனையான திருவரங்கம் அரசு மருத்துவமனையிலேயே செய்யபட்டது இமலாய சாதனை யாகும் என்று மருத்துவ வட்டாரங்கள் கூறின. மிக சிக்கலான அறுவை சிகிச்சை என்றாலும் , இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது ஹரி தற்போது உடல்நலம் தேறி வருகிறார். மூன்று மாதங்களில் இயன் முறை பயிற்சிகளுக்கு பின் தொடர்ந்து இயல்பான செயல்பாடுகளை மீண்டும் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை குறித்து திருவரங்கம் அரசு மருத்துவமனையின் தலைமை எலும்பு மூட்டு மற்றும் மறு சீரமைப்பு மருத்துவர் ஜான் விஸ்வநாத் கூறுகையில் இந்த சவலான அறுவை சிகிச்சை மருத்துவமனையில் உள்ள அனைத்து ஊழியர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.
நுண்ணோக்கி பெரிதாக்குவதில் உதவிய கண் மருத்துவ குழுவிற்கு, மயக்க மருந்து குழுவினர் மற்றும் அறுவை அரங்கு செவிலியர் பணியாளர்கள் குழுவினரின் ஆதரவிற்கும் டாக்டர் விஸ்வநாத் தனிப்பட்ட நன்றி தெரிவித்தார். மேலும், இந்த அறுவை சிகிச்சையைச் சிறப்பாக நடக்கச் செய்த மருத்துவமனையின் நிர்வாக குழுவிற்கு, குறிப்பாக அப்போதும் உற்சாகப்படுத்தி ஊக்கம் தரும் மருந்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குனர் மற்றும் திருவரங்கம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவருக்கும் நன்றி கூறினார்.
ஹரியின் சிகிச்சை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை மருத்துவ குழுவின் திறமைக்கும், அர்ப்பணிப்பிற்கும் சான்றாகும். .