டெல்லியில் கதி கலங்கி நின்ற எடப்பாடி பழனிச்சாமி !

0

டெல்லியில் கதி கலங்கி நின்ற எடப்பாடி !

கடந்த 14ஆம் நாள் பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் தேசியத் தலைவர் நட்டா அவர்களைச் சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜக தலைமையின் அழைப்பின் பேரில் கூட்டணியை இறுதி செய்ய டெல்லி சென்றார். பொதுவாக எடப்பாடி அவர்கள் டெல்லி செல்லும்போது உடன் முன்னாள் அமைச்சர்களை அழைத்துச் செல்வது வழக்கம் இந்த முறை தனியாகவே சென்றார்.

2 dhanalakshmi joseph

டெல்லி புறப்படும்போது எடப்பாடியின் மனநிலை மகிழ்ச்சியாக இல்லை. காரணம், ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவதற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டவுடன் அதன் குறை,நிறைகளை அறிந்துகொள்ள எடப்பாடி முற்படாமல், சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தலை அவசரஅவசரமாக ஆதரித்து அறிக்கை வெளியிட்டார். எடப்பாடி டெல்லி செல்வதற்கு முதல்நாள் அதாவது 13ஆம் நாள் இந்தியத் தேர்தல் ஆணையம் “மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான், சத்தீஸ்கர், ஆந்திரம், தெலுங்கனா, நாகலாந்து மாநிலங்களுக்கு எப்போது தேர்தல் நடைபெறும் என்பது அடுத்த மாதம் (அக்டோபர்) அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பின் மூலம் ஒரே நாடு, ஒரே தேர்தல் 2024ஆம் ஆண்டுக்குச் சாத்தியமில்லை என்பது தெளிவாகிவிட்டது என்பதை எடப்பாடி உணர்ந்துதான் மகிழ்ச்சி இல்லாமல் இருந்தார்.

மேலும், தில்லியில் 5 மாநிலங்களுக்குத் தேர்தல் அடுத்த மாதம் அறிவிப்பு வெளியாகும் என்ற நிலையில் பாஜக தேர்தல் பணியில் ஆழ்ந்துவிட்டது. வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியில் மும்முரம் காட்டியது. பாஜகவின் இந்த ஆர்வமும் ஒரே நாடு, ஒரே தேர்தல் இப்போதைக்கு இல்லை என்பதையே தெளிவுபடுத்தியது. இந்நிலையில்தான் தேசிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் அதிமுகவை மட்டும் பாஜக அழைத்து என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.

டெல்லி சென்ற எடப்பாடி அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்பித்துரை வரவேற்றார். அன்று இரவு 8.30 மணியளவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் பாஜக தலைவர் அமித்ஷா அவர்களை அவரின் இல்லத்தில் அரை மணி நேரம் சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது எடப்பாடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்பித்துரை, சிவி சண்முகம் போன்றவர்களை அழைத்துச் செல்லாமல் தனியாகவே சென்றார். அமித்ஷா அவர்களைச் சந்தித்துவிட்டு வந்த எடப்பாடி செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் விரைவாக வெளியேறி, அன்றிரவே சென்னை திரும்பினார்.

