சென்னையிலும் சேவைத் தடம் பதித்த மதுரை டாக்டர் !
சென்னையிலும் சேவைத் தடம் பதித்த மதுரை டாக்டர்!
மதுரை மாநகரில் ( நரிமேடு) மிகவும் புகழ் பெற்ற மருத்துமனையாக இருப்பது சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை. இதன் சி.இ.ஓவாக இருப்பவர் டாக்டர்.சரவணன்.
தனியார் மருத்துவமனை என்றாலும் ஏழைகளுக்கும் வரியோர்களுக்கும் ஆபத்பாந்தவனாக இருக்கின்றது. ‘ மக்கள் மருத்துவர் ‘ டாக்டர். சரவணனின் தயாள குணமும் உயிர் காக்கும் உன்னதமான மனித நேயமும் தான் சரவணா ஆஸ்பத்திரியை நோக்கி அனைவரையும் போகச் செய்கிறது.
ஏழைகள் மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்தின் நம்பிக்கையும் இந்த ஆஸ்பத்திரி தான். திருப்பரங்குன்றம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ வான டாக்டர். சரவணன், சூர்யா அறக்கட்டளை மூலம் தொண்டு நிறுவனமும் நடத்தி வருகிறார். இதன் மூலமாக பலரின் வாழ்க்கையில் வெளிச்சம் பாய்ச்சியுள்ளார்.
இத்தகைய பெருமை வாய்ந்த டாக்டர், இப்போது அதிமுகவில் மருத்துவ அணியின் மாநில இணையச் செயலாளராகவும் நெல்லை நாங்குநேரி தொகுதியின் பூத் கமிட்டித் தலைவராகவும் உள்ளார். மிக்ஜாம் புயலால் சென்னை மக்களின் வாழ்க்கையே ‘ஜாம்’ ஆகிவிட்டது.
அதிமுக சார்பில் பல இடங்களில் நிவாரண உதவி வழங்கினார் எடப்பாடி பழனிச்சாமி. இதன் தொடர்ச்சியாக, அதிமுக செங்கல்பட்டு மேற்கு ( ம) மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், மேற்கு தாம்பரம் முடிச்சூர் அருகில் உள்ள பாரதிதாசன் நகரில் நிவாரண உதவி வழங்குதல் மற்றும் இலவச மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த நிகழ்ச்சிக்காக தனது ஆஸ்பத்திரி செவிலியர்கள், டாக்டர்கள் டீமுடன் சென்னை வந்தார் டாக்டர். சரவணன். எப்போதுமே டாக்டர். சரவணனுடன் இணைந்து பயணிக்கும் உசிலம்பட்டி டாக்டர். விஜயபாண்டியனும் இந்த மக்கள் பணிக்கு அவருடன் கைகோர்த்தார்.
தங்களின் சொந்த செலவில் மதுரையில் இருந்து மருத்துவ டீமை மட்டும் அழைத்து வரவில்லை. 20 லட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்கள், அத்திவாசிய மருந்து மாத்திரைகள், சத்து டானிக்குகளுடன் வந்தனர் டாக்டர்கள் சரவணனும் விஜய் பாண்டியனும்.
இந்த டிசம்பர் 10-ஆம் தேதி நடந்த இந்த மருத்துவ முகாமும் கிடைத்த நிவாரணப் பொருட்களும் அப்பகுதி மக்கள் மனதில் மிக்ஜாம் மிரட்சியைப் போக்கி, மகிழ்ச்சியை வரவைத்து.
– மதுரை மாறன்.