7 முதல்வர்களை பார்த்தவன் … என்கிட்டேயேவா?
இந்தியாவின் வட மாநிலங்களைப்போல, இந்தமுறை தமிழகத்தில் எப்படியேனும் கால் வைத்துவிட வேண்டுமென்ற கணக்கில், பாஜக கைவசம் வைத்திருந்த ராஜதந்திரங்களில் ஒன்றுதான் திருப்பரங்குன்றம் விவகாரம் என்கிறார்கள். மோடியை கூட நேரில் கூட்டிவந்து திருப்பரங்குன்றத்தில் திருநீறு பூச வைத்தும் பார்த்தார்கள். ஆனாலும், போட்டியிடுவதற்கே கூட திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியை, பாஜக-வால் கைப்பற்ற முடியவில்லை என்பதுதான் ஹைலைட். அந்தளவுக்கு அதிமுகவில் பாஜகவுக்கே டஃப் கொடுத்தது வேறு யாருமல்ல, ராஜன் செல்லப்பாவேதான்.

இவர், இப்போதைய இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., நத்தம் விஸ்வநாதன் போன்ற பெருந்தலைகள் எல்லாம் சாதாரண கீழ்மட்ட கட்சிப்பதவிகளில் இருந்த சமயத்தில், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் அதிமுக செயலாளராக கெத்தாக வலம்வந்தவர். அதே அரசியல் கெத்தில்தான், கடந்த எம்.பி. தேர்தலில் தனது மகன் ராஜன் சத்யனுக்கு சீட் வாங்கியிருக்கிறார். இப்போது, மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியை தக்க வைத்திருக்கிறார்.
”7 முதல்வரை பார்த்தவன் நான். என்கிட்டேயாவா? எவனா இருந்தாலும் ஓட விட்ருவேன்னு” னு தொகுதிக்காக வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு களமிறங்கி கைப்பற்றியும்விட்டார் என்கிறார்கள், மதுரை வாசிகள்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.