‘மைனே பியார் கியா’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
அறிமுக இயக்குநர் ஃபைசல் எழுதி இயக்கும் ‘மைனே பியார் கியா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்போது ரிலீஸ் ஆகியுள்ளது.இப்படத்தை ஸ்பைர் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சஞ்சு உன்னிதன் தயாரித்திருக்கிறார். ஹிர்து ஹாரூன், பிரீத்தி முகுந்தன், அஸ்கர் அலி ,மிதுன், அர்ஜு , ஜெகதீஷ், முஸ்தபா மற்றும் ஜெரா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘மந்தாகினி’ எனும் படத்தை தொடர்ந்து ஸ்பைர் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் இரண்டாவது திரைப்படம் இது.

‘முரா’ எனும் வெற்றி படத்தினை தொடர்ந்து நடிகர் ஹிர்து ஹாரூன் ‘மைனே பியார் கியா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். தமிழில் ‘ஸ்டார்’ மூலம் முகம் தெரிந்த ப்ரீத்தி முகுந்தன் இப்படத்தின் மூலம் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஜியோ பேபி, ஸ்ரீகாந்த் வெட்டியார், ரெடின் கிங்ஸ்லி, பாபின் பெரும்பில்லி, திரி கண்ணன், மைம் கோபி, குத்து சண்டை வீரர் தீனா, ஜனார்த்தனன் , ஜெகதீஷ், ஜிவி ரேக்ஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையை இயக்குநர் பைசல், பில்கெஃப்சல் என்பருடன் இணைந்து எழுதி இருக்கிறார். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகிறது ‘மைனே பியார் கியா ‘.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
டெக்னீஷியன்கள்
ஒளிப்பதிவு:டான் பால். பி ஒளிப்பதிவு, இசை :எலக்ட்ரானிக் கிளி, எடிட்டிங்: கண்ணன் மோகன், ஆர்ட் டைரக்டர்: சுனில் குமரன், எஸ்கியூடிவ் புரொடியூஸர்:பினு நாயர், புரொடக்சன் கண்ட்ரோலர்கள்: சிஹாப், வெண்ணிலா.
— மதுரை மாறன்.