அங்குசம் பார்வையில் ‘மார்க் ஆண்டனி ‘

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அங்குசம் பார்வையில் ‘மார்க் ஆண்டனி ‘.

தயாரிப்பு: மினி ஸ்டுடியோஸ் வினோத்குமார், டைரக்டர்: ஆதிக் ரவிச்சந்திரன். ஆர்ட்டிஸ்ட்ஸ்: விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், அபிநயா, ரித்து வர்மா, சுனில், ஒய்.ஜி.மகேந்திரன், ரெடின் கிங்ஸ்லி. டெக்னீஷியன்கள்: ஒளிப்பதிவு: அபிநந்தன் இராமானுஜம், இசை: ஜி.வி.பிரகாஷ்குமார், ஆர்ட் டைரக்டர்: ஆர்.கே.விஜய்முருகன், எடிட்டிங்: வேலுக்குட்டி. பிஆர்ஓ: ரியாஸ் கே.அகமது.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

1975–ல் டைம் டிராவல் டெலிபோன் ஒன்றை கண்டுபிடிக்கிறார் விஞ்ஞானி செல்வராகவன். அந்த போன் மூலம் கடந்த காலத்தில் இருந்தவர்களுடன் பேசலாம். அதுவும் ஒரு நாளைக்கு ஒரு நம்பருக்கு மட்டும் தான் பேச முடியும். மீண்டும் மறுநாள் தான் அந்த நம்பருக்கு பேச முடியும். அதேபோல் எதிர் காலம் குறித்து பேச முடியாது. இந்த போனை காரில் வைத்துக் கொண்டு ஒரு பாருக்கு போகிறார் செல்வராகவன். அங்கே நடந்த களேபரத்தில் ஆண்டனியை ( அப்பா விஷால்) போட்டுத் தள்ளுகிறது வில்லன் சுனில் குரூப். செல்வராகவனும் குண்டடிப்பட்டு காரில் திரும்பி வரும் போது ஆக்சிடெண்டில் இறந்து விடுகிறார்.

அதன் பிறகு கதை 1995-ல் ஆரம்பிக்கிறது. இங்கே மார்க் ( மகன் விஷால்), ஜாக்கி பாண்டியன் ( அப்பா எஸ்.ஜே.சூர்யா) மதன் பாண்டியன் ( மகன் சூர்யா) இருக்கிறார்கள். மகன் விஷால் கார் மெக்கானிக். சொந்த மகனை விட மார்க் மீது தான் ஜாக்கி பாண்டியனுக்கு பாசம் அதிகம். தனது அப்பா ஆண்டனி ஒரு கொலைகாரன், பெத்த தாயையே கொடூரமாக கொன்றவன் என்ற வெறுப்பில் இருக்கிறார் மார்க்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஒரு நாள் ரித்து வர்மா தனது மெக்கானிக் ஷாப்பில் விட்ட காரில் அந்த டெலிபோன் இருப்பதை பார்க்கிறார் மார்க் ( ஆமா இருபத்தஞ்சு வருசத்துக்கு முன்னாடி ஆக்சிடெண்டான செல்வராகவன் கார் ரித்து வர்மா கிட்ட எப்படி வந்துச்சுன்னு கேள்வியே கேட்கக் கூடாது) அந்த போன் மூலம் தனது அம்மாவிடம், அப்பாவிடம் பேசுகிறார் மார்க்.

அதன் பின்னர் நடக்கும் அதகளம், ரத்த ரணகளம் தான் இந்த ‘மார்க் ஆண்டனி ‘. டிசைன் டிசைனாக துப்பாக்கிகள், கத்திகள், அனகோண்டா பீரங்கி என ஆயுத ஃபேக்டரியை உருவாக்கியிருக்கார் ஆர்ட் டைரக்டர். நடிப்பு அரக்கன்னு டைட்டிலில் போட்டதாலோ என்னவோ சில சீன்களில் அப்ளாஷ் அள்ளுகிறார் எஸ்.ஜே. சூர்யா. பல சீன்களில் ஓவர் டோஸாகி அட போங்கய்யா என எரிச்சலாக்குகிறார்.

மார்க் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நான்கைந்து சீன்களில் வருகிறார் போகிறார்.‌ அவ்வளவு தான். ஜி.வி.பிரகாஷுக்கு என்னாச்சுன்னு தெரியல. பாடல்களும் தேறல, பின்னணி இசையும் காது ஜவ்வு கிழியுது. இளந்தாரிப் பயலுகளுக்கு மார்க் ஆண்டனியைபிடிக்கும் அளவுக்கு எல்லோருக்கும் பிடிக்குமான்னு தெரியல ?

– மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.