ஆசிரியர் சங்கங்களின் முற்றுகையில் பள்ளிக்கல்வித்துறை வளாகம் ! போராட்டத்தின் பின்னணி என்ன ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஆசிரியர் சங்கங்களின் முற்றுகையில் பள்ளிக்கல்வித்துறை வளாகம் ! போராட்டத்தின் பின்னணி என்ன?

DPI (Department of Public Instruction) என்றழைக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தை போராட்டக்களமாக மாற்றியிருக்கிறார்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தலைநகருக்கு படையெடுத்து வந்திருக்கும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஆறாவது நாளாகவும் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள். களத்தில் பல்வேறு சங்கங்கள், பல்வேறு கோரிக்கைகள். யார் போராடுகிறார்கள்? எதற்காகப் போராடுகிறார்கள்? என்பதிலே பல்வேறு குழப்பங்கள்.

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

DPI (Department of Public Instruction)
DPI (Department of Public Instruction)

சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு “இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினரும்; பகுதி நேரமாக பணியாற்றும் சிறப்பாசிரியர்கள் (தையல், ஓவியம்..) தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரியும்; தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமனம் பெற்றவர்கள் தங்களை பணிவரன்முறை செய்யக்கோரியும்; 2013 ஆண்டிலேயே ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) எதிர்கொண்டு தேர்ச்சி பெற்ற ஆசிரியர் பயிற்சி முடித்த மாணவர்கள், காலிப்பணியிடங்களில் முன்னுரிமை அடிப்படையில் தங்களை பணியமர்த்தக் கோரியும் போராடி வருகிறார்கள். தனித்தனியாக ஒவ்வொரு சங்கத்தையும் அழைத்து பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் முடிவுபெறாமல் தொடர்கிறது போராட்டம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

ஆசிரியர் போராட்டம்
ஆசிரியர் போராட்டம்

“ஒரே கல்வி தகுதி”, “ஒரே பணி” “ஒரே பதவி” இருந்தும் ஊதியத்தில் முரண்பாடு. 1.6.2009-க்கு முன்பு இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தவருக்கு அப்போதைய சம்பளம் 11,370.00. 1.6.2009-க்கு பின்பு சேர்ந்த எங்களுக்கு 8,200.00. பணியில் சேரும்போது 3,170.00 ஆக இருந்த இந்த ஊதிய முரண்பாடு, கடந்த பதினான்கு ஆண்டுகளில் 25,000 ஆக உயர்ந்து நிற்கிறது. 2011 இலிருந்து இந்த முரண்பாட்டை சுட்டிக்காட்டி போராடி வருகிறோம். 7-வது ஊதியக்குழுவில் சரிசெய்து தருகிறோம் என்று எழுத்துப்பூர்வமாக பதில் தந்தார்கள் இன்றுவரையில் தீர்வு காணாமல் கிடக்கிறது.” என்கிறார், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார்.

ஆசிரியர் போராட்டம்
ஆசிரியர் போராட்டம்

”இதுவரை 2016-இல் 6 நாட்கள்; 2018-ஆம் ஆண்டில் ஏப்ரலில் 4 நாட்கள்; டிசம்பரில் 6 நாள்கள்; 2022 ஆண்டு டிசம்பரில் 6 நாட்கள் என கடந்த 14 ஆண்டுகளில் பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி ஓய்ந்துவிட்டோம். இதுவரை மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் விடுமுறை நாட்களில்தான் அதுவும் அஹிம்சையான வழியில்தான் போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறோம். இந்தமுறை, இப்போதே எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கு செல்லாமல் புறக்கணித்திருக்கிறோம். இந்தமுறை எப்படியும் எங்களது பிரச்சினைக்கு உரிய தீர்வு காணாமல் ஊர் திரும்புவதாக இல்லை.” என தீர்க்கமாக அறிவிக்கிறார் அவர்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

