அணில் ஏன் அங்கிள் அங்கிள் என கத்துது ? சீமான் செம கலாய் !
மதுரை ஆணையூர் பகுதியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ”புதிய மசோதா அனைவருக்கும் பொருந்தும் என்று கூறுகிறார்கள். குஜராத் கலவரத்திற்கும் பாஜகவிற்கும் தொடர்பில்லை என்று கூறுகிறார். அதை நீங்கள் ஏற்கிறீர்களா? ED ரெய்டு செய்வது எந்த கட்சியில்? எலக்ட்ரோ பாண்டு அதிகம் பெற்றது எந்த கட்சி? Tvk மாநாட்டில் மரணம் என்பதை கட்சி மரணம் என்று பார்க்க முடியவில்லை.
பீகார் முதல்வர் செல்வது குறித்து ஈரோட்டில் காசு கொடுக்கும்போது தடுக்காத தேர்தல் ஆணையம். கள்ள ஓட்டு போடும் போது தடுக்காத தேர்தல் ஆணையம். இந்த விஷயத்தில் எப்படி நேர்மையாக இருக்கும்? மொத்தமாக தவறாக தான் இருக்கும். வாக்கு சீட்டு முறையை பின்பற்ற வேண்டும். இந்த மெஷினை ஜப்பான் நிறுவனம் தயாரித்து கொடுக்கிறது. ஆனால், ஜப்பானில் எந்திர வாக்குப்பதிவா நடக்குது. பின் எதற்கு 42 நாள் வாக்குப்பதிவு மெஷினை உள்ளே வைக்கிறீர்கள். போலீசு அதற்கு பாதுகாப்பு. உன்னிடம் சம்பளம் வாங்கக்கூடிய போலீஸ் தான் பாதுகாப்புக்கு நிற்கிறார்கள். அவன் வாக்கு பெட்டியை மாற்ற மாட்டானா?
விஜய் மாநாட்டிற்கு வந்த கூட்டம் குறித்த கேள்விக்கு …
விஜய் மாநாட்டிற்கு வந்த கூட்டத்தை பார்க்காதீர்கள் நான் வைத்திருப்பது விதை நெல் . பதறு கிடையாது. பிப்ரவரி 7ஆம் தேதி நாம் தமிழர் கட்சி மாநாடு திருச்சியில் வைக்கிறேன். அதை பாருங்கள் மாநாட்டில் எவ்வாறு ஒரு தலைவன் உரை நிகழ்த்துவேன் என்று அதை பாருங்கள். மாநாடு எப்படி இருக்கும் என்பதை பாருங்கள்.
மாநாட்டில் மறைந்த தலைவர்கள் பற்றி விஜய் பேசியது குறித்த கேள்விக்கு ..
விஜயகாந்த் பற்றி பேசுவதனால், வாக்குகள் கிடைத்து விடுமா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள். மக்களுக்கு தெரியும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று. புயல் சுனாமியே வந்தாலும் எனது தம்பிகள், தங்கைகள் தாய்மார்கள் என்னுடன் நிற்பார்கள் என்றார்.

முதல்வர் வெளிநாடு முதலீடு ஈர்க்க செல்கிறார் என்ற கேள்விக்கு …
முதலீடுகள் ஈர்க்க சென்றால், ஏற்கனவே ஈர்க்க சென்றது என்ன ஆனது எனக்கூறினார்.
கூட்டணி குறித்த கேள்விக்கு, தனியாகத்தான் நிற்பேன் கூட்டணி வைத்து ஏதாவது பிரச்சனையை இதுவரை சரி செய்து உள்ளார்களா? என்ன சாதித்துள்ளார்கள் என்றார்.
முதல்வராக வந்தால் முதல் கையெழுத்து அரசு பள்ளி கல்லூரிகளில் படித்து வருபவர்களுக்கு அரசு வேலை என்பதுதான் இது போல 100 கையெழுத்து போட்டு நாட்டின் தலை எழுத்தை மாற்ற வேண்டும்.
கட்சி அலுவலகத்தில் வைத்து காதல் திருமணம் குறித்த கேள்விக்கு …
கட்சி ஆபீசை கல்யாண மண்டபமாக மாற்றி வருகிறார்கள். பிஜேபி ஆபீஸில் இஸ்லாமிய ஆணையும் இந்து பெண்ணையும் திருமணம் முடித்து வைப்பார்களா ? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் உயர்ந்த வகுப்பினருக்கும் தாழ்ந்த வகுப்பினருக்கும் கல்யாணம் நடக்க வைப்பார்களா? என்றார்.

விஜய் அங்கிள் என்று மாநாட்டில் பேசியது குறித்த கேள்விக்கு …
அணில் ஜங்கிள் ஜங்கிள் என்று அழைக்கப்பட வேண்டும். அங்கிள் அங்கிள் என்று ஏன் கூப்பிடுகிறது என்று தெரியவில்லை எனக் கூறினார்.
முதல்வர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறாதது குறித்த கேள்விக்கு ..
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிப்பது அவரவருடைய விருப்பம். சகிக்க முடியாத சொத்து வரி மின் கட்டண உயர்வு விலைவாசி உயர்வு பற்றி பேசுவோம் என்று பேசினார்.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.