அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘மெஸன்ஜர்’ 

திருச்சியில் அடகு நகையை விற்க

தயாரிப்பு: ‘பி.வி.கே.; பிலிம் ஃபேக்டரி’ பா.விஜயன், டைரக்டர்: ரமேஷ் இலங்காமணி. ஆர்ட்டிஸ்ட்: ஸ்ரீராம் கார்த்திக், மனிஷாஸ்ரீ, ஃபாத்திமா நஹீம், வைஷாலி ரவிச்சந்திரன், லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ராஜ்குமார், ஜீவா ரவி. ஒளிப்பதிவு: பால கணேசன், இசை: அபுபக்கர், எடிட்டிங்: பிரசாந்த், எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர்: முனிஷ், தமிழ்நாடு ரிலீஸ்: ஆக்சன் ரியாக்சன் ஜெனிஷ், பி.ஆர்.ஓ. : சதீஸ்வரன்.

மனிஷாஸ்ரீயை டீப்பாக லவ் பண்றார் ஸ்ரீராம் கார்த்திக். அதே டீப்பில் மனிஷாவும் லவ் பண்ணிட்டு, அப்பா – அம்மா பார்க்கும் மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டி, ஸ்ரீராமுக்கு “டாடா” காட்டிட்டு போய் விடுகிறார். இதனால் மனம் நொந்து போய் தூக்குப் போட்டு ஸ்ரீராம் சாகப் போகும் போது ” சாகாதிங்க” என செல்போன் மெஸன்ஜரில் ஒரு இளம் பெண் மெசேஜ் அனுப்புகிறாள். நீ யாரு என ஸ்ரீராம் கேட்க, “என் பேரு ஆனந்தி. நான் ஆக்சிடென்ட்ல செத்து ஆறுமாசமாச்சு. உங்கள் ஃபேஸ்புக் ஃபிரண்ட்” என்கிறார். இதைக் கேட்ட ஸ்ரீராம் அதிர்ச்சியாகிறார். செத்துப் போன ஆனந்தியைத் தேடி அவரின் ஊருக்கு போய் விசாரிக்கிறார்கள் ஸ்ரீராமும் இன்ஸ்பெக்டர் லிவிங்ஸ்டனும். அந்த ஆனந்தி ஆவியா? இல்லையா? என்பதற்கு முதலியே விடை தெரிந்துவிடுகிறது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

மெஸன்ஜர்ஆனாலும் பரவாயில்லையே லைன் நல்லாருக்கேன்னு நாம லேசா நிமிர்ந்து உட்கார்ந்தோம். அதுக்கு தோதா ஆனந்தி(ஃபாத்திமா நஹீம்) யின் ஃப்ளாஷ் பேக்கை சொல்கிறார் அவரின் தோழியான வைஷாலி ரவிச்சந்திரன். “ஆவிகளுடன் பேச நினைப்பவர்களுக்கு ஒரு மெஸென்ஜர் இருப்பார். பிளாக் போர்டில் ஏபிசிடி, 1,2,3,4 ன்னு எழுதி அதுல ஒரு டம்ளரைக் கவுத்து நகட்டிக்கிட்டே போய் ஆவியின் பேரு, ஊரு, அட்ரஸ் எல்லாம் கேப்பாய்ங்க. இது டிஜிட்டல் வோல்டு ஆவிங்கிறதால மெஸென்ஜர் வழியாக கனெக்ட் பண்ணிட்டார் டைரக்டர் ரமேஷ் இலங்காமணி.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஆனால் ஸ்கிரிப்ட் ரொம்ப ரொம்ப ஸ்லோவா நகர்ந்து நம்ம பொறுமையை சோதிக்க ஆரம்பித்து விட்டது. லவ்வர் மனிஷா கம்பி நீட்டியதும் சோக சித்திரமாக மாறும் ஸ்ரீராம் கார்த்திக், முக்கால் வாசி படத்தில் அப்படியே தான் இருக்கார். ஃபாத்திமா ஆவியின் ஃப்ரண்ட்ஷிப் கிடைச்சதும் கொஞ்சம் சிரிக்கிறார். எக்ஸ் மனிஷா வந்ததும் இன்னும் கொஞ்சம் சிரிக்கிறார்.  படத்தில் மூன்று நாயகிகள் இருந்தாலும் ஃபாத்திமா நஹீம் அவ்வப்போது “மன்னவனே அழலாமா?” ரேஞ்சுக்கு கலர் ஃபுல் வானத்தில் உலாவுகிறார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மெஸன்ஜர்மனிஷாவும் வைஷாலி யும் ஓகே தான். ஸ்ரீராம் கார்த்திக்கின்அம்மாவாக வரும் பிரியதர்ஷினி ராஜ்குமார் பல சீன்களில் ஓவர் எக்ஸ்போஸாகி பகீரூட்டுகிறார். மியூசிக் டைரக்டர் அபு பக்கர் இப்ப தான் டிரெய்னிங் எடுத்துக்கிட்டிருப்பார் போலிருக்கு.லிவிங்ஸ்டனும் மனிஷாவும் வரும் சீன்களில் ஐந்து சீன்களிலாவது காமெடியை கனெக்ட் பண்ணியிருந்தால் ஸ்கிரிப்டின் டெட் ஸ்லோ மறந்து போயிருக்கும். ஆனால் டைரக்டர் அதை பண்ணலையே…நாம என்ன பண்றது? இந்த ‘மெஸன்ஜரின்’ பிரஸ் ஷோவுக்கு பிறகு நடந்த பிரஸ் மீட்டில் பேசியது போலவே படத்தையும் ஸ்லோவா கொண்டு போனா எப்படி டைரக்டரே…?

 

—    ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.