எதிர்ப்பதற்கும் தகுதி வேணும் – அறிவாலயம் கொடுத்த அட்வைஸ் !

0

கொரோனா நோய்த்தொற்று தமிழ்நாட்டில் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு துறை அமைச்சர்களும் தங்கள் துறை பணிகளை மேற்கொள்ளத் தொடங்கி விட்டனர். இந்த நிலையில் திமுகவினர் மீது அதிமுகவினர் அவ்வப்போது விமர்சனங்களை வைத்தாலும் அதைக் கடந்து சென்று சென்றுவிடுகின்றனர். ஆனால் தற்போது பிஜேபியினர் திமுக அமைச்சர்கள் மீது வைக்கக்கூடிய விமர்சனம் முக்கிய பேசுபொருளாக மாற்றப்படுகிறது என்றும், அதற்கு அமைச்சர்கள் பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு செல்லப்படுவதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் திமுகவில் தலைமை அமைச்சர்களுக்கு முக்கிய அட்வைஸ் ஒன்றை வழங்கி இருக்கிறதாம். அது என்னவென்றால் அமைச்சர்கள் பதில் அளிக்க விரும்பினால் அதிமுகவினரின் கருத்துக்களுக்கு பதில் அளியுங்கள், தமிழக பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏதேனும் கூறினால் அந்த கருத்தை விட்டு விடுங்கள், அவர்களுக்கு பதில் அளித்து நாமே அவர்களை வளர்த்து விட வேண்டும் என்று கூறி விட்டதாம்.

மேலும் அவசியம் பதிலளிக்க வேண்டும் என்று அமைச்சர்கள் விரும்பினால், திமுகவில் சில குறிப்பிட்ட நிர்வாகிகளை கொண்டு மட்டும் பதில் அளிக்க செய்யுங்கள். அமைச்சர்கள் நேரடியாக அவர்களுக்கு பதில் அளிக்க வேண்டாம் என்று கூறிவிட்டாதாம்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.