ரசிகர்களுடன் சூர்யா நெகிழ்ச்சி சந்திப்பு!

அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத்தின் சார்பில்  நடைபெற்ற ஃபோட்டோ ஷூட் நிகழ்வில் 25 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2,000 ரசிகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ரசிகர்களைச்  சந்தித்த சூர்யா ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து, அவர்களின் நலன் குறித்து விசாரித்ததுடன், ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்பை முதன்மையாகக் கருதி, ஒழுக்கத்துடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்றும் அன்புடன் அறிவுறுத்தினார். தனித் தனியாக ஃபோட்டோ எடுத்து உற்சாகப்படுத்தினார்.

சூர்யாவின் இந்த எளிமையான அணுகு முறையும், ஒவ்வொரு ரசிகரையும் தனிப்பட்ட முறையில் நலம் விசாரித்த விதமும் அங்கு திரண்டிருந்த ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

—   ஆண்டவர்

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.