2024 எம்பி எலெக்ஷன் தமிழகத்தில் களமிறங்கும் மோடி…  திமுக, அதிமுக ‘ஷாக்’ பாஜகவின் புதிய டார்கெட்

0

2024 எம்பி எலெக்ஷன் தமிழகத்தில் களமிறங்கும் மோடி…  திமுக, அதிமுக ‘ஷாக்’ பாஜகவின் புதிய டார்கெட்

2023 புத்தாண்டு பிறந்த முதல் நாளில் மதிமுகவின் வளைகுடா நாடுகளின் பொறுப்பாளர் வல்லம் பசீர் தன் முகநூல் பதிவில்,‘தான் கலந்துகொண்ட இணைய வழி நேர்காணலின்போது, தமிழ்நாட்டின் இராமநாத புரம் தொகுதியில் தலைமைய மைச்சர் போட்டியிடுகிறார் என்ற செய்தி கிடைத்துள்ளது என்றதும். வரட்டும். போட்டியிடட்டும்’ என்று பதில் அளித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். 05.01.2023 நாளிட்ட தினகரன் நாளிதழில் மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ,‘ நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் நாட்டில் மோடி எங்கே போட்டியிட்டாலும் தோல்வி உறுதி’ என்று கூறியுள்ள செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

https://businesstrichy.com/the-royal-mahal/

தமிழ்நாட்டில் மோடி : அமித்ஷா முடிவு
இந்நிலையில், தலைமையமைச்சர் மோடி வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் உ.பி.மாநிலம் வாரணாசியிலும், தமிழ் நாட்டில் இராமநாதபுர த்திலும் போட்டியிடு கிறார் என்ற தகவல் அரசியல் களத்தில் உலா வருகின்றது என்றாலும் இதை மாநிலப் பாஜக உறுதிப்படுத்தவில்லை. 2024ம் ஆண்டு நடைபெற வுள்ள மக்களவைத் தேர்தலின் வியூகங்களை அமைப்பதிலும் வெற்றியை ஈட்ட வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருபவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா. மோடி தமிழ்நாட்டில் போட்டியிடுகிறார் என்ற தகவல் அமித்ஷா மூலம்தான் ஊடகங்களில் கசியவிடப்பட்டது என்ற தகவலும் கிடைத்துள்ளது. என்றாலும் மதிமுகவின் துரை வைகோ தமிழ்நாட்டில் மோடி போட்டியிடுவது குறித்த தகவலைப் புறந்தள்ளிவிட முடியாது என்பதும் உண்மையே.

பிரதமர் நரேந்தர மோடி
பிரதமர் நரேந்தர மோடி

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

இராமநாதபுரத்தில் மோடி போட்டி ஏன்?
தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதி கள் உள்ளன. பாஜக எளிதில் வெல்லும் என்ற நிலையுள்ள கன்னியாகுமரித் தொகுதியில் மோடி போட்டியிட்டால் வெற்றி நிச்சயம். ஆனால் அமித்ஷா ஏன் இராமநாதபுரத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பதில்தான் சுவராஸ்யம் அடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களின் கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் சார்பில் நின்று 44% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

இத்தொகுதியில் பாஜகவின் சார்பில் அதிமுக கூட்டணி யில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் 32% வாக்குகளைப் பெற்றுள்ளார். 1.25 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் பாஜக வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. இஸ்லாமிய வெறுப்பை விதைத்து அறுவடை செய்வதையே வழக்கமாகக் கொண்ட பாஜக, மோடி இராமநாதபுரத்தில் போட்டியிடுவதன் மூலம் தமிழ்நாட்டு மக்களிடம் இஸ்லாமிய வெறுப்பை விதைத்து இந்துக்களை ஓரணியில் திரட்ட முடியும் என்ற பெருத்த நம்பிக்கையில்தான் அமித்ஷா இந்த முடிவை எடுத்துள்ளார் என்ற தகவலும் அரசியல் களத்தில் நிலவுகின்றது. அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாகப் பிளவுபட்டுள்ள வேளையில் மோடி தமிழ்நாட்டில் போட்டியிட்டால் அதிமுக வாக்கு வங்கியைச் சரியச் செய்து, பாஜகவில் சேர்த்துக்கொள்ளலாம் என்ற நினைப்பும் இதற்குக் காரணம் என்று சொல்லாம்.

