ஜெயித்தவர்கள் வரிசையில் ஓரத்தில் நடிகர் விஜய் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மிக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. அதற்கு அடுத்த நிலையில் அதிமுக போன்ற பல்வேறு கட்சிகள் வருகின்றன. ஆனாலும் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி தமிழகம் முழுவதும் முக்கிய பேசுபொருளாக மாறியது. இப்படி முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 129 இடங்கள் வரை வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

இவ்வாறு வார்டு மெம்பர் முதல் ஒன்றிய கவுன்சிலர்கள் வரை 12 ஊராட்சிமன்றத் துணைத் தலைவர்கள், 2 ஊராட்சி மன்ற தலைவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று புஸ்ஸி ஆனந்த் குறிப்பிட்டிருக்கிறார்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

இந்த நிலையில் சென்னையில் உள்ள பனையூரில் அமைந்திருக்கக் கூடிய விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் விஜயின் புகைப்படத்தையும், விஜய்யின் கொடியையும் பயன்படுத்தி போட்டியிட்ட வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் வந்திருக்கிறார். இவர்கள் அனைவரையும் சந்தித்து நடிகர் விஜய் மக்களிடம் எவ்வாறு வாக்குகள் சேகரிக்கிறார்கள், வெற்றி பெற்ற பிறகு மக்களை எப்படி அணுகவேண்டும் என்பது குறித்து பல்வேறு விஷயங்களை அவர்கள் மத்தியில் உரையாற்றி இருக்கிறார்.
பிறகு அனைவருடனும் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட நடிகர் விஜய் குழு புகைப்படத்தில் நடுவில் அமராமல் ஓரத்தில் அமர்ந்து இருந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..


இது குறித்து விஜய் ரசிகர்களிடம் கேட்டபோது நடிகர் விஜய்-க்கு அரசியல் குறித்து தற்போது ஆர்வம் இல்லை. இதை கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி வெளிப்படுத்தி வருகிறார் நடிகர் விஜய். இதன் ஒரு பகுதியாகத்தான் குழு புகைப்படத்தின் நிர்வாகிகள் பலர் நடுவில் அமர சொல்லி வற்புறுத்திய போதும் ஓரத்தில் அமர்ந்து தன்னுடைய அரசியல் நிலையை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று கூறினார்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.