அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம் – மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

0

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தோறும் ரூ.2,000/- பராமரிப்பு உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், அறிவுசார் குறைபாடுடைய (Intellectual Disability), 75% க்கு மேல் கை, கால் கடுமையாக பாதிக்கப்பட்ட(Intellectual Disability), தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட (Intellectual Disability), தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த (Intellectual Disability), புற உலகு சிந்தனையற்ற மதி இறுக்கமுடைய (Intellectual Disability), மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்கின்சன் நோய், தண்டுவட மரப்பு நோய் ஆகிய நாட்பட்ட நரம்பியல் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு (Spinal Card Injured, Parkinson’s Disease, Chronical Neurological Conditions) பராமரிப்பு உதவித் தொகை மாதம் ரூ.2,000/- வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

பராமரிப்பு உதவித் தொகைமேற்காணும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் மாற்றுத்திறனாளிகள், தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை (UDID), பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாற்றுத்திறனாளி ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் துவங்கப்பட்ட வங்கிக்கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன், அருகில் உள்ள தமிழ்நாடு இ-சேவை மையம் வாயிலாக https://www.tnesevai.tn.gov.in/citizen/Registration.aspx என்ற இணையதள முகவரியில், பராமரிப்பு உதவித்தொகை (Maintenance Allowance) என்ற பிரிவில் விண்ணப்பத்திட வேண்டும்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

வருவாய்த்துறையின் வாயிலாக சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1500/- உதவித்தொகை பெற்று வரும் மேற்கண்ட மாற்றுத்திறனாளிகள் தங்களின் விருப்பத்தின் பேரில் ரூ.2000/- உதவித்தொகை பெற்றிட இணைய வழியாக விண்ணப்பித்திடவும், மேலும் விபரங்களுக்கு இவ்வலுவலக முகவரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட நீதிமன்ற வளாகம், கண்டோன்மென்ட், திருச்சிராப்பள்ளி – 620001 அல்லது அலுவலக தொலைபேசி எண் : 0431-2412590 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.