ஊரு விட்டு ஊரு வந்து செல்போன் மூலம் கஞ்சா சேல்ஸ் கும்பல் சிக்கியது வீடியோ
ஊரு விட்டு ஊரு வந்து செல்போன் மூலம் அழைத்து கஞ்சா விற்பனை .
போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய வரை விரட்டி பிடித்து கைது செய்த போலீசார் .
ரொக்கப்பணம், கஞ்சா, இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.
வீடியோ லிங்
திருச்சி மாவட்டம், மணப்பாறை ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கேட் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக மணப்பாறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர், அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர்.
வீடியோ லிங்
இதனையடுத்து சுதாரித்த போலீசார் தப்பி ஓடிய இருவரையும் விரட்டி பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்திய போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களில் ஒருவர் திண்டுக்கல் மாவட்டம், நாடுகண்டனூரைச் சேர்ந்த முருகன் (வயது 44) என்பதும், இரு சக்கர வாகனம் மூலம் ஊரு விட்டு ஊரு வந்து மணப்பாறை பகுதியில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் நின்று கொண்டு, செல்போன் மூலம் அழைத்து கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது. பிடிபட்ட மற்றொருவர் மணப்பாறை வாகைக்குளம் ரோடு பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் (வயது 25) என்பதும், போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
வீடியோ லிங்
இதனையடுத்து, மணப்பாறை போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள், 2 செல்போன், 400 கிராம் கஞ்சா மற்றும் ரூ.4300 ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர். செல்போன் மூலம் அழைத்து கஞ்சா விற்பனை செய்த விவகாரம் மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.