சாத்தூர் வெடி விபத்தில் பட்டாசுஆலை அறைகள் வெடித்து வானில் பறக்கும் காட்சி வெளியாகி பரபரப்பு …
சாத்தூர் வெடி விபத்தில் பட்டாசு ஆலை அறைகள் வெடித்து வானில் பறக்கும் காட்சி வெளியாகி பரபரப்பு …
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சிந்தபள்ளி கிராமத்தில் சிவகாசியை சேர்ந்த கந்தசாமி என்பவருக்கு சொந்தமான திருமுருகன் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.மேற்கண்ட ஆலை நாக்பூர் உரிமம் பெற்று 60க்கும் மேற்பட்ட அறைகளுடன் செயல்பட்டு வருகிறது.
வீடியோ லிங்
இந்த ஆலையில் சுமார் 200 மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 28.09.2024 இன்று காலை 6 மணி அளவில் தொழிலாளர்கள் பணிக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு பட்டாசு தயாரிப்பதற்கான
மூலப்பொருட்கள் ஏற்றி வந்த லோடு வேன் வந்துள்ளது.
அதில் மூலப்பொருட்களை இறக்கி வைக்கும் போது ஏற்பட்ட தீ ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வெடி சேமிப்பு குடோன் அருகில் இருந்த வீடுகள் சேதம் அடைந்துள்ளது மேலும் சிவகாசி, சாத்தூர்,நான்கிற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர்.
பட்டாசு ஆலையை சுற்றி உள்ள வீடுகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக சொல்கிறார்கள், தொழிலாளர்கள் பல பாதிப்புகுள்ளாக வாய்ப்பு இருக்கிறது என்கிறார். இது குறித்து இன்னும் முழுமையான தகவல் வெளியாக வில்லை..
அருகில் உள்ள மற்ற அறைகள் அடுத்தடுத்து வெடித்து வருவதால் பட்டாசு ஆலைக்கு உள்ளே மீட்பு பணிக்கு செல்ல முடியாமல் வெளியே நின்று வருகின்றனர்.
– மாரீஸ்வரன்
வீடியோ லிங்