அர்த்தமுள்ள ஆன்மீகம் – தமிழர்களின் அறம் – பாகம் 2
பாகம் 1 ஐ படிக்க https://angusam.com/meaningful-spirituality-virtue-of-tamils-ph-d-arumugattamizhan/
தமிழ் அறம் என்ன செய்யும் என்றால் தமிழ் இந்த நெருக்கடிகளிலிருந்து ஒருவனை விடுவித்துவிடும். நீ அவன் சொல்வதைக் கேட்க வண்டும் என்று இல்லை. இவன் சொல்வதைக் கேட்கவே என்றும் இல்லை.
அந்த கட்டளைக்குத் தலையை ஆட்டவும், இந்த கட்டளைக்கு வாய் பொத்த வேண்டும். இதெல்லாம் எதுவும் தேவை யில்லை உனக்கு அறிவு இருக்கு. இல்ல உனக்கு ஒரு மனச்சான்று இருக்கு இல்ல. உனக்கு எது நல்லது எது கெட்டது என்று பகுத்தாராய தெரியும் இல்ல. நீ யோசிக்க உன்னுடைய அறம் உனக்கானது.
உன்னுடைய அறத்தை நீ தேர்ந்தெடு அப்படின்னு சொல்கிறவர்கள் எப்போதும் அறம் என்கிறது பொருளை எப்படி கட்டமைப்பார்கள் என்றால் ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தின் மேல ஆதிக்கம் செலுத்த விரும்புகிறபோது அந்த ஆதிக்கம் செலுத்த விரும்புகிற அந்த சமூகம் தன்னுடைய அறங்களை எல்லாம் கொண்டுவந்து இவன் தலை மேல வைத்து, இதுதான் அறம். நீ கடைபிடி அப்படின்னு சொல்லும், உனக்கு எதுவும் தெரியாது. நீ முட்டாள். அப்ப நான் சொல்றேன் இதுதான் அறம். அதை நீ கடைபிடி அப்படின்னு சொல்லும்.
அப்படியெல்லாம் இல்ல. அவன் அவனுடைய அறத்தை கொண்டு வந்து திணிக்கிறான். திணித்து அதன் மூலம் அவனுடைய ஆட்சியதிகாரத்தை இவன் தலை மேல ஏற்றவேண்டும் என்று நினைக்கிறான். என்ன செய்வான் என்றால் அந்த விழுமியங்களின் அட்டவணையை இவன் மறுமதிப்பீடு செய்யலாம் என்று சொன்னாயே அது எனக்கு எப்படி அறமாக இருக்கமுடியும்.
என்னுடைய சூழல் வேறு. புலால் உண்ணாமை என்பது ஒரு அறம். ஆனால் புலால் மட்டுமே உண்ணக்கூடிய சூழலில் இருக்கிறவனுக்கு அது அறம். ஆகவே அறம் நடந்து கொண்டே இருக்கும். எப்படி தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் அப்படின்னா அஃது ஒரு குழுவாக, நீங்க என்ன குழு, அதுக்கான அடையாளங்களை நாங்க சொல்லுவோம். ஒருத்தன் அயோக்கியன், ஆனா வெளியில போய் அவன் ரொம்ப சிறப்பானவன் ரொம்ப நல்லவன் மாதிரி வேடங்களில் நடித்தான் என்றால் வள்ளுவர் சொல்கிறார், “டேய் உனக்குள்ள இருக்கிற உன்னுடைய மனம். உனக்குள் இருக்கிற ஐந்து பூதங்கள் உன்னை பார்த்து கைகொட்டி சிரிக்கும்.
அதனால் உனக்கு உண்மை என்று தெரிஞ்ச பொய் சொல்லாதே. சொன்னா உனக்கே உறுத்தலா இருக்கும். தனக்கு ஒருவன் உண்மையாக இருந்தால் போதுமானது.
சமூகத்திற்கு உண்மையாக இருக்கவேண்டும் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் ஒருத்தன் தனக்கு உண்மையாக இருக்கவேண்டும். இருக்கவேண்டும் என்று தீர்மானத்தைக் கொண்டுவிட்டால் அதன் பிறகு சமூகத்திற்கு உண்மையானவனாகத்தான் இருப்பான். இந்த காலகட்டத்திற்கு உகந்தது, இனி வரும் காலகட்டத்திற்கு ஏற்றதல்ல என்கிற ஒரு காலம் வரும்பொழுது எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட ஒரு விழுமியத்தைத்தான், எக்காலத்திற்கும் ஆன ஒரு நெறிமுறையைத்தான் நாம் அறம் என்று நாம் சொல்கிறோம் •
– ஆக்கம் : முனைவர் தி.நெடுஞ்செழியன்