அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

“கார்ல் மார்க்ஸுக்காக வந்தேன்” டைரக்டர் ராஜு முருகன்!

திருச்சியில் அடகு நகையை விற்க

ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி & குட் ஷோ தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராம லிங்கம் இயக்கத்தில்  முனீஸ்காந்த், விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிடில் கிளாஸ்’. இந்த மாதம் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதால் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று ( நவ.11) இரவு சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

நிகழ்ச்சியில் பேசிய சிலர்…..

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இணைத்தயாரிப்பாளர்,  ‘குட் ஷோ’ *கே.வி.துரை,

“டில்லி பாபு சார் கதைகேட்டு ஓகே சொன்ன படம் இது. அவர் இல்லாமல் நாங்கள் படம் ரிலீஸ் செய்கிறோம். நல்லபடியாக எடுத்து வந்திருக்கிறோம் என நம்புகிறோம். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

இயக்குநர் ரவிகுமார்,

“இந்த சமயத்தில் டில்லி பாபு சாரை நினைவு கூர்கிறேன். நான் படம் பார்த்துவிட்டேன் என்பதால் நிச்சயம் இது வெற்றிப்படமாக அமையும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். ‘நாளைய இயக்குநர்’ காலத்தில் இருந்தே ராமதாஸ் ( முனீஸ்காந்த்) அண்ணன் எங்கள் டீமுக்கே பெரிய பக்கபலமாக இருந்தார். அவருடைய கேரக்டர் போலவே இந்தப் படமும் அமைந்ததில் மகிழ்ச்சி. கதையின் நாயகனாக நடித்துள்ளார். ‘மிடில் கிளாஸ்’ என்ற டைட்டில் இருப்பதால் குடும்பத்தின் கஷ்டத்தை மட்டும் காட்டாமல் விறுவிறுப்பாக ஜாலியாக இயக்கி இருக்கிறார் கிஷோர். உங்கள் அனைவரையும் படம் நிச்சயம் திருப்தி படுத்தும்”.

இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன்,

“டில்லி பாபு சார் தேர்ந்தெடுத்த கதை நிச்சயம் நன்றாக இருக்கும். ராமதாஸ் அண்ணன் 10 வருடங்களாக எனக்கு பழக்கம். நல்ல மனிதர். அவருக்கு நல்லதுதான் நடக்க வேண்டும். விஜயலட்சுமியின் நடிப்பு படத்தில் நன்றாக இருந்தது. எல்லோருக் கும் பிடித்தமான படமாக இருக்கும். ஒரு படம் முடியும்போது அதில் அறம் இருக்க வேண்டும். இந்தப் படத்தில் அது இருக்கிறது”.

வினியோகஸ்தர் ஸ்ரீகுமரன் ஃபிலிம்ஸ், *ராஜ் சிதம்பரம்* “தமிழ்நாட்டில் ‘லப்பர் பந்து’, ‘மாமன்’ படங்களை விநியோகம் செய்திருக்கிறேன். மூன்றாவது படம் இது. படத்தை வெற்றியடைய செய்வது உங்கள் கையில்தான் உள்ளது”.

மிடில் கிளாஸ்இயக்குநர் ராஜூமுருகன்,

“என் மனதுக்கு நெருக்கமான படம் இது. ஏன்னா முனீஸ்காந்த் கேரக்டரின் பெயர் கார்ல் மார்க்ஸ்னு டைரக்டர் சொன்னார். அதற்காகவே இந்த படம் பார்த்துவிட்டு இங்கே வந்திருக்கேன். எளிமையான கதைதான். ஆனால், அது பேசும் விஷயம் பெரிது. டிவி நிகழ்ச்சியில் சண்டை போடுவதை கொண்டாடும் இந்த வேளையில், கிரிக்கெட்டில் இருநாட்டு கேப்டன்கள் கைகொடுக்காமல் போவதை தேசபக்தி என பேசும் சூழலில் இந்தப் படம் பேசும் விஷயம் முக்கியமானது”

எடிட்டர் சான் லோகேஷ், “இந்தப் படத்தில் பல எமோஷன் தருணங்கள் உள்ளது”.

