அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு வாங்குபவர்களுக்கு சலுகை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு வாங்குபவர்களுக்கு சலுகை

பொது மக்கள் தற்போது செல்போன்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில், “யுடிஎஸ் மொபைல்” அப்ளிகேஷன் இந்திய அரசின் ‘டிஜிட்டல் இந்தியா’ முன்முயற்சியின் ஆதரவுடன் தொடங்கப்பட்டது
UTS(Unreserved Ticketing System ) மொபைல் செயலியானது, முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகள், பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் வாங்க மற்றும் சீசன் டிக்கெட்டுகளை புதுப்பிக்க இப்போது இந்தியா முழுவதும் பயன்படுகிறது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

UTS onmobile’ பயன்படுத்த மிகவும் எளிமையானது. பயன்படுத்த தனி கட்டணம் எதுவுமில்லை UTS மொபைல் செயலியை Play/App ஸ்டோரிலிருந்து எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முதலில் பயணி தனது மொபைல் எண், பெயர், பிறந்த தேதி, கடவுச்சொல், பாலினம் ஆகியவற்றைக் கொடுத்து UTS செயலியில் பதிவு செய்ய வேண்டும்வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டவுடன், பயணிகளுக்கு பூஜ்ஜிய இருப்புடன் ரயில்வே வாலட் (R-வாலட்) தானாகவே உருவாக்கப்படும்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

Madurai UTS
Madurai UTS

https://www.livyashree.com/

R-Wallet ஐ உருவாக்க கூடுதல் செலவு இருக்காது.R-Wallet ஐ UTS செயலி மூலமாகவோ அல்லது பயணசீட்டு அலுவலகத்திலோ விருப்பதின் அடிப்படையில் ரீசார்ஜ் செய்யலாம்R-வாலட்டை ரீசார்ஜ் செய்யும் போது ரீசார்ஜ் மதிப்புக்கு 3% போனஸ் வழங்கப்படுகிறது. மேலும் ஜிபே, யூபிஐ போன்ற மிண்ணனு பணபரிவர்த்தனை வசதிகளையும் பயன்படுத்தி பயணச்சீட்டு பதிவு செய்யலாம்பயணம் துவங்கும் ரயில் நிலையம், செல்ல வேண்டிய ரயில் நிலையம், ரயில் வகை மற்றும் பணம் செலுத்தும் முறை போன்றவற்றை நாமே உள்ளீடு செய்து எளிதாக பயணச்சீட்டு பெறலாம்.

பயணிகள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, R- வாலட், நெட் பேங்கிங் மெக்கானிசம் மற்றும் UPI மூலம் பணம் செலுத்தலாம்.  இந்த செயலி மூலம், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை இருப்புப்பாதையிலிருந்து 15 மீட்டருக்கு அப்பால் இருந்து பெற முடியும்ஆனால் ரயில் நிலைய எல்கைக்குள் வந்த பிறகும் யுடிஎஸ் மொபைல் செயலியை பயன்படுத்தி ரயில் நிலையத்தில் ஒட்டப்பட்ட QR குறியீடு ஸ்கேன் செய்து, தேவையான தகவல்களை உள்ளிட்டு பயணசீட்டு பெறலாம் 50 சதவீத பயணிகள் முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டு, பிளாட்பார்ம் மற்றும் சீசன் டிக்கெட்டுகளை இந்த செயலி மூலம் நீண்ட நேரம் காத்திருக்காமல்சிரமமின்றி பயணச்சீட்டு பதிவு செய்கிறார்கள். மீதமுள்ள 50 சதவீத பயணிகளும் இந்த எளிய பயணச் சீட்டு பதிவு செய்யும் முறைக்கு மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.