மேலும், “ஜெயலலிதா அம்மையார் ஆட்சி காலத்தில் ஒரு முறை; அவருக்குப்பின் இரண்டுமுறை என அதிமுக ஆட்சி காலத்திலேயே மூன்று முறை போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். அப்போதைய கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள்தான் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திமுகவின் சார்பில் மு.க.ஸ்டாலின் அவர்களே நேரில் வந்து எங்களை சந்தித்து கழக ஆட்சி அமைந்ததும் உங்களது கோரிக்கையை நிறைவேற்றித் தருகிறோம் என்று வாக்குறுதியளித்தார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் 311-வது அம்சமாக எங்களுடைய “சமவேலைக்கு சம ஊதியம்” கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்கள் வாக்களித்தபடி செய்து தாருங்கள் என்றுதான் கோருகிறோம்.” என்கிறார், ரெக்ஸ் ஆனந்தகுமார்.

அமைச்சர் மகேஷ்
அமைச்சர் மகேஷ்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கடந்த 2022 ஆம் ஆண்டு நடத்திய போராட்டத்தின்போது, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையா? என்ற கேள்விக்கு, “ஊதியக்குழு அமைத்து மூன்று மாதத்தில் உங்களுடைய சிக்கலை தீர்க்கிறோம் என்றார்கள். அதன்படி, 01.01.2023 அன்று அறிக்கையும் வெளியிட்டார்கள். பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர், தொடக்கக்கல்வி இயக்குநர், மற்றும் நிதித்துறை செயலர் அடங்கிய மூவர் குழுவையும் அமைத்தார்கள். ஆனால், இதுபோன்று குழு அமைப்பது என்றாலே வேண்டுமென்றே காலம்தாழ்த்தி பிரச்சினையை ஆறப்போடும் யுத்தி என்பதால், அந்தக்குழுவை நாங்கள் ஏற்க மறுத்துவிட்டோம்.” என்கிறார்.

01.06.2009-க்கு பிறகு இடைநிலை ஆசிரியர்களாக பணிநியமனம் பெற்றவர்கள் தோராயமாக 20,000 பேர் இருக்கும் நிலையில், இவர்களுள் 15,000-க்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர்கள் ”இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின்” கீழ் அணிதிரண்டிருப்பதாக சொல்லும், ரெக்ஸ் ஆனந்தகுமார் எஞ்சிய ஆசிரியர்கள் பல்வேறு சங்கங்களில் இருப்பதாக குறிப்பிடுகிறார். ஊதிய முரண்பாடு விசயத்தில் இன்னொரு சிக்கலும் அடங்கியிருக்கிறது. கடந்த 14 ஆண்டுகாலமாக வழங்கப்படாத வித்தியாசத்தொகை குறித்த கேள்வி அது.

ஆசிரியர் போராட்டம்
ஆசிரியர் போராட்டம்

“14 ஆண்டு கால அரியர் தொகை எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டோம். இனிமேலாவது, கௌரவமான சம்பளத்தை முரண்பாடு இல்லாமல் வழங்குங்கள் என்றுதான் கேட்கிறோம்.” என்கிறார். இதனை ஒட்டுமொத்த இடைநிலை ஆசிரியர்களும் சொன்னால்தான் எதிர்காலத்தில் சிக்கல் எழாமல் இருக்கும். ஆகவே, ஊதிய முரண்பாடு தொடர்பாக அமைக்கப்பட்ட மூவர் குழு வழியாக இந்த சிக்கலை அணுகுவதே சரியாக இருக்கும் என்பதையும் கல்வித்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியதாகவும் குறிப்பிடுகிறார்.

