எதிலயும் சிக்காத 80s – 90s கிட்ஸ் நியோமேக்ஸில் வீழ்ந்த கதை !

1

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

யப்பா .. யப்பப்பா நீங்க நினைக்குற மாதிரி நாங்க இந்த சமுதாயத்துல சாதாரணமா கடந்து வருலப்பா… கொஞ்சம் நஞ்சமா  எங்கள ஏமாத்த நினைச்சாங்க !

80s & 90s கிட்ஸ் எங்க சோதனைகள்….

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

டேட்டா எண்டரி பண்ற வேலை, மொதல் மாசம் 1000 ரூபா கட்டி டேட்டா வாங்கிட்டா போதும், அப்பறம் லட்ச லட்சமா கொட்டும் …

நியோமேக்ஸ் மோசடி
நியோமேக்ஸ் மோசடி

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

MLM ஆம்வே ஃபர்ஸ்ட் நீங்க சேரனும், உங்களுக்கு கீழ 5 பேர சேர்க்கனும், அவங்க அப்படியே சேத்திகிட்டு வந்தா 6 மாசத்துல நீங்க கோடீஸ்வரன்….

அனுபவ் பிளான்டேஷன், நீங்க பணம் குடுத்தா தேக்கு மரமா வரவு வைப்போம், அதுல கொட்டும் பாருங்க கோடிகள்….

சீட்டு கம்பெனிகள் … நீங்க டெபாசிட் பண்ற பணத்துக்கு 40% வட்டி தருவோம். நீங்க சேர்த்து விடற ஒவ்வொருவருக்கும் உங்களுக்கு கமிசன் உண்டு, வட்டி வாங்கியே சில பல கோடிகள் பார்க்கலாம்….

குலுக்கல்ல உங்களுக்கு பரிசு விழுந்து இருக்கு, வந்து வாங்கிட்டு போங்கன்னு, குடும்பத்தோட கூப்பிட்டு உக்கார வச்சு, எங்க ரிசார்ட் கிளப்ல சேர வருஷம் 2 லட்சம் மட்டும்தான், சேந்தா வருசத்துல 5 நாள் ஃப்ரீயா தங்கலாம்ன்னு உருட்டுன உருட்டுல…

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

நியோமேக்ஸ் மோசடி
நியோமேக்ஸ் மோசடி

ஈமு கோழி, 10,000 பணம் கட்டிணா உடனே ஒரு ஈமு கோழி குடுப்போம், நீங்க வளத்தி எங்க கிட்டயே குடுத்தா கிலோ 1000 ரூபாய்க்கு வாங்கிக்குவோம், முட்டை ஒவ்வொண்ணும் 500 ரூபா… சீக்கிரம் கோடீஸ்வரன் ஆக, ஈமு கோழிப்பண்ணை.

ஹெர்பா லைஃப், இது வெறும் 2000 ரூபாதான், வாங்கி குடிச்சா ஒரு மாசத்துல 200 கிலோ குறையும், நீங்க யாரையாவது கூட்டிட்டு வந்து சேர்த்து விட்டா உங்களுக்கு டிஸ்கவுன்ட்….

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

டப்பர்வேர் வித்த குரூப், ஆம்வே பேஸ்ட் வித்த குரூப், ஓரிபிளேம் பொருள் வித்தவன், கோல்ட் குவிஸ்ட்ல தங்கம் வாங்கின குரூப், சஹாரால இடம் வாங்கினவன், சீட்டு போட்டவன், கலைமகள் சபால இடம் வாங்க காசு குடுத்தவன், டேபிள் மேட் வித்தவன்னு எத்தனை பேர், எத்தனை கண்ணிவெடி, எத்தனை ப்ராடுக….

இத்தனை பேரையும் தாண்டி வந்தவனுகதான் 80s & 90s நாங்க.

என்னமோ , எப்படியோ எல்லாத்துலேயும் சாமர்த்தியமா மாட்டாமல், கடைசியில் நியோமேக்ஸ் ல வந்து மாட்டிக்கிட்டோம்…!. பொறி வச்சு புடிச்சுட்டாங்க..! ஒண்ணுமே புரியல …

 

— ரவி, கும்பகோணம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

1 Comment
  1. Spmu says

    எனக்கு 4.5 லட்சம் தரணும் ramanathpuram டீம் ஏஜென்ட் முத்துராஜா உசிபுளி

Leave A Reply

Your email address will not be published.