சவுக்கு சங்கர் என்பவர் யார் ? அவரது குரல் யாருக்கானது ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சவுக்கு சங்கர் என்பவர் யார் ? அவரது குரல் யாருக்கானது ? ஒருங்கிணைந்த முறையில், முழுமையான கண்ணோட்டத்தில் எளிமையான உதாரணங்களோடு விளக்குகிறார் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலாளராக நீண்டகாலம் பதவி வகித்தவரும் இடதுசாரி செயற்பாட்டாளருமான தோழர் மருதையன். சவுக்கு சங்கர் குறித்து டிரைப்ஸ் யூட்யூப் சேனலில் அவர் அளித்திருந்த நேர்காணலில் இருந்து முத்தாய்ப்பான சில பகுதிகள்.

சவுக்கு மேட்டர் எல்லாம் நீங்க பேசனுமானு நண்பர்கள் கேட்டார்கள். சவுக்கைப் பற்றி பேசுவதை காட்டிலும், சவுக்கு என்ற நபர் அவரின் செயல்பாடுகள் குறித்து நன்கு அறிந்தும் அறிஞர்கள் என்ற அறிந்த சிலர் சவுக்கு சங்கரின் கருத்துரிமைக்காக பேசுகிறார்கள். அவர்களுக்காகவே பேச வந்தேன்.

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

இதில் என்ன கருத்துரிமை? அந்த குறிப்பிட்ட அதிகாரியை காட்டிலும், கீழ்நிலை போலீசார்கள் தங்களது ஆதாயத்துக்காக தங்களை ஒப்புவிக்கிறார்கள் என்று பெண்களைத்தான் இழிவுபடுத்தி கேவலப்படுத்தி பேசியிருக்கிறார்.

அரசியல்வாதிகளைப்போல, அதிகார வர்க்கத்திலும் ஒருத்தருக்கு எதிராக ஒருத்தரை போட்டுக்கொடுப்பது என்பது நடக்கும். காசு கொடுத்து செய்தியை வரவழைப்பார்கள். அதனடிப்படையில், சவுக்கு கூலிக்கு வேலை செய்யும் ஆள். அவர் காசு கொடுத்தா அவருக்கு பேசுவாரு. இவர் காசு கொடுத்தா இவருக்கு பேசுவாரு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

RED-FiX
RED-FiX

சவுக்கு சங்கரை ஆதரிப்பவர்கள் இது காவல்துறையின் அடாவடி நடவடிக்கை என்கிறார்கள். அவர்களின் கருத்து மிகவும் கேவலமாக இருக்கிறது. மோடி கருத்துரிமையை பறிப்பதுபோல, ஸ்டாலினும் கருத்துரிமையைப் பறிக்கிறார் என்கிறவர்கள்; பிஜேபியும் திமுகவும் ஒன்றுதான் என்கிறவர்கள்; கண்டிப்பாக பிஜேபியின் பி – டீம்தான்.

மோடிக்கு எதிராக பேசியவர்கள், எழுதியவர்கள் எத்தனை பேர் ஊடகத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள், தாக்கப்பட்டிருக்கிறார்கள், கொல்லப்பட்டிருக்கிறார்கள். பெரிய லிஸ்ட் இருக்கிறது. இதையும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதையும் வைத்துக்கொண்டு இரண்டும் ஒன்றுதான் என்று ஒருத்தன் எழுதுகிறான் என்றால், ஒன்று அவன் மெண்டல் ஆக இருக்கனும். இல்லை நேரடியாக கைக்கூலியாக இருக்கனும்.

நீதி என்றால் எல்லாருக்கும் பொதுவாகத்தானே இருக்க வேண்டும். எல்லோருக்கும் கருத்துரிமை வேண்டும் என்கிறார்கள். பாசிஸ்டுகள் பொய்ச்செய்திகளைப் பரப்புவார்கள். அவை வெறும் கருத்துப்பிரச்சாரமாக இல்லாமல், வன்முறைக்கான முன் ஏற்பாடாகவே இருக்கும்.

தூத்துக்குடியில் ஒரே ரவுண்டுதான் சுட்டார்கள். எதிர்பாராமல் நடந்துவிட்டது என்றார் சவுக்கு சங்கர். அந்த பச்சை ரத்த படுகொலையை நியாயப்படுத்தினார்கள்.

