அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மணிப்பூரின் அமைதியை மீட்டெடுங்கள்! ஊடகத்திற்கு அங்கே வழி விடுங்கள்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க

மணிப்பூரின் அமைதியை மீட்டெடுங்கள்! ஊடகத்திற்கு அங்கே வழி விடுங்கள்!
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பற்றியெறிந்த மணிப்பூர், தற்போது பதட்டத்தின் கீழ் இருத்தப்பட்டிருக்கிறது. ஊடகங்களை கூட உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆதரவு – எதிர்ப்பு என்று விதவிதமான வீடியோக்கள் வரைமுறையற்ற சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு நாடு முழுவதும் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், “ மணிப்பூரின் அமைதியை மீட்டெடுங்கள்! ஊடகத்திற்கு அங்கே வழி விடுங்கள்! ” என்ற வேண்டுகோளோடு செய்தியறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது, தமிழ்நாட்டு பத்திரிகை அமைப்புகளின் பேரமைப்பான (CHENNAI PRESS CLUB) சென்னை பிரஸ் கிளப்.

சென்னை பிரஸ் கிளப்-பின் சார்பில் அதன் தலைவர் அ.செல்வராஜ், மற்றும் பொதுச்செயலாளர் ச.விமலேஸ்வரன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

”புராதன பெருமை கொண்ட வடகிழக்கு மாகாணமான மணிப்பூரில் செல்வாக்கு மிக்க மெய்தேய் இன மக்களுக்கும், சிறுபான்மை குக்கி இன மக்களுக்கும், 2 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் உள்நாட்டு கலவரத்தின் சில வீடியோ பதிவுகள் ஒட்டுமொத்த இந்தியாவையும் கலங்கடித்து வரும் நிலையில், அக்கலவரத்தை நிறுத்தக்கோரி அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை குரல் கொடுக்காதவர் எவரும் இருக்க முடியாது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஊடகத்திற்கு அங்கே வழி விடுங்கள்
ஊடகத்திற்கு அங்கே வழி விடுங்கள்

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

மேலும், மணிப்பூரில் இன்றுவரை நடந்து வரும் இரு பிரிவினருக்குமான அந்த மோதலில் படுகாயம் அடைந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையும், குற்றுயிரோடு மருத்துவமனைகளிலும், முகாம்களில் அடைந்து கிடப்பவர்களின் எண்ணிக்கை குறித்தும் இதுவரை எந்தவொரு தகவல்களும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், கலவரத்தை தடுத்து நிறுத்தி அங்கு அமைதியை மீட்டெடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளும் முழுமையாக வெளியில் தெரியாமலேயே உள்ளது. இதற்கு, கடந்த சுமார் 3 மாதங்களாக அங்கு நிலவும் இணையதள முடக்கம் ஒரு காரணம் என்பதோடு, ஊடகத்தினர் செய்தி சேகரிக்க அங்கு அனுமதிக்கப்படுவதில்லை என்பதும் முக்கிய காரணம். இதனால், வதந்திகளும் பதட்டமும் நாடு முழுக்க தொக்கி நிற்பதை யாரும் மறுக்கவும் முடியாது.

எனவே, இந்த பதட்ட சூழலை கருத்தில் கொண்டு தற்போது மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்தை விருப்பு வெறுப்பற்று இரும்புக்கரம் கொண்டு உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டுமாய் ஒன்றிய அரசுக்கும், அரசின் அத்தகைய நடவடிக்கைகளுக்கு அரசியல் சாயம் ஏதுமின்றி ஒத்துழைப்பு நல்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கும் தமிழ்நாட்டு பத்திரிகை அமைப்புகளின் பேரமைப்பான CHENNAI PRESS CLUB, மணிப்பூரில் தடை செய்யப்பட்டுள்ள இணையதள வசதிகளை உடனடியாக வழங்குமாறும், பத்திரிகை மற்றும் ஊடகத்தினருக்கு அங்கு செய்தி சேகரிக்க அனுமதியும், உரிய பாதுகாப்பும் வழங்குமாறும் கோரிக்கை விடுக்கிறது.”

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.