திருச்சி –  ”நீட்ஸ் நெட்வொர்க்கின்”  பருவநிலை மாற்றம் பற்றிய கருத்தரங்கு மற்றும் ஆலோசனை கூட்டம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி –  ”நீட்ஸ் நெட்வொர்க்கின்”  திருச்சி மத்திய மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம்   30. 11.2024  அன்று சனிக்கிழமை காலை 9: 30 மணி முதல் மாலை 4: 30 மணி வரை திருச்சி மேலப்புதூர் புனித அன்னாள் கான்வென்டில் உள்ள செயின்ட் ஜான்டி பிரிட்டோ தொழில் பயிற்சி அரங்கில் உலகளாவிய சவால்களில் ஒன்றான பருவநிலை மாற்றம் பற்றி ஒருநாள் கருத்தரங்கு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கருத்தரங்கு இக்கூட்டத்தில் நீட்ஸ் நெட்வொர்க்கின் மாநில தலைவர் மற்றும் நிறுவனர் ரோசாரியோ அவர்கள் தனது சிறப்புரையில் மண்டல மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் பங்களிப்பு, அந்தந்த மாவட்ட தொண்டு நிறுவன தலைவர்களின் ஒத்துழைப்பின்  அடிப்படையில் தான் நீட்ஸ் நெட்வொர்க் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று விவரித்தார்.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

மேலும் அவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக தொண்டு நிறுவனங்கள் பணி செய்யும் தளங்களில் செய்ய வேண்டிய கடமைகள் பற்றியும், மத்திய மாநில அரசுகளுடன் இணக்கமான சூழலை ஏற்படுத்தி கிராம மக்களோடு இணைந்து பணி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கருத்தரங்கு திருச்சி பாலாஜி கேட்டரிங் சுப்பிரமணியன் அவர்கள் தலைமையற்றார். அவர் தனது தலைமை உரையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றியும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது பற்றியும் புகையினால் ஏற்படும் பாதிப்பு பற்றியும் பேசினார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

முன்னாள் மாவட்ட வன பாதுகாப்பு அதிகாரி சுந்தரராஜு அவர்கள் தனது மைய கருத்துறையில் காலநிலை மாற்றம் என்றால் என்ன அதற்கான காரணங்கள் அதனால் ஏற்படும் விளைவுகள் தற்பொழுது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் பாதிப்புகள் போன்றவற்றைப் பற்றி தெளிவாக விளக்கினார். மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு வனத்துறை மூலம் அவர் எடுத்த முயற்சிகளை தன்னுடைய அனுபவங்கள் மூலம் பகிர்ந்து கொண்டார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கருந்தரங்குதிருச்சி மத்திய மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன் அவர் தனது தொடக்க உரையில் மண்டல வாரியாக நீர் நெட்வொர்க் ஒருங்கிணைத்ததின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ராமு அவர்கள் நீட்ஸ் நெட்வொர்க்கின் நோக்கம் எதிர்கால திட்டம் பற்றியும் கிராமிய பாடல்கள் பாடி உற்சாகப்படுத்தினார்.

கருந்தரங்குஇக்கூட்டத்தில் நீட்ஸ் நெட்வொர்க்கின் ஆறு மண்டல  ஒருங்கிணைப்பாளர்கள்  எட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திருச்சி ஆனந்தி, பெரம்பலூர் ராமச்சந்திரன், அரியலூர் ஜான் திருநாவுக்கரசு, புதுக்கோட்டை கலாவதி, கரூர் நாகலட்சுமி நாமக்கல் பூங்கோதை, திண்டுக்கல் சிவமுருகேசன் கள்ளக்குறிச்சி சகாயநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  திருச்சி கரூர் புதுக்கோட்டை அரியலூர் பெரம்பலூர் கள்ளக்குறிச்சி நாமக்கல் திண்டுக்கல் ஆகிய எட்டு மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொண்டு நிறுவன தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். 

இக்கூட்டத்தில் தொண்டு நிறுவன தலைவர்கள் மாவட்ட வாரியாக தங்கள் பகுதிகளில் எதிர் கொள்ளும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை குழு விவாதம் செய்து அறிக்கை தயாரித்து நீட்ஸ் நெட்வொர்க்கின் நிறுவன தலைவர் அவர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கருத்தரங்கு இறுதியாக நீட்ஸ் நெட்வொர்க்கின் தலைவர் மரக்கன்று நட்டு சிறப்பித்தார். திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தி வரவேற்றார். அரியலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான் கே திருநாவுக்கரசு நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.