மு.க.அழகிரி வீட்டில் – மு.க.ஸ்டாலின் மகன் ! திடீர் சந்திப்பு !

0

மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியை உதயநிதி ஸ்டாலின் அவரது இல்லத்தில் சந்தித்தார்

நாளை அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டை பார்வையிடுவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம்.மதுரை வந்த தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சரும் முதல்வர் ஸ்டாலினின் அண்ணனுமான மு.க.அழகிரி சந்திக்க வருகிறார்.

அழகிரி வீட்டில் உதயநிதி
அழகிரி வீட்டில் உதயநிதி

முக அழகிரி அவரது வீட்டு வாசலில் பேசியபோது அமைச்சர் உதயநிதி சந்திக்க வருகிறாரா? என்ற கேள்விக்கு

பெரியப்பாவை பார்க்க தம்பி மகன் வருகிறார். என மு.க. அழகிரி கூறினார். இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ் ஆகிய இருவரும் முக அழகிரி வீட்டிற்கு வந்தனர் வரவேற்று சால்வை அணிவித்தனர்மற்றும் முக அழகிரி மனைவி காந்தி அழகிரி உதயநிதி ஸ்டாலினுக்கு முத்தமிட்டு மகிழ்ச்சி பொங்க வரவேற்றார் உதயநிதி ஸ்டாலின் முக அழகிரிக்கு சால்வை அணிவித்தார்.

ஷாகுல்.
படங்கள்: ஆனந்த்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.