செயின்ட் ஜோசப் கல்லூரியில் பாரதி பிறந்தநாள் விழாப் பேச்சுப் போட்டி !

0

செயின்ட் ஜோசப் கல்லூரியில் பாரதி பிறந்தநாள் விழாப் பேச்சுப் போட்டி

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மற்றும் செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறை இணைந்து பாரதியின் பிறந்தநாளையொட்டி பாரத மொழிகளின் திருவிழா 2023 பேச்சுப் போட்டியை கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடத்திய வருகிறது.

“பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு” என்கிற மையப் பொருளில் நடைபெறும் இந்த பேச்சுப்போட்டியில் செயின்ட் ஜோசப் கல்லூரியின் பல்வேறு துறைகளைச் சார்ந்த இளம் பேச்சாளர்கள் பங்கேற்று, உரையாற்றி வருகின்றனர்.

பாரதி பிறந்தநாள் பேச்சு போட்டி
பாரதி பிறந்தநாள் பேச்சு போட்டி

துறை தலைவர் முனைவர் ஞா‌.பெஸ்கி முன்னிலையில் நடைபெற்று வரும் இப்பேச்சுப்போட்டியில் செயின்ட் ஜோசப் கல்லூரி பணி முறை இரண்டின் மேனாள் துணை முதல்வர்கள் முனைவர் ஜோசப் சகாயராஜ், கல்லூரி நுண்கலைக் குழுவின் துணை ஒருங்களைப்பாளர் முனைவர் வெர்ஜின் பிரேகா ஆகியோர் நடுவர்களாகப் பொறுப்பேற்று, சிறந்த பேச்சாளர்களைத் தெரிவு செய்து வருகின்றனர்.

பாரதி பிறந்தநாள் பேச்சு போட்டி
பாரதி பிறந்தநாள் பேச்சு போட்டி

போட்டி வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூபாய் 5000, இரண்டாம் பரிசு ரூபாய் 3000, மூன்றாம் பரிசு 2000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

போட்டிகளுக்கு பிறகு நடைபெறும் நிறைவு விழாவில் கல்லூரி முதல்வர் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்ற இருக்கிறார்.

செயின்ட் ஜோசப் கல்லூரி பேராசிரியப் பெருமக்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், இளங்கலைத் தமிழ் இலக்கிய மாணவர்கள் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பித்து வருகின்றனர்.

– யுகன் ஆதன்

Leave A Reply

Your email address will not be published.