சுதந்திர போராட்ட தியாகி திருச்சி ராஜதுரை மைக்கேல் !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

சுதந்திர போராட்ட தியாகி திருச்சி ராஜதுரை மைக்கேல் வயது முதிர்வு காரணமாக 101 வயதில் காலமானார்.

 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் என்கிற ஊரில் பிறந்த இவர். திருநெல்வேலி மாவட்டத்தை  பூர்வீகமாக  கொண்டவர். அமெரிக்காவின் கார்னெல் பல்கலைகழகத்தில்  எம்எஸ். பட்டமேற்படிப்பை முடித்தவர்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

 

சுதந்திரப் போராட்டக்காலத்தில் நேதாஜியின் படையில் இணைந்து போராடி 3 முறை சிறை சென்றார்.  பின்னர் காந்தி வழியில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

3

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் போலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானவர். சுதந்திர போராட்டத் தியாகிகளுக்கான தாமிரப்பட்டயமும் பெற்றார்.

 

4

சுதந்திர இந்தியாவின் முதல் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் குழுவில் இணைந்து பணியாற்றிய இவர் தமிழகத்தில் ஊரக வளர்ச்சித்துறை துணை இயக்குநராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றார்.

 

மும்பை வேளாண்மை நிதிக்கழகம், புதுடெல்லி உணவு உற்பத்தி இயக்கத்தின் இயக்குநராகவும் இருந்தவர்.

 

தமிழகத்தின் பல்வேறு வேளாண் வளர்ச்சித் திட்டங்களுக்கு வித்திட்டவர். மொரார்ஜி தேசாய், சஞ்சீவரெட்டி, கக்கன், விஷ்னுராம் மேதி, பேரறிஞர் அண்ணா உள்ளிட்டோருடன் நட்பில் இருந்தவர்.

 

பணி நிமித்தம் குடும்பத்துடன் திருச்சியில் குடியேறிய இவர் கடந்த 11.06.2022 சனிக்கிழமை மாலை காலமானர். இவரது விருப்பப்படி கண்கள் தானமாக வழங்கப்பட்டது. இவருக்கு 2 மகன்கள், 4 மகள்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப் பேரன், பேத்திகள் உள்ளனர்.

 

பொன்னகரில் உள்ள அவருடைய இல்லத்திற்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு  தமிழக அரசு சார்பில் கலந்து கொண்டு மாலை அணிவித்து அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது அவருடன் மாவட்ட நலநிதிக்குழு பொருளாளர் சேவை கோவிந்தராஜ், ஸ்கோப் சுப்பாராமன், மற்றும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பல்துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்..

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.