மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் – இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு !
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று12.12.2022 வருகை தந்தார். தொடர்ந்து கோவிலில் வளாகத்தில் உள்ள கோவில் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் கோவில் பணிகள் குறித்தும், நிர்வாக ரீதியான விவரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து கோவிலில் பராமரிக்கப்பட்டு வரும் யானை பார்வதிக்கு கண்ணில் வெண்புரை பாதிப்பால் சிகிச்சைப்பெற்று வரும் பார்வதி யானை மகாலில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
தற்போது சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து யானையின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக குளித்து விளையாடும் வகையில் யானை மஹால் பகுதியில் குளியல் தொட்டி 23.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளது.
தொடர்ந்து குளியல் தொட்டியில் யானை சிரமமின்றி இறங்க சாய்தளம் அமைத்து குளியல் தொட்டி தயார் நிலையில் உள்ளதனையும் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்ததார்.
தொடர்ந்து யானை பார்வதியின் உடல் நலம் குறித்து யானை பாகனிடம் கேட்டறிந்து, யானைக்கு பழங்கள் வழங்கினார். மேலும் யானை மஹால் சுற்றிலும் அசுத்தமாக குப்பைகள் இருந்ததால் யானையின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு அவ்வப்போது rகுப்பைகளை அப்புறப்படுத்தி தூய்மையாக பராமரிக்க அறிவுறுத்தினார்
-ஷாகுல்