2021 அரசியல் சீக்ரெட் – சீமானுடன் கைகோர்க்கும் கமல், திரைமறைவு அதிரடி ! !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

2021 அரசியல் சீக்ரெட் – சீமானுடன் கைகோர்க்கும் கமல், திரைமறைவு அதிரடி !

 

திரைத் துறையைப் பொருத்தவரை கமல் ஒரு உச்சபட்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார். தமிழகத் திரை உலகை கடந்து, இந்தியக் திரையுலகிலும் தன்னை தனி அடையாளத்துடன் தன்னை நிலைநிறுத்தி இருக்கிறார் நடிகர் கமலஹாசன். சிறு வயதிலிருந்தே திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய கமலஹாசன் பல்வேறு நேரங்களில் அரசியல் கருத்துக்களை பேசியும், ட்விட்டரில் பதிவு செய்தும் வந்து உள்ளர். அவருடைய திரைப்படமான தசாவதாரம் வெளியாகும் போது ஏற்பட்ட சர்ச்சை சிறுபான்மை இன மக்களுக்கும் அவருக்கும் ஒரு பிளவை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழகத்தின் இருபெரு அரசியல் ஆளுமைகளாக இருந்த திமுக தலைவர் கலைஞரும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் மறைந்த பிறகு ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை ஆழமாக வெளிப்படுத்தத் தொடங்கினார்.. ரஜினி அரசியலுக்கு வந்துவிடுவார் என்று எண்ணிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று பிப்ரவரி 21. 2018 மதுரையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தி அரசியலில் குதித்தார். மேலும் சிறுபான்மையினருக்கும் தனக்குமான உறவை பலப்படுத்தும் விதமாககலாம் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கினார் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

மேலும் கமலஹாசன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு சென்னை, கோவை மற்றும் தமிழகம் முழுவதும் கணிசமான வாக்குகளைப் பெற்று தன்னை அரசியலில் நிலை நிறுத்திக் கொண்டார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

நடிகர் கமலஹாசனின் அரசியல் பயணம் இவ்வாறு இருக்க நடிகர் சீமான், கமலஹாசனுக்கு முன்பே அரசியலில் இறங்கிவிட்டார். நடிப்பில் கமலஹாசன் சீனியர் ஆக இருக்கலாம், அரசியலில் சீமான் தான் சீனியர். மேலும் சீமான் தமிழகம் முழுவதும் தனக்கென ஒரு தனி பட்டாளத்தையே உருவாக்கி இருக்கிறார். திரைத்துறையில் ஒரு மிகப்பெரிய கதாநாயகனாக இல்லாவிட்டாலும் அரசியலில் அவர் பேச்சால் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் சீமானைப் பற்றி பேச்சு இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இவ்வாறாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன், இருவரின் அரசியல் பயணங்கள் அமைந்துள்ளது. மேலும் வரக்கூடிய 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஒரு குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை பெற்றுவிட வேண்டும். சட்டமன்றத்திற்குள் ஒரு கணிசமான தொகையில் ஆவது தன்னுடைய கட்சியின் சார்பில் ஆட்களை கொண்டு செல்ல வேண்டும் என்று இருவரும் முனைப்பு காட்டி வருகின்றனர்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

இந்த நிலையில் நடிகர் கமலஹாசன் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியோடு தேர்தலை சந்திக்க உள்ளதாக அறிவித்து செயல்பட்டு வருகிறார். இதற்காக பல்வேறு அரசியல் கட்சியின் மிக முக்கிய நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையை மறைமுகமாக நடத்தி வருகிறார்கள் மக்கள் நீதி மையத்தினர்.
இந்த நிலையில்தான் சீமான், கமலஹாசனை ஒரு தமிழர் என்பதால் அவருடைய அரசியல் பயணத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று பேசியிருந்தார்.
இதுவே இருவருக்குமான முதல்கட்ட அரசியல் நகர்வாக கருதப்பட்டது.

இந்தநிலையில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சியுடம் கூட்டணி அமைத்து, தேர்தலில் களம் காண மறைமுகமாக பேச்சுவார்த்தை நடந்து உள்ளதாக மக்கள் நீதி மையத்தின் நிர்வாகிகள் கூறுகின்றனர்.

மேலும் இருவரும் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திப்பது மட்டுமல்லாமல் மற்றும் சில மிக முக்கிய பிரபலங்களை கொண்ட அரசியல் கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்தித்தால் குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதியை கண்டிப்பாக வெல்லமுடியும் என்ற ப்ளானோடு இருக்கிறாராம் கமலஹாசன்.

கமலஹாசன் உள்ளிருந்து பணியை தொடங்க, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியில் இருக்கக்கூடிய கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலையை தொடங்கி விட்டாராம். அப்படியாக தமிழகத்தில் ஒரு இஸ்லாமிய கட்சியின் மிக முக்கிய நிர்வாகியை தொடர்பு கொண்டு நீங்கள் இந்த முறை திமுகவோடு சென்றாள் உங்களுக்கு எத்தனை சீட்டு தருவார்கள். ஒற்றை இலக்கத்தில் மிகவும் சொற்ப சீட்டை தருவார்கள். நீங்கள் எங்களோடு வாருங்கள் நீங்கள் விரும்பிய சீட்டை தருகிறேன். சென்ற நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பிட்ட தொகுதியில் ஒரு குறிப்பிட்ட அந்த தொகுதியில் நடிகர் கமலஹாசன் கட்சி 26,000 வாக்குகளை பெற்றது. நாம் தமிழர் கட்சி 18,000 வாக்குகளை பெற்றது. வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் அந்தப் பகுதியில் உள்ள சிறுபான்மை இனத்தின் வாக்கில் குறைந்தபட்சம் 40,000 ஓட்டை உங்கள் தரப்பிலிருந்து பெற்றால்.மொத்தம் 84,000 வாக்கு வருகிறது. இப்படி நம்முடைய ஓட்டுகளை ஒன்றிணைத்தல் கண்டிப்பாக வெற்றி நிச்சயம் போன்ற ஆசை வார்த்தைகள் மூலம் அரசியல் கட்சித் தலைவர்களை கவரும் பணியில் சீமான் ஈடுபட்டுள்ளாராம்.

 

மேலும் அசாதுதீன் உவைசியின் கட்சியான AIMIM கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். பிரச்சாரத்திற்கு அசாதுதீன் உவைசி அழைக்கவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

இவ்வாறு பிரபலங்களை கொண்டு வலுவான கூட்டணியை அமைத்து. மற்ற கட்சிகளுக்கு கடுமையான போட்டி கொடுக்க காத்திருக்கிறார்கள் கமலும் சீமானும்.

-மெய்யறிவன்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.