பச்சை மலையில் மண்ணில் புதைக்கப்பட்ட ஆண் சடலம் !
துறையூர் பச்சை மலையில் மண்ணில் புதைக்கப்பட்ட ஆண் சடலம் மீட்பு.
திருச்சி மாவட்டம் துறையூர் பச்சைமலை கோம்பை ஊராட்சிக்குட்பட்ட தாளூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் .இவருக்கு சொந்தமாக முந்திரி தோப்பு உள்ளது. இன்று காலை வழக்கம் போல தனது முந்திரி தோப்பிற்கு சென்ற ஜெயராமன் அங்கு பராமரிப்பின்றி உள்ள ஒரு பகுதியில் பாதி புதைக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி துறையூர் போலீசாருக்கு தகவல் தரவே, துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில்போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த துறையூர் வட்டாட்சியர் வனஜா சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார் தாசில்தார் முன்னிலையில் புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டும் பொழுது ஐந்தரை அடி உயரம் கொண்ட சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட இளைஞரின் முகம் அடையாளம் தெரியாத வகையில் அரித்து போய் காணப்பட்டது .மேலும் மர்மமான முறையில் இறந்து கிடந்த நபர் சிமெண்ட் கலர் லோயர் ,ப்ளூ கலர் ஜட்டியும் அணிந்துள்ளார்., மேல்சட்டை இல்லாமல் உடல் பாதி அழுகிய நிலையில் காணப்பட்டது. உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இறந்த வாலிபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் முன்விரோதம் காரணமாக அடித்துக் கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதும் சொத்து தகராறு, காதல் விவகாரம் காரணமாக அடித்து கொலை செய்யப்பட்டாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கீரம்பூரைச் சேர்ந்த கார்த்தி என்ற இளைஞர் காணாமல் போனதாகவும்காணாமல் போன இளைஞர் பச்சைமலை தாளூர் பகுதியை சேர்ந்தவர் என்றும் கூறப்படும் நிலையில்அவரது உறவினர்களை அழைத்து போலீசார் இதுகுறித்து தீவிரவிசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் துறையூர் பகுதிகளில் வாலிபர்கள் யாரேனும் மாயமாகி உள்ளனரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் பச்சைமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-ஜோஸ்