செங்கல் காளவாசல் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் வருவாய் ஆய்வாளர் மீது புகார் !

0

செங்கல் காளவாசல் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் வருவாய் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, கடமலை மற்றும் மயிலை ஒன்றிய பகுதியில் சுமார் 71 காளவாசல்கள் இயங்கி வருகிறது.

இந்த செங்கல் காளவாசல்களில் மயிலாடும் பாறை வருவாய் ஆய்வாளர் உரிய அனுமதியின்றி கனிம வளங்கள் கொள்ளை அடிப்பதாக கூறி மாதம் தோறும் 10 ஆயிரம் ரூபாய் கட்டாய வசூல் வேட்டை நடத்தி வருகிறார்.

மேலும் காளவாசல் உரிமையாளர் மண் அள்ள உரிய பாஸ் அனுமதி இல்லாத காரணத்தால் காளவாசல் பகுதியில் மண் அள்ளி செங்கல் தயாரித்து வருகிறார்கள்.

மேலும் களவாசல் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் வருவாய் ஆய்வாளராக இரண்டு வருடங்கள் கனிம வளத்துறையில் பணியாற்றிவர்.

எனவே உடனடியாக 71 காளவாசல் உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் வருவாய் ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவரிடம் முரளி தரனிடம் சிவசேனா மாநில தலைவர் குரு ஐய்யப்பன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.