ஒளிப்பதிவாளர் சுதர்ஷன் ஸ்ரீனிவாசன்,

“இதுபோன்ற கதைகள் ஏன் எனக்கு வருவதில்லை என ஏக்கமாக எதிர்பார்த்திருந்தேன்.  இந்தக்கதை மீது நம்பிக்கை உள்ளது. தொழில்நுட்ப கலைஞர்கள் சின்சியராக வேலை செய்துள்ளனர். படம் உங்களுக்கு பிடிக்கும்”.

இயக்குநர் விஷால் வெங்கட்,

“சந்தோஷமும் நிம்மதியும் எங்கே என்ற தேடுதல் எல்லோருக்கும் வாழ்க்கையில் இருக்கும். அதைத் தான் இந்தப் படம் சொல்கிறது. உங்களுக்கும் படம் கனெக்ட் ஆகும்”.

இயக்குநர் சுப்ரமணியம் சிவா,

“நம் வாழ்க்கையே பணம் சம்பாதிக்கதான். அதில் இருந்து விலக முடியாது. கார்ல் மார்க்ஸ் மட்டும்தான் ஏழைகளில் இருந்து உலக வரலாறை எழுதினார். அதை எழுதிய கார்ல் மார்க்ஸ் பணத்திற்கு எப்படி கஷ்டப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோன்றுதான் இப்படத்தின் கேரக்டர்தான் ‘மிடில் கிளாஸ்’ கார்ல் மார்க்ஸூம் ( முனீஸ்காந்த்) கஷ்டப்படுகிறார். பணத்திற்கான போராட்டம் தான் இந்தப் படம். நேர்மையை கொஞ்சம் விலக்கி வைத்தால் தான் பணம் சம்பாதிக்க முடியும். இதுதான் உண்மை”

இயக்குநர் ஏ. வெங்கடேஷ்

“மிடில் கிளாஸ்’ மனிதன் எப்படி இருப்பார் என்பதை திரையில் காட்ட முனீஷ்காந்த் சரியான தேர்வு. மிடில் கிளாஸ் நபர்களிடம் எப்போதும் கனவும் ஏக்கமும் இருந்து கொண்டே இருக்கும். அவன் வாழ்வை மாற்றும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அதை அவன் தவற விட்டு அதற்காக போராடும் விஷயம்தான் இந்தப் படத்தின் கதை”.

இயக்குநர் ஒபிலி கிருஷ்ணா,

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

படத்தின் முதல் ஷாட்டிலேயே இது வேற லெவல் படம் என்பது புரிந்தது. திரைக்கதை புதுமையாக இருந்ததுதான் பெரும்பலம்”

இயக்குநர் சக்திவேல்,

“டில்லி பாபு சார் கம்பெனியில் பெரும்பாலும் அறிமுக இயக்குநர்கள்தான். திறமை மீது நம்பிக்கை வைத்தவர் தான் டில்லி பாபு.  படம் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. நடிகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்”.

இயக்குநர் ரவீந்திரன்,

“என்னுடைய இரண்டு படங்களுக்கு கோ-டைரக்டராக பணியாற்றினார் கிஷோர். இப்போதும் எனக்கு பக்கபலமாக இருக்கிறார். இந்தக் கதையை முதலில் என்னிடம் தான் சொன்னார். முனீஸ்காந்த், விஜயலட்சுமி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சூப்பராக நடித்துள்ளனர் “.

பாடகி சுப்லாஷினி,

“படத்தில் வாய்ப்பு கொடுத்த பிரணவ்வுக்கு நன்றி.  நான் பாடிய பாடல் வித்தியாசமான பாடலாக இருக்கும். இந்தப் பாடலுக்கும் படத்திற்கும் உங்கள் ஆதரவு தேவை”.

ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி *பாஸ்கர்* “டில்லி பாபு சார் மறைவுக்கு பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால் இதை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்”.

