மணிகண்டம், வணிக வளாக கடைகள் – வாடகை கட்டவில்லை என்றால் கடை ரத்து செய்யப்படும் கலெக்டர் எச்சரிக்கை
திருச்சிராப்பள்ளி விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் மணிகண்டம் வட்டாரத்தில் அமைந்துள்ள கள்ளிக்குடி காய்கறிகள், பழங்கள் மற்றும் மலா்களுக்கான மத்திய வணிக வளாகத்தில் செப்டம்பா்- 2020 முதல் கடைகளை வாடகைக்கு பெற்றுள்ள வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு அறிவிப்புகள் தொடா்ந்து வழங்கப்பட்டும் கடைகளை பயன்படுத்தாமலும் வாடகை மற்றும் மின்கட்டணம் செலுத்தாமலும் உள்ளனா். ஆகவே, அரசாணை (நிலை) எண்:147, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (நநி4) துறை, நாள்:30.12.2000-யின்படி செப்டம்பா்-2020 முதல் தற்போது வரை ஒவ்வொரு பதினோரு மாதங்களுக்கும் ஏற்கனவே செலுத்தப்பட்ட வாடகை தொகையிலிருந்து 5% உயா்த்தி நிலுவை வாடகை மற்றும் மின்கட்டணத் தொகையினை செலுத்தி ஒப்பந்தத்தை புதுப்பித்து கொள்ளுமாறும் மற்றும் கடைகளை ஏழு நாட்களுக்குள் செயல்பாட்டிற்கு கொண்டுவரவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், தவறும் பட்சத்தில் கள்ளிக்குடி காய்கறிகள், பழங்கள் மற்றும் மலா்களுக்கான மத்திய வணிக வளாகத்தில் உள்ள கடைகள் தமிழ்நாடு வருவாய் மீட்பு சட்டத்தின்படி (Revenue Recovery Act) கையகப்படுத்தப்பட்டு மறு அறிவிப்பின்றி இரத்து செய்யப்பட்டு மறுஏலம் மூலமாக கடைகள் வேறு நபா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என தொிவித்துக் கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.மா.பிரதீப் குமார்,இ.ஆ,ப.,அவா்கள் தொிவித்துள்ளார்.