”இப்போது இருக்கும் நிலையில் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவது சாத்தியமில்லை. உங்களுக்கு இந்த சலுகையை வழங்கிவிட்டால், அடுத்தடுத்து பல்வேறு துறை சார்ந்த அரசு ஊழியர்களும் இதேபோன்ற கோரிக்கைகளுடன் படையெடுத்து வந்துவிட்டால் அரசால் சமாளிக்க இயலாது. கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். உரியமுறையில் உங்களது பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்கிறோம்.” என்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தரப்பிலிருந்தும், முதல்வர் தரப்பிலிருந்தும் வாக்குறுதி கொடுத்தும் அதனை ஏற்க மறுப்பதால்தான் பேச்சுவார்த்தைகள் ஒரு சுமுக நிலையை எட்டவில்லை என்கிறார்கள்.

முதல்வர் மு .க. ஸ்டாலின்
முதல்வர் மு .க. ஸ்டாலின்

”மிஞ்சிப்போனால், மாசத்துக்கு 30 கோடிக்குள்தான் வரும். இதனை செய்யக்கூடாதா?” எனக் கேள்வி எழுப்பிய, ரெக்ஸ் ஆனந்தகுமாரிடம், ”சமவேலைக்கு சம ஊதியம்” என்ற கோரிக்கையே பிழையானது. மத்திய அரசுக்கு இணையான சம்பளம் என்று கோருவதுதான் முறையானது. ஆசிரியர்களை சங்கத்தலைமை தவறாக வழிநடத்துகிறது. சுமுகமான முறையில் பிரச்சினையை தீர்க்க முனையாமல் பிடிவாதம் பிடிக்கிறார்கள்.” என ஒரு சாரார் முன்வைக்கும் குற்றச்சாட்டு குறித்தும் கேட்டோம்.

“உங்கள் வீட்டுக்கு ஒரு கொத்தனாரே நேற்று 450 சம்பளத்தில் அமர்த்திவிட்டு, இன்றைக்கு மற்றொரு ஆளுக்கு 350 தான் கொடுப்பேன் என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? எங்களுடைய கோரிக்கையில் நியாயம் இருக்கிறது. எனவே, அதில் உறுதியாகப் போராடுகிறோம்.” என்கிறார், ரெக்ஸ் ஆனந்தகுமார்.

ஆசிரியர் போராட்டம்
ஆசிரியர் போராட்டம்

கல்வித்துறை அதிகாரிகள், கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். களத்தில் உள்ள நான்கு சங்கங்களையும் அழைத்து தனித்தனியே கோரிக்கையை பெற்றிருக்கிறார்கள். மற்றவர்கள் கோரிக்கையோடு, எங்களது கோரிக்கையையும் ஒன்று சேர்க்காதே என்கிறார்கள். ”சமவேலைக்கு சம ஊதியம்” என்ற கோரிக்கைக்கு தனிக்கவனம் கொடுக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்.

ஏற்கெனவே, எமிஸ் இணையதள புள்ளி விவரங்கள் பதிவு; எண்ணும் எழுத்தும் திட்டம்; வாரம்தோறும் இணைய வழி தேர்வு; பாடம் நடத்தவிடாமல் பயிற்சிக்கு அழைப்பது என்பது உள்ளிட்டு ஆசிரியர் சமூகம் பெரும் சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது. கல்வித்துறையில் முன்னெப்போதும் சந்தித்திராத இந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் பொருட்டு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்கள் (டிட்டோஜாக்) சார்பாக அக்டோபர் 13ஆம் தேதி டிபிஐ அலுவலக வளாகம் முன்பாக, மாபெரும் கோரிக்கை முழக்க எழுச்சி ஆர்ப்பாட்டத்தினை நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், ஊதிய முரண்பாடு தொடர்பான போராட்டங்கள் பொதுமக்கள் மத்தியில் ஆசிரியர்கள் பற்றிய மதிப்பீட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சம்பளத்துக்காக போராடுவாங்கனு உதாசீனப்படுத்திட்டு போகும் சூழலை ஏற்படுத்திவிடும். இத்தகைய புறச்சூழலையும் கருத்தில் கொண்டு போராட்டத்தை ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும்.” என்கிறார், ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர்.

வே.தினகரன்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.