அவர்  எச்சிலை துப்பினாள் – பிரசாதம் – பாக்கியம் – அதிர்ஷ்டம் – மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பின்னால் சுற்றி திரியும் டிடிவி தினகரன் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பின்னால் சுற்றி திரியும் டிடிவி தினகரன் ! நிலைத்திருக்கும் பேரறிவு படைத்தவர்கள் சித்தர்கள். சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்றும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. மருத்துவத்தோடு யோகம், சோதிடம், மந்திரம், இரசவாதம் போன்ற அரிய அறிவியலையும் தந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

தொப்பி அம்மா
தொப்பி அம்மா

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

பரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடம்பு தான் பரமாத்மாவின் இடம் ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு ,  உன்னுள்ளும் இருப்பான் என்னுள்ளும் இருப்பான்.  உருவம் இல்லா உண்மை அவன். இதை உணர்ந்தார் இங்கே உலவுவதில்லை தானும் அடைவார் அந்நிலை தன்னை. என்பது சித்தர்களின் கொள்கை.

அந்த வகையில்  திருவண்ணாமலையில் சுற்றி திரியும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை அவ்வபோது சித்தர் என  பிரபலப்படுத்தி விட்டு செல்கிறார்  பிரபல அரசியல்வாதியான டிடிவி தினகரன் என்கிறார்கள் அண்ணாமலையார் பக்தர்கள்

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக அண்ணாமலையார் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தபிறகுதான்  வேட்புமனு தாக்கல் செய்தார்.  தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் தேனி தொகுதியில் வெற்றி பெற மீண்டும் திருவண்ணாமலை  கோயிலில் சாமி தரிசனம் செய்தவர் அருகில் உள்ள ஒரு ஆசிரமத்தில் சுற்றி திரிந்தவர்  பின்னால் சுற்றிய  நிகழ்வுதான் தற்போது பேசுபொருளாகி உள்ளது.

தொப்பி அம்மா
தொப்பி அம்மா

பழனியம்மாள் என்ற தொப்பி அம்மா

தர்மபுரி மாவட்டத்திற்குட்பட்ட ஜக்க சமுத்திரம் கிராமத்தில் பழனியம்மாள் என்ற பெண் தனது பெற்றோர்கள் உடன் பெங்களூருக்கு வேலைக்கு செல்கிறார்  ஒருகட்டத்தில் தன் உடன்பிறந்த தம்பி இறந்துவிட  அதனால் மனநோயால் பாதிக்கப்பட்டு பெங்களுருவில் சுற்றிக்கொண்டிருந்தவர் தற்போது திருவண்ணாமலை கிரிவலப்பாதையிலும் யோகி ராம் ஆசிரமத்திலும்  சுற்றி  வருபவரை சிலர் பெண் சித்தர்  தொப்பி அம்மா என கொளுத்தி போட இந்த மனநோயாளி பின்னால் எப்போதும் 10 பேர் சுத்திக் கொண்டு இருக்கின்றனர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தொப்பி அம்மா என்ற பழனியம்மாளை இயக்கும் கும்பலில் சில வெளிநாட்டவர்களும் அடக்கம்  இதற்கிடையில் இந்த கும்பல் ஜக்க சமுத்திரம் சென்று பழனியம்மாள் குடும்பத்தினரிடம் தொப்பி  அம்மாளை நாங்கள் ஜீவ சமாதி ஆக்கி விடுகிறோம் எங்கள் ட்ரஸ்டிக்கு  எழுதி கொடுங்க என்று மிரட்ட அதற்கு நாங்கள் மறுத்து விடுட்டதாக ஒரு யூடியூப் சேனலுக்கு பழனியம்மாள் குடும்பத்தினர் கூறி உள்ளனர் . அவர்  எச்சிலை துப்பினாள் அதுவே  பிரசாதம்  என்றும்   அவர் யாரையாவது பார்த்து எச்சில் துப்பி அது அவர்கள் மீது விழுந்தால் பாக்கியம், அதிர்ஷ்டம் என உடன்  சற்றும் கும்பல் கதை கட்டி வருவதாக கூறுகின்றனர்.

இந்த நிலையில் டிடிவி தினகரன்  தற்போது தொப்பியம்மா என்கிற மனநோயாளியை  மே- 25 ஆம் தேதி  கிரிவலப்பாதையில் உள்ள யோகி ராம்  சூரத்குமார் ஆஸ்ரமத்தில் பெண் சித்தர் என  வியந்து  பரவசமானவர்  தன் மீது எச்சில் துப்புவார் என அவர் பின்னாலயே சுற்றி சுற்றி வந்த டிடிவி தினகரனின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மூக்கு பொடி சாமியார்
மூக்கு பொடி சாமியார்.

முன்னதாக 2017 ஆண்டில்  மனநிலை பாதிக்கப்பட்ட பெரியவர் ஒருவரை சித்தர் என அடிக்கடி  வந்து சந்தித்து சென்றார் டிடிவி தினகரன் இவரால் பிரபலமானவர்தான் மூக்கு பொடி சாமியார், மூக்குபொடி போட்டுக்கொண்டு காவி உடையணிந்து திருவண்ணாமலையில் சுற்றித்திரிந்தவரை ஒரு   கடைக்காரர்  மூக்குபொடி  சாமியார்  அவர் என கொளுத்தி போட  அவரே மூக்குபொடி சித்தர் என அழைக்கப்பட்டார்.

அவர் கையில் வைத்துள்ள கம்பால் அடி வாங்கி ,  திட்டு வாங்கினால்  நினைத்ததெல்லாம்  நடக்கும், செல்வம் பெருகும் என அவரோடு சுற்றிய  கும்பல் கதை கட்ட  அதை நம்பி வெளிமாநிலங்களில் இருந்தெல்லாம் பக்தர்கள் படையெடுக்க துவங்கினர்.

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை வணங்கும் டிடிவி தினகரன்
மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை வணங்கும் டிடிவி தினகரன்

அப்படி 2017 ல் மூக்குபொடி சாமியாரை தரிசிக்க படையெடுத்து ஆசீர்வாதம் வாங்க  வந்து இழவு காத்த கிளியாக காத்து விட்டு கண் பார்வை பட்டதே போதும் என்று சென்றவர் தான் இந்த டிடிவி தினகரன் , தற்போது 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை சித்தர் என நம்பி வந்துள்ளார்  என்கின்றனர்

பக்தி என்கிற பெயரில் மனநோயாளிகள் பின்னால் சுற்றும் இவரை போன்றோர் மனநோயாளிகளா ?  பக்தி என்கிற பெயரில் மனநோயாளிகளையும், பிச்சைக்காரர்களையும் சாமியார் சித்தர் என விளம்ப்படுத்தி காசு சம்பாதிக்கும் கும்பலுக்கு இவரை போன்ற  பிரபலங்கள் துணை போகலாமா என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

– மணிகண்டன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.