அகவை ஏறுவது மூப்பல்ல ! முதிர்ச்சி இலக்கணமாகி வருகிறார்! – வா.அண்ணாமலை
திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு 92ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அவர்கள் அறிக்கையில்,
நூற்றாண்டு விழா கொண்டாடி மகிழ வேண்டுமென சமூக நீதி, தாய்நாடு, தாய்மொழிக் கல்வியின் மீது அக்கறை கொண்டுள்ள பற்றாளர்கள், அனைவரும் ஒருமித்த குரலில் வணங்கி வாழ்த்துகிறார்கள்! வேண்டுகிறார்கள்!
தேசியக் கல்விக் கொள்கையினை ஒன்றிய அரசு வெளியிட்ட போது, தமிழ்நாட்டில் – ஏன் இந்தியா முழுவதும் ஒரு எதிர்ப்புக் கனலாக பீறிட்டெழுந்தது என்றால் ஆசிரியரின் குரல்தான். மறுக்கவும் முடியாது – மறக்கவும் முடியாது.
ஆசிரியர் சங்கங்களைக் கூட்டி போராட்டக் களத்தில் இறக்கினார். தானே முன்னின்று போராடினார்கள்.
விஸ்வகர்மா திட்டத்தினை ஒன்றிய அரசு வெளியிட்ட போதும், எதிர்ப்புக்குரலினை முதன் முதலில் அனல்வீச்சாக எதிர்த்து நின்றவர்.
மூன்று முறை கொரானாவால் பாதிக்கப்பட்டு வெளியில் வந்தபோது, பயணங்கள் முடிவதில்லை! பயணங்கள் தொடர்கதைதான் என நாடு முழுவதும் பயணத் திட்டத்தினை அறிவித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறார்.
போகின்ற உயிர் பயணத்தில் போகட்டும்! என்று சூளுரைக்கிறார்.
அகவை ஏறுவது மூப்பல்ல ! முதிர்ச்சி இலக்கணமாகி வருகிறார்!
ஐபெட்டோ அவர்களுக்கு பவள விழா கொண்டாடும் அழைப்பினை அமைப்பின் சார்பில் ஆசிரியர் அவர்களிடம் வழங்கி வாழ்த்து வேண்டிய போது ஐபெட்டோ அவர்களின் கரம் பற்றிக் கொண்டு ‘அண்ணாமலை – நான் கறுப்புச் சட்டையைப் போட்டுக் கொண்டு சமூக நீதிக்கு எதிராக எவர் எந்தப் பக்கம் வந்தாலும் எதிர்த்து குரல் கொடுத்து வருகிறேன்.
நீங்கள் முழுக்கை வெள்ளைச் சட்டையைப் போட்டுக் கொண்டு ஆசிரியர் சமுதாயத்தின் மத்தியில் செய்து வருகிறீர்கள்.
நூறாண்டு வாழ்ந்து சமூகத் தொண்டினைச் செய்வீர்கள் என வாழ்த்தினார்கள். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் அவர்களின் அன்புமகன் திரு.வீ.அன்புராஜ் அவர்களும் உடன் இருந்தார்கள்.
மழை வெள்ளத்தால் – பிறந்தநாள் விழா கொண்டாடும் தேதியினை ஒத்தி வைத்துள்ளார்கள். அறிவிக்கிற தேதியில் – தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாநிலப் பொறுப்பாளர்களுடன் நேரில் சென்று வாழ்த்துப் பெறுவோம்!
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சமூக நீதிக் காவலர் நீடு வாழ்க! நீடு வாழ்க!
நூற்றாண்டு விழா கொண்டாடும் நாள் வரை வாழ்க என தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் வணங்கி வாழ்த்துகிறோம்!
பொது நோக்கர்கள், சமூக நீதி சிந்தனையாளர்கள் அனைவரும் வாழ்த்துப் பெறுகின்ற பொது மரியாதைக்குரிய இடம் தந்தை பெரியார் திடல் தான் பெருமிதம் கொள்வோம்..!
வணங்கி வாழ்த்து பெறும் இயக்கக் கொள்கை குடும்பத்தார்கள்.
வா.அண்ணாமலை,
ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர்