டிடிவி குடும்ப நிகழ்ச்சியில் ஓபிஎஸ் தம்பி – அணி மாறுகிறாரா ஓபிஎஸ் – அதிமுகவில் சலசலப்பு !

0

ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சசிகலாவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் என்ற கருத்து எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் தற்போது சொல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வம் சசிகலாவை கட்சிக்குள் அனுமதிப்பது பற்றி பொதுக்குழு தான் முடிவு செய்யும் என்று கூறினார். எடப்பாடி பழனிசாமியோ சசிகலாவை பற்றி சிந்திக்கவே இல்லை. ஊடகங்கள் தான் சசிகலாவை பற்றி பேசி அவரை வளர்த்து விடுகிறார் என்று கூறினார். இப்படி எடப்பாடி பழனிச்சாமி பேசுவதற்கு முரணாகவே ஓ பன்னீர்செல்வம் பேசிவருகிறார்.

இந்த நிலையில் தஞ்சாவூரில் நடைபெற்ற டிடிவி தினகரனின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதையடுத்து இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள தேவர் ஜெயந்தி விழாவில் சசிகலாவை ஓபிஎஸ் சந்திக்க உள்ளார் என்ற தகவலும் இன்று நடைபெற்ற டிடிவி தினகரன் குடும்ப நிகழ்ச்சியில் பேசப்பட்டது.


இதனால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒருவேளை சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைந்தாலும் அனைத்து மாவட்ட செயலாளர்களின் ஆதரவும் எடப்பாடி கே பழனிச்சாமிகே இருப்பதாகவும், இதனால் எடப்பாடி எடுப்பதை இறுதி முடிவாக இருக்கும் என்றும் கூறுகின்றனர் எம்ஜிஆர் மாளிகையில் உள்ள ரத்தத்தின் ரத்தங்கள்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.