திருச்சி பேருந்து நிலையத்தில் திருநங்கைகள் மோதல்.. பின்னணி விவரம்..
திருச்சி பேருந்து நிலையத்தில் திருநங்கைகள் மோதல்.. பின்னணி விவரம்..
திருச்சி மாநகர மாவட்டத்தில் சமீபகாலமாக திருநங்கைகள் தொடர்பான பஞ்சாயத்துகள் காவல் நிலையங்களில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது..
அந்த வகையில் சமீபத்தில் திருவானைக்கோயில் பகுதியில் வழக்கறிஞரை தாக்கி வழிப்பறி செய்த சம்பவம் மற்றும் லால்குடி காவல் நிலையத்தில் சிறுவன் ஒருவனை மயக்கிய அழைத்து வந்து தங்களுடன் வளர்ச்சி அடைந்த சம்பவம் என பல்வேறு சம்பவங்கள் திருச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்க நேற்று 6/12/2020 இரவு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் திருநங்கைகள் குரூப்க்குள் அடிதடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.. இது தொடர்பாக விசாரிக்க ஆரம்பித்தோம்.. பின்னணியில் நமக்கு கிடைத்த விவரம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது..
அங்குசம் இணையதளம் மூலம் 13/10/2020 அன்று வெளியான கட்டுரையில் நாம் திருச்சி மாநகர கமிஷனர் நள்ளிரவில் நடத்திய அதிரடி சோதனை- நேரடி ரிப்போர்ட் என்கிற தலைப்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் திருநங்கைகள் என்ற போர்வையில் சில ஜல்சாகள் செய்யும் அட்டூழியத்தை பதிவு செய்திருந்தோம்..
திருநங்கைகள் என்ற போர்வையில் சிலர் விபச்சாரம் செய்து வருவதையும் பயணிகளிடம் ஆசை ஆசையாக பேசி அவர்களிடமுள்ள பணத்தை மட்டுமல்லாது உடைமைகளையும் மிரட்டி அபகரித்துக் கொள்கின்றன என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.. மேலும் நேற்று 06/12/2020 இரவு அந்த குரூப்பில் அகல்யா, சுணையா, ரஞ்சிதா ஆகியோர் சேர்ந்து சுஜி, கீர்த்தனா எனும் திருநங்கைகளை அடித்துள்ளனர்..
அகல்யா,சுணையா ரஞ்சிதா ஆகியோரை விட அழகாக சுஜி, கீர்த்தனா இருவரும் இருப்பதால் வரும் கஸ்டமர்கள் மயங்கி இவர்கள் பக்கம் செல்கின்றனர் என்றும், மேலும் ஏற்கனவே உள்ள ஜல்சாகளுக்கு தொழில் பாதிக்கப்படுவதாகவும் இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் புதிதாக களமிறங்கியுள்ள சுஜி கீர்த்தனாவை அடித்து துரத்தி உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட சுஜி,கீர்த்தனா தங்களுடைய ஆதரவாளர்களை அழைத்துக்கொண்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை நேற்று 6/12/2020 இரவு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி முற்றுகையிட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி கமிஷனர் அப்துல் கபூர் மற்றும் கண்டோன்மெண்ட் காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர் அவரிடம் பேசி கண்டன்மெண்ட் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்க வேண்டி அனுப்பி வைத்தனர்..
திருச்சி போலிஸ் கமிஷனர் இரவில் நடத்திய அதிரடி ! நேரடி ரிப்போர்ட்!
https://angusam.com/action-taken-by-trichy-police-commissioner-at-night
திருச்சி மாநகர மத்திய பகுதியாக விளங்கக்கூடிய திருச்சி பேருந்து நிலையத்தில் ஜல்சாகளின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் பெருகி கொண்டே இருப்பது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் சட்டம் ஒழுங்கு பாதித்து கொண்டே இருக்கிறது என்பதுதான் உண்மை..
ஜித்தன்