இசையமைப்பாளர் பிரணவ்,

“எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் துரை, தேவ், இயக்குநர் கிஷோருக்கு நன்றி. படத்தில் நிறைய விஷயங்கள் என்னோடு கனெக்ட் செய்து கொள்ள முடிந்தது. என்னுடைய பெற்றோர், டெக்னீஷியன்ஸ், நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி. என்னுடைய குரு சந்தோஷ் நாராயணன், மீனாட்சி அக்காவுக்கு நன்றி”.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்,

“கர்ணன்’, ‘வாழை’, ‘பாரீஸ் ஜெயரஜாஜ்’, ‘ரெட்ரோ’ எனப் பல படங்களில் என்னுடன் பணியாற்றியுள்ளார் பிரணவ். திபு நினன் தாமஸ், பிரணவ் என என்னுடைய அணியில் இருந்து அடுத்தடுத்து இசையமைப்பாளர்கள் ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி மூலம் அறிமுகமாகி இருப்பது மகிழ்ச்சி. படம் பெரும் வெற்றி அடையும் என்ற நம்பிக்கை உள்ளது”

மிடில் கிளாஸ்தயாரிப் பாளர் தேவ்,

“எனக்கு எமோஷனலான தருணம் இது. டில்லி சார் ரொம்ப ஆசைப்பட்டு தொடங்கிய படம் இது. அவர் ஆசியுடன் நவம்பர் 21 ஆம் தேதி வெளியாகிறது. அவரின் மறைவுக்குப் பிறகு அடுத்து என்ன என்ற கேள்வி இருந்தது. ஆனால், அதற்கான ரூட் மேப்பை தெளிவாக டில்லி சார் வைத்திருந்தார். அதை துரை அண்ணா தெளிவாக செயல்படுத்தி வருகிறார். டில்லி சார் ஆசைப்பட்டதை கிஷோர் அண்ணா அழகாக திரையில் எடுத்து வந்துள்ளார். நடிகர்களையும் தொழில்நுட்பக் கலைஞர்களையும் சரியாக தேர்வு செய்துள்ளார் இயக்குநர். முனீஷ்காந்த் அண்ணன் எங்கள் குடும்பத்தில் ஒருவர். அடுத்து நிறைய படங்கள் அவர் கதையின் நாயகனாக நடிக்க வேண்டும். விஜயலட்சுமி மேமின் நடிப்பு தீவிரமாக இருந்தது. உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை”.

கதையின் நாயகி  விஜய லட்சுமி,

“மிடில் கிளாஸ்’ படத்தில் ரொம்பவே ரசித்து நடித்தேன். கிஷோருக்கு நன்றி. இந்தக் கதைக்கு முனீஸ்காந்த் சார் தவிர வேறு யாரால் நடிக்க முடியும் எனத் தெரியவில்லை. அவருடன் நடித்தது மகிழ்ச்சி. நாங்கள் நினைத்ததை விட படம் சிறப்பாக வந்திருக்கிறது. அதற்குக் காரணம் டில்லி பாபு சாரின் ஆசீர்வாதம் தான்”.

இயக்குநர் கிஷோர்,

“இந்தக் கதையை பிடித்து ஒத்துக் கொண்ட டில்லி பாபு சாருக்கு நன்றி. முனீஸ்காந்த், விஜயலட்சுமி என எல்லோரின் கதாபாத்திரத்திற்கும் என்னிடம் ரெஃபரன்ஸ் உள்ளது. ராதாரவி சாரை புதுமையான கதாபாத்திரத்தில் பார்ப்பீர்கள். காளிவெங்கட், வேலராமமூர்த்தி, குரேஷி என எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு, இசை என தொழில்நுட்பக் கலைஞர்களும் ஈடுபாட்டோடு வேலை பார்த்தார்கள். ‘குடும்பஸ்தன்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ கதைகளை தாண்டிய ஒரு விஷயம் இந்தப் படத்தில் இருக்கும். அடுத்து என்ன என்ற த்ரில்லோடு இந்தப் படம் இருக்கும்”.

கதையின் நாயகன் முனீஸ் காந்த்,

“கிஷோர் சார் என்னிடம் நீங்கள்தான் ஹீரோ என்றார். நான் முடியாது என்றேன். கதை கேட்டபிறகுதான் தெரிந்தது கதைதான் ஹீரோ என்று. உடனே ஒத்துக்கொண்டேன். இயக்குநர், தயாரிப்பாளர்கள், எடிட்டர், இசையமைப்பாளர் மற்றும் எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. இந்தப் படத்திற்கு நான் எதிர்பாராத பெரிய சம்பளம் டில்லி பாபு சார் கொடுத்தார். திறமைகளை மதித்து வளர்த்து விட்ட டில்லி பாபு சார் போன்ற பல தயாரிப்பாளர்கள் சினிமாவிற்கு தேவை”.

—   ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.