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி
இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி 1.அறந்தாங்கி (புதுக்கோட்டை) 2. திருச்சுழி (விருதுநகர்) 3.பரமக்குடி (தனி), 4. திருவாடனை 5. இராமநாதபுரம் 6.முதுகுளத்தூர் (இவை அனைத்தும் இராமநாதபுரம்) என்ற 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாகும். மேலும் இத்தொகுதியில் 2009 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவின் சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் திருநாவுக்கரசர். (தற்போதைய திருச்சி எம்.பி.) 1951ஆம் ஆண்டு தொடங்கி 2019ஆம் ஆண்டு வரை இத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி 6 முறை வென்றுள்ளது. அதிமுக 4முறை வென்றுள்ளது. திமுக 3 முறை வென்றுள்ளது. பார்வார்டு பிளாக்கு கட்சியின் சார்பில் பா.கா.மூக்கைய்யா தேவர் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளார். தமிழ் மாநிலக் காங்கிரஸ் ஒரு முறை வென்றுள்ளது. முகமது செரி சுயேட்சையாக வெற்றி பெற்றுள்ளார். 2019 தேர்தலில் நவாஸ் கனி திமுக கூட்டணியில் வெற்றி பெற்றுள்ளார்.

அண்ணாமலை
அண்ணாமலை

இராமநாதபுரம் மக்களவை தொகுதி வாக்கு வாங்கி
திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்குச் சமமான வாக்கு வங்கி உள்ளது. சாதி அடிப்படையில் முக்குலத்தோர் மற்றும் தேவேந்திரக் குல வேளாளர்களின் வாக்கு வங்கியும் இங்குப் போதுமான அளவில் உள்ளது. மத அடிப்படையில் இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியே இந்தத் தொகுதியின் வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்யக்கூடிய அளவில் உள்ளது. பாஜக ஆதரவு நிலையில் முக்குலத்தோர் சமூகத்தினரும், தேவேந்திரக் குல வேளாளர்களும் உள்ளனர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பாஜகவுக்கு 32% வாக்கு வங்கி உள்ளது. இது அதிமுக கூட்டணியால் கிடைத்தது என்றாலும் மோடி போட்டியிட்டால் திமுகவைத் தோற்கடிக்க அதிமுகவின் இரு அணியினரும் மோடிக்கு உறுதியாக வாக்களிப்பாளர்கள். இதனால் வாக்கு வங்கி 52%ஆக உயர வாய்ப்பு உள்ளதாகத் தேர்தல் கணிப்பாளர்கள் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் தற்போது 7% வாக்கு வங்கியைப் பாஜக கொண்டுள்ளது. மோடி போட்டியிட்டால் பாஜகவின் வாக்கு வங்கி 20%ஆக உயரவும் வாய்ப்புள்ளது. இதனால் அதிமுகவின் இரு அணிகளும் மோடி அலையில் காணாமல் போகவும் வாய்ப்புள்ளது.