- Advertisement -

- Advertisement -

4 bismi svs

எடப்பாடியின் இந்தச் செயல்பாடுகள் தில்லி செய்தியாளர்களுக்குப் பல்வேறு யூகங்களை உண்டாக்கியது. டெல்லியில் உள்ள அதிமுக வட்டாரங்களை அணுகி, அமித்ஷா-எடப்பாடி சந்திப்பு பற்றி கேட்டபோது, அவர்களுக்கும் எதுவும் தெரியாது என்று கைவிரித்தனர். பாஜக தரப்பிலிருந்து அமித்ஷா – எடப்பாடி சந்திப்பு பற்றிய செய்திகள் கசியவிடப்பட்டன. “தமிழ்நாட்டில் பாஜக போட்டியிட அதிமுக 20 தொகுதிகளை ஒதுக்கவேண்டும்.(புதுச்சேரி உட்பட) திமுக கூட்டணி தமிழ்நாட்டில் வலுவாக உள்ளது. இந்த நிலையில் அதிமுக பிளவுபட்டுத் தேர்தலைச் சந்திக்கக்கூடாது. பாஜகவுக்கு ஒதுக்கப்படும் 20 தொகுதிகளில் அதிமுக – பன்னீர், டிடிவி தினகரன், புதிய தமிழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி போன்ற சிறிய கட்சிகளுக்குப் பாஜக இடங்களிலிருந்து கொடுக்கப்படும்” என்று அமித்ஷா கண்டிப்பான குரலில் கூறியுள்ளார். இதைக் கேட்ட எடப்பாடி,“கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப்போல 5 தொகுதிகளைத் தந்துவிடுகிறோம். பன்னீர், டிடிவி தினகரன் பாஜகவுடன் தொகுதி உடன்பாட்டில் இருந்தால் நாங்கள் எப்படிக் கூட்டணியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யமுடியும்” என்று பதில் கூறியுள்ளார்.

மேலும், “தமிழ்நாடு பாஜக தலைமை கூட்டணிக்குத் தலைமை தாங்கும் எங்களை மதிக்காமல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை, கோவை, தென்சென்னை, வேலூர், தென்காசி, நீலகிரி என 9 தொகுதிகளில் பாஜக போட்டியிடுவது உறுதி என்று தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார்கள். அதிமுகவை இக்கட்டில் நிறுத்தியுள்ளீர்கள்” என்று தொடர்ந்து பேசியுள்ளார். இதைக் கேட்ட அமித்ஷா,“நாங்கள் சொல்வதை முதலில் கேளுங்கள். நாங்கள் சொல்வதைக் கேட்கவில்லையென்றால், நாடாளுமன்றத் தேர்தலில் உங்களுக்கு இரட்டை இலை கிடைக்க வாய்ப்பில்லை. அதிமுக கட்சி பிரச்சனைத் தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும் என்றே உங்களை இடைக்காலப் பொதுச்செயலாளராக உங்களை அறிவித்துள்ளது.

தற்போது உள்ள வழக்கின்படி ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியில் நீடிப்பார். நீங்களும் பன்னீரும் ஒன்றாகக் கையொப்பமிட்டால்தான் இரட்டை இலை கிடைக்கும். பன்னீரை நீங்கள் கூட்டணியில் ஏற்க மறுத்தால் இரட்டை இலை கிடைக்காது என்பதே தற்போதைய நிலவரம்” என்று கறாராகப் பேசியுள்ளார். கட்சியினரைக் கலந்துகொண்டு முடிவைச் சொல்கிறேன் என்று கூட்டணியை இறுதி செய்யாமல் சோகமான மனநிலையில்தான் எடப்பாடி சென்னை திரும்பியுள்ளார்.

திமுகவினர் எடப்பாடி ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஒப்பந்தங்களில் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக மறுவிசாரணை வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். கொடநாடு வழக்கு வழக்கு வேறு கழுத்தை இறுக்கிக் கொண்டிருக்கின்றது. மதுரை மாநாடு தொண்டர்களால் நிரம்பி வழிந்தாலும், கொட்டியெறியப்பட்ட புளிச்சோற்றால் வெற்றியைக் கொண்டாட முடியாமல் எடப்பாடி முன்னணித் தலைவர்களை விளாசிக் கொண்டிருக்கிறார்.

தில்லி பாஜகவின் மிரட்டல் வேறு. என்ன செய்யப்போகிறார் எடப்பாடி என்பதைத் தமிழ்நாடு அரசியல் களம் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கின்றது. தமிழ்நாடு அதிமுக வட்டாரத்தில் தில்லி பயணம் குறித்துக் கேட்டபோது, டெல்லியின் மிரட்டலுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம். வெற்றியோ தோல்வியோ எதைப் பற்றியும் எங்களுக்குக் கவலையில்லை. தனித்துபோட்டியிடுவோம் என்று பாஜகவுக்குச் சிகப்பு சிக்னல் கொடுத்துள்ளனர்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.