முதல்வரின் நம்பிக்கையை  உடைத்த உதயசந்திரன் ஐஏஎஸ். !

0

உதயசந்திரன் ஐஏஎஸ் குறித்து முதன் முதலாக நம்முடைய அங்குசம் இதழில் கடந்த ஆண்டு 2022 ஜீன் மாதம் 22 ம் தேதி எழுதிய கட்டுரையை தற்போது மீள் பதிவாக தருகிறோம்.

முதல்வரின் நம்பிக்கையை  உடைத்த உதய சந்திரன் ஐஏஎஸ். !

https://businesstrichy.com/the-royal-mahal/

உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். கடந்த ஒரு வருடமாக  திமுக ஆட்சியில் பலமாக உச்சரிக்கும் பவர் புல் பெயர்.

திமுக 5 முறை ஆட்சி செய்தாலும் இந்த முறை அவர்களுக்கு புதிய களம். புதிய முதல்வர், புதிய தலைவர் என்கிற மனநிலையில் ஸ்டாலின்  இந்த ஆட்சியை நடத்துகிறார்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

முதல்வர் என்கிற நிர்வாகம்  அவருக்கும் புதியது, அவருடைய குடும்பத்திற்கும் புதியது. தவிர ஸ்டாலின் நினைத்தது என்னவோ 200 தொகுதிகளை கைப்பற்றி ஹை மெஜாரிட்டியில் வருவோம் என நம்பினார்.

திமுகவிற்கு வேலை செய்த பிரசாந்த் கிஷோர் சொன்னதும் அதுதான். ஆனால் ஜஸ்ட் பாஸ் என்பது போல 100 க்கு 40 மார்க் எடுத்து ஆட்சியை பிடித்துள்ளது திமுக.

இது ஸ்டாலினுக்கே பயங்கர டென்ஷன். இருந்தாலும் ஆட்சியை பிடித்துவிட்டோம் அதுவும் அதிமுகவிற்கும் – திமுகவிற்கும் இடையே 2.5 சதவிகித வாக்கு சதவிகிதம் என்பது தான் வித்தியாசம்தான் என்பதை புரிந்து கொண்டு ஆட்சியை நல்ல முறையில் நடத்த வேண்டும்  இல்லை என்றால் மக்கள் மீண்டும் திமுகவை மறந்து விடுவார்கள் என்று நம்பினார்.

அதனால் தான் இந்த முறை ஆட்சியை நல்ல முறையில் நடத்த அமைச்சர்கள் தேர்வு முதல் அவர்களுக்கு என்ன செய்ய  வேண்டும் எந்த வேலை நடக்க வேண்டும் எது நடக்க கூடாது என பல்வேறு  அதிகார மையங்களை தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வராமல் விட்டு விட்டார்.

இந்த சிறிய தவறு தான் இன்று ஸ்டாலினையும் அவருடைய குடும்பத்தையும் பாஜக அண்ணாமலை மூலம் குதறி எடுக்க வைக்கிறது.

முதல்வர் நியமனம் செய்த முக்கியமான அதிகாரிகளில் இப்பொழுது முதல்வருக்கே டப் கொடுக்கும் இடத்தில் இருப்பவர் உதய சந்திரன் ஐ.ஏ.எஸ்.

உதய சந்திரனை விட 30  அதிகாரிகள் சீனியர் லிஸ்டில் இருக்கும் போது உதயசந்திரனுக்கு முக்கியத்துவம் கொடுத்து முதல்வரின் தனிச்செயலாளரில் முதல் முன்னுரிமை கொடுத்தார்.

ஆனால் உதய சந்திரன் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு வேண்டப்படாத  ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை குதறி எடுத்தார்.

திறமை இருந்தும் அவர்களுக்கு சரியான இடங்களை ஒதுக்காமல் அவரை புகழ்பாடும் அதிகாரிகள், அடிவருடிகள், சப் ஜூனியர்களை தகுதியை மீறி சில முக்கியமான பதவிகளை கொடுத்தார்.

கடந்த ஒரு ஆண்டில் நிதி இல்லாமல் அரசு தத்தளிக்கையில் டெல்லிக்கு சென்று அரசுக்கு வேண்டிய நிதியை வாங்க இப்போது பவரில் உள்ள தலைமை செயலாளர் இறையன்பு அல்லது முதல்வரின் செயலாளர்களாக இருக்கும் உதயசந்திரன், உமாநாத், சண்முகம், அனு ஜார்ஜ் உள்ளிட்ட யாருக்கும் திறமை என்பதே இல்லை.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இவர்களுக்கு டெல்லியில் சவுத் பிளாக்கில் என்ன இருக்கிறது? நார்த் பிளாக்கில் என்ன இருக்கிறது என்பது கூட தெரியாது.