திமுகவுக்கு நெருக்கடி (?)
இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராகச் சித்தாந்த ரீதியாகக் களமாடக்கூடிய ஒரே கட்சியாகத் திமுக மட்டுமே உள்ளது. திமுக இந்தியா முழுமையும் சமூகநீதி அடிப்படையில் பாஜகவுக்கு எதிராகத் திராவிட அரசியலை முன்வைக்கின்றது. பாஜக ஆரிய அரசியல் செய்கிறது. மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே நன்மை செய்கிறது. கார்பரேட்டு முதலாளிகளுக்கு உதவியாக இருக்கிறது. உழைக்கும் மக்களுக்கு எதிராக உள்ளது என்ற பிரச்சாரத்தைத் திமுக முன்வைத்துப் பாஜகவைக் கடுமையாக எதிர்த்து வருகின்றது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் தொகுதியில் மோடி போட்டியிட்டால் திமுகவுக்கு அரசியல் சார்ந்து நெருக்கடிகள் அதிகரிக்கும். பதவியில் இருக்கும் பிரதமர் போட்டியிடுகிறார் என்றால் ஒன்றிய அரசின் இயந்திரங்கள் அனைத்தும் களமிறக்கப்படும். சட்டம் ஒழுங்கை ஆளும் திமுக அரசு காப்பாற்ற வேண்டும். இந்து, இஸ்லாமிய மதம் சார்ந்த மோதல் வராமல் பாதுகாத்திட வேண்டும் என்பன போன்ற பல சிக்கல்களில் திமுக மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பிரதமர் மோடி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பிரதமர் மோடி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் ஓட்டுமொத்த ஊடகங்களின் பார்வையும் மோடியின் மீதுதான் இருக்கும். மற்ற கட்சிகளின் மீதான பார்வையை ஊடகங்கள் குறைத்துக்கொள்ளும். மோடி வெற்றி பெற்ற வரணாசி தொகுதியை இலட்சக்கணக்கான கோடிகளைச் செலவு செய்து தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். இந்தத் தாக்கம் இராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டால் இங்கேயும் தொற்றிக்கொள்ளும். மக்களவைத் தேர்தலின்போது ஒன்றிய அமைச்சர்கள் பலரும் பிரச்சாரம் செய்வார்கள். திராவிட மாடல் ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும் என்ற முனைப்போடு பாஜக அதிரடித் தேர்தல் பணியில் இறங்கும் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. திமுக அரசியல் ரீதியாகப் பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் என்பதில் ஐயமில்லை.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

பாஜக குறி வைக்கும் தமிழ்நாட்டின் 10 தொகுதிகள்
பாஜக வடஇந்தியாவில் மட்டும் சுமார் 300 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும், தென்னிந்தியாவில் சுமார் 20 தொகுதியில் மட்டுமே வெற்றி பெறும் என்று தேர்தல் கணிப்பு கூறுகின்றது. வட இந்தியாவில் பீகார், மகாராஷ்டிரா, தில்லி, பஞ்சாப், மேற்கு வங்கம், இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நிலைமைகள் மாறிப் பாஜகவின் வெற்றி குறையும் அபாயம் உள்ளது.

எடப்பாடி கே. பழனிசாமி
எடப்பாடி கே. பழனிசாமி

அங்கே 50 தொகுதிகளை இழந்தால் தென்னிந்தியாவில் 50 தொகுதிகளைப் பெறவேண்டும் என்ற முனைப்போடு பாஜக தேர்தல் பணியைச் செய்துவருகின்றது. தமிழ்நாட்டில் வாரிசு அரசியலை முன்வைத்துப் பாஜக பிரச்சாரம் செய்யும். இது மட்டுமன்றி, கூட்டணி கட்சியான புதிய தமிழகம் சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடும் தென்காசி, கள்ளக்குறிச்சியில் போட்டியிடும் பாரிவேந்தர் வெற்றி பெறவேண்டும். ஊழல் குற்றச்சாட்டு உள்ளான ஆ.இராசா நீலகிரி தொகுதி, சனாதனத்தை எதிர்க்கிறேன் என்று பாஜகவைக் கடுமையாக எதிர்த்துவரும் திருமா போட்டியிடும் சிதம்பரம் தொகுதிகளும் பாஜகவின் ஹாட் லிஸ்ட்டில் உள்ளன. இதனால் விசிக தலைவர் திருமா கடந்த தேர்தலில் மிகக்குறைந்த 3000 வாக்குகளில்தான் சிதம்பரத்தில் வெற்றி பெற்றார். பாஜக காட்டும் கடுமையான எதிர்ப்பை மனதில் கொண்டு, திருமா வரும் 2024 தேர்தலில் சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற தகவலை விசிக வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

