தடுமாறி தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் – மதுரை தொழில் முனைவோர் கருத்தரங்கு

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

துரை அழகர் கோவில் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இளம் தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியில்,  தமிழக ஆளுநர் R.N. ரவி பங்கேற்று இளம் தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியில் முதலில் தேசிய கீதம் பாட வேண்டிய மாணவிகள் பதற்றத்தில் தடுமாறி தமிழ்த்தாய் வாழ்த்தை பாடிய பிறகு நிறுத்திவிட்டு தேசிய கீதம் பாடிய பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முறையாக பாடினார்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

7000 ஆண்டு பழமையான நகர நாகரிகம் தொட்டு பாரம்பரியம் மிக்க மதுரை மாநகரத்தில் வணிகம் தலைசிறந்து விளங்குவதால் தூங்காநகரம் என்று அழைக்கபடுகிறது.

தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கு
தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கு

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

உலக நாடுகள் இந்தியாவின் தலைமைதுவத்தை உற்று நோக்கி வருகிறது. இளைய தலைமுறையின் புதிய வியூகங்கள், தொழில்துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதனை தொடர்ந்து கருத்தரங்கு கூட்டத்தில் தொழில் முனைவோர்கள் மத்தியில் ஆளுநர் ரவி பேசிய போது இளம் தொழில் முனைவோர்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும்  என்று உரையாடினார்.

இளம் தலைமுறையினர் தங்களது திறன்களை மேம்படுத்தி கொள்ளும்பட்சத்தில் சவால்களை துணிச்சலுடன் எதிர்கொள்வதால் மனஅழுத்தம் ஏற்படுவதை  முழுவதும் கட்டுப்படுத்தலாம்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

தனிமனித முன்னேற்றம் சமுதாய முன்னேற்றமாகி தொடர்ந்து நாட்டின் முன்னேற்ற பாதையாக அமையும். ஆலமரத்தின் சிறு விதை பெரும் மரமாகும் என்பதை போல இளம் வயதினரின் தனிமனித முன்னேற்றம் நாட்டை முன்னேற்றம் அடைய செய்யும்.

மற்றநாடுகளில் ராணுவத்தில் கட்டாயம் பணியாற்ற வேண்டும், நம்நாட்டில் இல்லை என்ற கேள்விக்கு.?

அக்னி வீரர் திட்டத்தின் மூலம் 6 வருடம் ராணுவத்தில் பணியாற்றும் வாய்ப்பை இந்திய மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இளைஞர்கள் இளம் வயதினர் ஒழுக்கம், உடல் ஆரோக்கியம், நேர்மையான சிந்தனை வளர்க்கவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் கேலோ இந்தியாவும் இளைஞர்கள் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள பெரும் பங்கு வகிக்கிறது.  இதன் மூலம் இளைஞர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க உதவுகிறது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். 

மேலும் அரசின் திட்டங்கள், செயல்முறை உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்கள் சமத்துவ பொருளாதாரம் அடைய வழி வகுக்கும். இந்த நல் திட்டங்களை இளம் தொழில் முனைவோர்களின் பயன்படுத்தி இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்ற வேண்டும் என்று உரையாற்றினர்.

 

— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.

 

 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.