சவுக்கு சங்கர் கார்
சவுக்கு சங்கர் கார்

சிறீமதி வழக்கில் என்ன பேசினார்? பொண்ணுக்கு லவ் இருக்கு. அந்த அம்மாவுக்கு அஃபயர்ஸ் இருக்குன்னு அந்த கொலையை நியாயப்படுத்தினார். ஸ்டெர்லைட் வழக்கில் மறுபிரேத பரிசோதனை கோரிக்கை வைத்தோம். அப்போது பிணத்தை வைத்து ம.க.இ.க. அரசியல் செய்கிறது என்றார். இதன் பொருள் என்ன? உயர்போலீசு அதிகாரிகளிடம் காசு வாங்கிக்கொண்டு குறைக்கிறார் என்பதுதானே? ராம்குமார் விசயத்திலும் இதுதான் நடந்தது.

பச்சைபொய்கள் பிரச்சாரம் செய்கிறார். திரும்பத் திரும்ப பொய் என்று நிரூபணம் ஆகிறது. இத்தனையும் நிரூபணம் ஆனபின்பும் அவருக்கு கருத்துரிமை உண்டு. அது அந்த செக்சன்ல வராது, இந்த செக்சன்ல வராதுனு என்ன நினைச்சிட்டு பேசுறாங்க, இவங்க? என்ன செக்சன்ல போடனுமாம்? பத்மஸ்ரீ பட்டம் கொடுக்கனுமா?

சவுக்கு போன்ற நபர்களோ, இந்த செக்சன் பேசுகிற ஆட்களோ ரேவண்ணாக்காக வாதாட்டும். இது மனது ஒத்த செக்ஸ்தான். ரேப்னு எப்படி சொல்றீங்கன்னு? இதுபோலதான் இருக்கிறது இவர்கள் பேசுவது.

பெண்களை இழிவுபடுத்துவது மட்டுமில்லை; மக்களுக்கு எதிரான கருத்துக்களைத்தான் இவர் பேசிட்டு இருக்காரு. அல்லது கூலிப்படை போல, ஒரு தரப்புக்காக பேசிட்டிருக்காரு. இதுல செக்சன்தான் பிரச்சினையா? வெட்கக்கேடா இருக்கிறது. கேவலமா இருக்குது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஆர்டிகல் 19 (1) ஏ இருக்கிறது பி இருக்கிறது. ஏ-இல் கருத்துரிமை இருக்கிறது. பி – யில் துடைப்பக்கட்டையால் அடிக்கிற உரிமை இருக்கிறது. நியாயமாக, எனது கருத்துப்படி, செக்சன் போடுவதைக் காட்டிலும் சவுக்கு சங்கர் அதை ஒளிபரப்பிய ரெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு முன்பு, பெண் காவலர்கள் அல்லது பெண் காவலரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கையில் செருப்போட முற்றுகையிடனும். அமைதிவழியில் போராட உரிமை உண்டு. இவரது கருத்துக்கள், செருப்பைக் காட்டுவதை காட்டிலும் கொடிய வன்முறையாகத் தெரியவில்லையா என்று கேட்கிறேன்.

சவுக்கு சங்கர்...
சவுக்கு சங்கர்…

எடப்பாடிக்கும் கருத்துரிமைக்கும் என்ன சம்பந்தம்? ஸ்டெர்லைட்டுக்கு இவர் பேசினாரு. இப்போ சவுக்கு சங்கர் ஓனர் பேசியிருக்காரு. அவ்ளோதான்.

பத்திரிகையாளர்களுக்கு எல்லா துறைகளிலும் சோர்ஸ் நிறைய இருக்கும். அரசியல் கட்சி தலைவர்களோடும் பழக்கம் இருக்கும். பத்திரிகையாளராக, நேர்மையான பழக்கமாக தொடர்பவர்கள் பலர். இந்த நட்பை பயன்படுத்தி சிலர் புரோக்கர் வேலை செய்கிறார்கள்.

