மதுரைமீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியின் விழிப்புணர்வு கருத்தரங்கு !
மதுரைமீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் நாட்டு நலப் பணி திட்டம் சார்பாக நேரு யுவ கேந்திரா இளைஞர் நலத் துறை மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் தன்னார்வ தொண்டு சேர்க்கை மற்றும் மத்திய அரசின் இளைஞர் நலத்திட்டங்களை சமூக ஊடகங்களின் மூலம் கையாளுதல் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு மூன்றாம் ஆண்டு மாணவியர்களுக்கு நடத்தப்பட்டது.
கல்லூரி முதல்வர் முனைவர்வானதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மூன்றாம் ஆண்டு மாணவியர்கள் பங்கு பெற்று தங்களை தன்னார்வ தொண்டர்களாக இணைத்தனர் தேனி மதுரை நேரு யுவ கேந்திரா இளைஞர் நலத் துறை மற்றும் விளையாட்டுத் துறை இணை இயக்குனர் செந்தில் குமார் மற்றும் Multi skill trainer மீனாட்சி ஆகியொர் சிறப்புரையாற்றினர்.
டுவிட்டர் செயலி குறித்தும், அதில் வேலை வாய்ப்பு சார்ந்த உபயோகமான தகவல்கள் தரும் பக்கங்களான NYKA_India, NYK_Madurai, PMO_India, SAI ( Soprt Authority of India) ஆகியவற்றை தொடருமாறு மாணவிகளுக்கு அறிவுறுத்தினர். இப்பக்கங்கள் எவ்வாறு மாணவிகளுக்கு உதவுகிறது எனவும் விளக்கினார். மாணவிகள் அனைவரும் டுவிட்டர் செயலியை தமது கைபேசியில் நிறுவி மேற்சொன்ன டுவிட்டர் பக்கங்களை தொடர்ந்தனர் . இந்நிகழ்கச்சியில் , நாட்டு நலப் பணி திட்ட அலுவலர்கள் பூமா தேவி, ஜெயகுமாரி ஞானதீபம், ரேணுகா, உஷா புவனேஷ்வரி, சுதா ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தினர்.