MGR என்ற பிம்பத்தை மேலும் பிரகாசமாக்க உதவிய N.S.இளங்கோ !
புரட்சித்தலைவர் MGR அவர்களின் 102வது பிறந்ததினத்தன்று N.S.இளங்கோ மற்றும் MGR அவர்கள் இடையில் ஆன நட்பு பாலத்தை நினைவு கூறுவதை விட நெதர்லாந்து Leiden பல்கலைக்கழகத்தின் முனைவர் ரூஸ் கெரிஸ்டென் (Dr.Roos Gerristen ) அவர்களின் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டதை இப்போது பதிவிடுவது சிறந்த தருணமாக இருக்கும்.
N.S.இளங்கோ சார்ந்து இருந்த திராவிட முன்னேற்ற கழகத்தையும் கழக கொள்கைகளையும் அடித் தட்டு மக்கள் வரை கொண்டு சேர்க்கும் விதமாகவும் கட்சியை வளர்க்கவும் MGR என்ற மிக சிறந்த நடிகரை அவர் புகழ் வளர்க்கும் விதமாய் தன்னுடைய சொந்த செலவில் மக்களை திரை அரங்குகளுக்கு இலவசமாக அழைத்து சென்று அவர் தோன்றும் காட்சிகளில் கரஒலி எழுப்பியும் ஆரவாரம் செய்ய சொல்லியும் MGR என்ற பிம்பத்தை மேலும் பிரகாசமாக்க பெரிதும் உதவியாக இருந்தார் என்றும் முனைவர் ரூஸ் கெரிஸ்டென் (Dr .Roos Gerristen ) அவர் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார். இது எனது தந்தையார் புரட்சித் தலைவர் MGR அவர்களின் மீது கொண்ட அளவற்ற நட்பையும் பாசத்தின் வெளிபாட்டையும் எடுத்து காட்டுகிறது. என்று தன் தந்தையின் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்… பிஜேபியில் தரவுமேலாண்மை பிரிவில் மாநில செயலாளராக இருக்கும் சிட்டிபாபு .
சான்றாதாரம் ஆய்வறிக்கையின் இணைப்பு
https://openaccess.leidenuniv.nl/bitstream/handle/1887/20107/introduction.pdf?sequence=5