திருச்சி அமைச்சர் கே.என்.நேரு மகன் அருண் நேரு பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற தகவலும் உள்ளது. அருண் நேரு போட்டியிட்டால் இங்கேயும் வாரிசு அரசியலுக்கு எதிராகப் பாஜக பிரச்சாரம் செய்து வெற்றி பெற முடிவு செய்துள்ளது.

நெருக்கடிக்கு உள்ளாகும் திமுக தொகுதிகள்
1. வடசென்னை –  ஆற்காடு வீராசாமி மகன்
2. மத்தியச் சென்னை – கருணாநிதி பேரன் தயாநிதி மாறன்
3. தென்சென்னை –  தங்கபாண்டியன் மகள் தமிழச்சி
4. விருதுநகர்  – வைகோ மகன் துரை வைகோ
5. தேனி –  ஓபிஎஸ் மகன்
6. கன்னியாகுமரி – வசந்தக்குமார் மகன்
7. தூத்துக்குடி -கலைஞர் மகள் கனிமொழி
8. கள்ளக்குறிச்சி  – பொன்முடி மகன்
9. வேலூர் -துரைமுருகன் மகன்
10. சிவகங்கை  – சிதம்பரம் மகன் கார்த்திக்

தமிழ்நாட்டில் பாஜகவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்
இராமநாதபுரத்தில் மோடி போட்டியிடுவது குறித்துப் பாஜக மாநிலப் பொறுப்பாளர் அங்குசம் செய்தி இதழிடம் கருத்து தெரிவித்தபோது, “மோடி தமிழ்நாட்டில் போட்டியிடுகிறார். இராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார் என்று மதிமுக தரப்பில்தான் பேசப்படுகின்றது. எங்களுக்குத் தலைமையிலிருந்து அப்படியொரு தகவல்கள் இதுவரை வரவில்லை. பாஜகவின் சாணக்கிய அமித்ஷா தமிழ்நாட்டில் பாஜக குறைந்தது 10 தொகுதியில் வெற்றி பெற்று, இந்தியாவுக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும் என்றுதான் தேர்தல் வியூகத்தை வடிவமைத்து வருகிறார் என்பது மட்டுமே எங்களுக்குத் தெரியும். ஒருவேளை மோடி தமிழ்நாட்டில் இராமநாதபுரத்தில் போட்டியிட்டால் பாஜக உறுதியாக 10 இடங்களில் வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது. மோடி வாரணாசியிலும் இராமநாதபுரத்திலும் போட்டியிட்டால் இரு தொகுதிகளிலும் வெற்றிபெறுவார்.

வாரணாசியிலிருந்து விலகிக் கொண்டு இராமநாதபுரம் மக்களவை உறுப்பினராக மீண்டும் பிரதமராக ஆட்சியில் அமர்வார் என்பதில் எங்களுக்கு ஐயமில்லை. போலி மதச்சார்பின்மையைக் கடைப்பிடித்து வரும் திமுகவுக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்படும். தமிழ்நாட்டின் திமுக வாக்கு வங்கியாகக் கருதப்படுகின்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தற்போது திமுகவுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள்.

அண்மையில் நடைபெற்ற ஆசிரியர், அரசு ஊழியர் ஆர்ப்பாட்டத்தில் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்குப் பாடம் புகட்டுவோம் என்று பேசியுள்ளனர். இதனால் வரும் நாடாளு மன்றத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவு. அதிமுக பிளவுபட்டு உள்ளதால் பாஜகவின் வெற்றி வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. மோடி போட்டியிட்டால் வெற்றி வாய்ப்புகள் உறுதி செய்யப்படும் என்பதை மட்டும் இப்போதைக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.

 

-ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.