திட்ட பணிகள் குறித்து ஆலோசனையில் அதிரடியாக இறங்கிய துணை முதல்வா் !
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மதுரை மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை.
இரண்டு நாள் பயணமாக மதுரை வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்றைய தினம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து இன்றைய தினம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மதுரை மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக மதுரை மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட கட்டுமான பணிகள் மற்றும் அனைத்து துறை சார்பில் பொதுமக்களிடம் பெறப்பட்டு வரும் கோரிக்கை மனுக்கள் மற்றும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துறை ரீதியான அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மாநகராட்சி ஆணையர் சித்ராவிஜயன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், தங்க தமிழ் செல்வன், காவல்ஆணையர் லோகநாதன் உட்பட அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.