இத்தனை ஆண்டுகள் தமிழகத்திலே சுற்றி வந்தவர்களை முதல்வர் முக்கியப் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

விளைவு கடந்த ஒரு ஆண்டுகளாக ஏகப்பட்ட குளறுபடிகள், ஊழல்கள். நாங்கள் நேர்மையானவர்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தால் மட்டும் பத்தாது வல்லவர்களாகவும் இருக்க வேண்டும். இப்போது பிரச்னைக்கு வருவோம்.

கடந்த ஜீன் 2022 –  12 ம் தேதி, 51 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் டிரான்ஸ்பர் ஆர்டர் வந்தது. அதில் முக்கியமானது இந்த ஆர்டர் கடந்த ஜூன் 2 ம் தேதியே வர வேண்டியது.

ஆனால் 10 நாட்கள் என்ன தாமதம் என்றால் சென்னை மெட்ரோவில் இருந்த பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ். அதிகாரியை முதல்வர் நல்ல இடத்திற்கு கொண்டு வர கிட்டத்தட்ட முதல்வரே அவருடைய சோர்ஸ் மூலமாக  நேரடியாக தனிச்செயலாளர் 2 ஆக  நியமனம் செய்ய உதய சந்திரனிடம் உத்தரவிடுகிறார்.

பிரதீப் யாதவை முதல்வர் சர்க்கிலுக்குள்   உள்ளே  கொண்டு வர விருப்பம் இல்லாமல் உளவுதுறை மூலமாக பிரதீப் யாதவின் கடந்த கால சில கசப்பான சம்பவங்கள் என அவருக்கு எதிரான கோப்பை தயார் செய்து ரிப்போர்ட்டாக முதல்வருக்கு  அனுப்பி, அவர் இங்கே வேண்டாம் என்கிறார்.

ஆனால் முதல்வர் விடாப்பிடியாக சரி நெடுஞ்சாலைகள் துறைக்கு  செக்கரட்டரியாக போட கோப்பை தயார் செய்யுங்கள் என்கிறார்.

சரி என்று சென்றவர் பிரதீப் யாதவ் பெயரை  அதிகாரிகள் டிரான்ஸ்பர் பட்டியலில் சமூக நலத்துறைக்கு மாற்றி கோப்பை தயார் செய்து கொடுக்கிறார்.

இந்த முறை மீண்டும் முதல்வர்  நான் சொன்னதை செய்யுங்கள் என பிரதீப் யாதவிற்காக விடாப்பிடியாக கண்டித்து அனுப்பிகிறார்.

பிறகு 3 நாட்கள் கழித்து பிரதீப் யாதவ் பெயர் டிரான்ஸ்பர் லிஸ்டில் சேர்க்கப்படுகிறது.

ஏற்கனவே மத்திய அரசு பணியில் அதுவும் பிரதமர் அலுவலகத்தில் நல்ல பொறுப்பில் இருந்து முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இறுதி சடங்கை அரசு சார்பில் சிறப்பாக செய்தார் என்பதால் அமுதா ஐ.ஏ.ஏஸ்.

அவர்களை முதல்வரது தனிச் செயலாளர்களில் ஒருவராக  கொண்டு வர ஆசைப்பட்டார் முதல்வர். அவரையும் இப்படித்தான் உள்ளே வரவிடாமல் அலைக்கழித்து உள்ளே வரவிடாமல் பார்த்துக் கொண்டார் உதய சந்திரன்.

இனி உதயசந்திரனை வெகு விரைவில் மாற்றினால் தான் ஆட்சி நன்றாக நடக்கும் என ஏற்கனவே பல்வேறு அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், குடும்பத்தினர் என  முதல்வருக்கு நெருக்கமான பத்திரிகையாளர்கள், சோர்ஸ்கள் என பலரும் சொல்லியபோதும் நம்பாத முதல்வர் இப்பொழுது உதயசந்திரனை நினைத்து கலங்கிப் போய் உள்ளார்.

-அஜித் குமார்

சரியா 1 வருடம் கழித்து நாம் எழுதிய செய்தியின் உண்மை தன்மை நிறுபனமாக்கி உள்ளது. இன்று  14.05.2023  உதயசந்திரன் நிதித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.