தேனி- கொள்ளையடிக்கப்படும் கனிம வளங்கள் – கண்டுகொள்ளாத மாவட்ட நிா்வாகம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, எரசைக்கநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில்  மஞ்சள் நதி அணை கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயில் இரவு நேரங்களில் ஜேசிபி, ஹிட்டாச்சி, உள்ளிட்ட கனரக வாகனங்களை கொண்டு டிப்பர் லாரிகளில் தினந்தோறும் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

குடிநீர் குழாய்கள் உடைப்பு
குடிநீர் குழாய்கள் உடைப்பு

Srirangam MLA palaniyandi birthday

மஞ்சள் நதி அணை  கண்மாயில் நிலத்தடியில் அமைந்துள்ள ஊராட்சி குடிநீர் குழாய்கள் கனிம வள கொள்ளையர்களின் வாகன போக்குவரத்தினால்  தண்ணீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு  தண்ணீர் வீணாகச் செல்லும் அவலத்தை கண்டுகொள்ளாமல் இருக்கிறது  மாவட்ட நிர்வாகம்.

கொள்ளையடிக்கப்படும் கனிம வளங்கள்
கொள்ளையடிக்கப்படும் கனிம வளங்கள்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இதன் காரணமாக நேற்று நள்ளிரவு கண்மாயில் கனிம வளங்களை கொள்ளையடித்து சென்ற லாரிகளை எரசக்கநாயக்கனூர் கிராம பொதுமக்கள் சிறை பிடித்து வைத்தனர்.

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

மஞ்சள் நதி அணை கண்மாய்
மஞ்சள் நதி அணை கண்மாய்

இந்த கண்மாயில் எரசக்கநாயக்கனூர், அப்பிப்பட்டி அழகாபுரி உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தற்போது இப்பகுதிகளுக்கு செல்லக்கூடிய குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டதால் தண்ணீர் கண்மாய் முழுவதும் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.

 

— ஜெய்ஸ்ரீராம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.