இதுபோன்ற நபர்களுக்கு சில உண்மைகள் தெரியும். அல்லது அரை உண்மைகள் தெரியும். அதை பேசுவதாலேயே, போராளிகளும் அல்ல; எதிர்க்கட்சித் தலைவரும் அல்ல; பத்திரிகையாளரும் அல்ல; அதைவைத்து காசு பன்றதுதான் அவர்களது நோக்கம். இந்தப்பக்கம் எடப்பாடிக்காக பேசுகிறேன் என்கிறார். இப்போ உங்களுக்காகத்தான் வேலை பார்க்கிறேன் என்று திமுக பக்கம் பேசுகிறார். இப்படிப்பட்ட நபருக்காக, கருத்துரிமைக்காக பேசுகிறேன் என்று ஒருவர் சொன்னால், அது மானக்கேடு. இதற்குமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

நீங்க சொல்றதுலாம் கரெக்ட்டுதான் சார். சவுக்கு ரொம்ப போல்டா பேசுறாருனு பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். பேசுற விதம், பேசுற விசயம் இதிலெல்லாம் சிக்கல் இருக்கிறது. நிறைய பொய்களை அவிழ்த்துவிடுகிறார். மோடி பேசுவதை போல. இதில் எது உண்மை, எது பொய் என்று பிரித்தறிய முடியாத பாமரர்கள் உண்மை என்று நம்புகிறார்கள். பொய்யை உண்மையால் எதிர்கொள்ளுங்கள் என்கிறார்கள். ஒரு வெங்காயமும் எதிர்கொள்ள முடியாது.

சவுக்கு சங்கர் மூவர் கூட்டணி
சவுக்கு சங்கர் மூவர் கூட்டணி

பொய் என்பது அரசு அதிகாரத்தில் இருக்கிறது. பணபலத்தோடு இருக்கிறது. அதிகார பலத்தோடு இருக்கிறது. இசுலாமிய எதிர்ப்பு பேசவில்லை, ஆனால் பிஜேபி வரட்டும்னு சவுக்கு பேசுறாரு. பிஜேபிக்கு எப்படியெல்லாம் உதவமுடியுமோ, அப்படியெல்லாம் பேசுறாரு. ஒருத்தரு திமுகவும் பிஜேபியும் ஒண்ணுனு பேசுறாரு. இதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

எனக்குத் தெரிந்தவரையில் ரெட்பிக்ஸ்தான் சவுக்கை உருவாக்கியது என்பது என் கருத்து. ஒரிஜினல் சவுக்கு மீடியா அவருதான். ரெட்பிக்ஸ் எல்லா பொய்களையும் பிரச்சாரம் செய்வதற்கான ஒரு மேடையாக இருந்திருக்கிறது. திமுகவுக்கு எதிரான அவதூறு பிரச்சாரம் செய்வதற்கும், பிஜேபிக்கு மறைமுகமாக வேலை செய்வதற்கும் அந்த ஊடகம் தளமாக பயன்பட்டிருக்கிறது. பெலிக்ஸ்சும் சவுக்கும் ரெட்டையர்கள். சவுக்கு பொய் சொல்லமாட்டார். காசுவாங்க மாட்டார். நேர்மையானவர் என்கிறார் பெலிக்ஸ். வேலிக்கு ஓணான் சாட்சி.

சவுக்கை ஆதரித்து நிற்கும் ஆண்மை பெலிக்ஸ்-க்கு மட்டும்தான் இருக்கு. மிச்சம் பேரெல்லாம், அவங்க மொழியில் சொல்வதென்றால் பொட்டை. இது நான் சொல்லலை. அவர் சொல்லியிருக்கிறது.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்

ரெண்டு வருஷத்துல, சவுக்கு, பெலிக்ஸ் ரெண்டு பேரும் பேசுனத ஒரு பேப்பர்ல எழுதினாக்க அது எப்படி இருக்கும்னு பார்த்தா, பார்க்கிறவன் மென்டல் ஆகிடுவான். கிசு கிசு ரசனைக்காக டெய்லி ஒன்னு பார்த்துட்டு போக வேண்டியதுதான். அது ஒரு கருத்தை உருவாக்குகிறது. திமுகவுக்கு எதிரான கருத்து. மறைமுகமாக, அல்லது நேரடியாக பிஜேபிக்கு ஆதரவான கருத்து. இந்த அஜெண்டாவுக்காகத்தான் இவர்கள் வேலை செய்கிறார்கள். அந்த நோக்கத்துக்காக வேலை செய்பவர்களை ஆதரிப்பவர்கள் நேரடியாக, எதிரிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக இருக்கிறார்கள்.

அண்ணாமலைக்கும் சீமானுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். காரணம் கேட்டால், சவுண்டா பேசுறாரு. கெத்தா பேசுறாரு. அதுபோல சவுக்கு சங்கரையும் கருதுகிறார்கள்.

தோழர் மருதையன்

டிரைப்ஸ் யூட்யூப் சேனல்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.