அங்குசம் சேனலில் இணைய

ஆமா … இதெல்லாம் அமைச்சருக்கு தெரியுமா ?

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நீண்ட இழுபறிக்கு பிறகு மணல் விவகாரத்தில், இப்படியும் இல்லாமல் அப்படியும் போகாமல் ஒரு முடிவை எடுத்திருந்தது ஆளும் தரப்பு. ஆட்சி முடிய ஆறே மாசம்தான் இருக்கிறது என்ற பதைபதைப்பில், பரபரப்பாக இயங்கி வருகிறதாம் மணல் பிசினஸ். அரசியல்வாதி அல்லாத அந்த மணல் காண்ட்ராக்டரின் பிறந்த நாளில், அத்தி பூத்தாற்போல கொங்கு மண்டலத்திலும் சுவரொட்டிகள் முளைத்திருந்தன.

சரி, மேட்டருக்கு வருவோம். மலைக்கோட்டை மாவட்டத்தில், கிராவல் மண் வியாபாரம் படுஜோராகப் போகிறதாம். ஏற்கெனவே, அமைச்சரின் பெயரில் அடாவடி என்ற உளவுத்தகவலை சொல்லியிருந்தோம். இப்போதும், வரைமுறையெல்லாம் இல்லாமல், ஏரியா விட்டு ஏரியா கடந்து போகிறதாம் அந்த விறுவிறுப்பு. ”இது எங்க ஏரியா உள்ளே வராதே”னு அவர்களுக்குள்ளாக நடக்கும் பஞ்சாயத்துகள் தனிக்கதை.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

கனிமவள கொள்ளைமெயின் கதைதான் மலைக்கோட்டை மாவட்டத்தையே மிரள வைக்கிறதாம். மலைக்கோட்டை மாவட்டத்திலிருந்து தலைநகருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அமைந்திருக்கிறது. அந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள வனப்பான இடங்களையெல்லாம் வளைத்து வளைத்து கிராவல் மண்களை சுரண்டி எடுத்து வருகிறார்களாம்.

அரசிடம் முறைப்படி அனுமதி வாங்கியது, வேறொரு இடத்தில். அதன் தாலுகா லிமிட்டே வேறு. ஆனாலும், அந்த ஒரு அனுமதியை வைத்துக் கொண்டு மாவட்டத்தில் பல இடங்களில் கிராவல் மணலை எடுத்து வருகிறார்களாம். இரண்டு எழுத்து தொழிற்பேட்டைக்கு அப்படியே பின்புறத்தில், அதுவும் தொழிற்பேட்டையின் பிரதான நுழைவாயில் வழியாகவே உள்ளே நுழைந்து சுமார் 2000 யூனிட்களுக்கும் அதிகமான கிராவல் மண்ணை எடுத்திருக்கிறார்கள். மூன்றெழுத்தில் புல்லாங்குழல் கடவுள் பெயரைக் கொண்டவருக்குச் சொந்தமான, பட்டா இடத்தில் இந்த கூத்தை நடத்தியிருக்கிறார்களாம்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

கனிமவள கொள்ளைபாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலிருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் கிராவல் மணல் அள்ள அனுமதி இல்லை என்ற நிலையில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு மிக அருகாமையில் இந்த கிராவல் மண் எடுக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். அடுத்து, அப்படியே எடுத்தாலும் ஏதோ மேலோட்டமாக எடுத்திருந்தால்கூட பரவாயில்லை. அடிமடியை அறுத்தெடுப்பதை போல, பல அடி ஆழத்துக்கு அள்ளியிருக்கிறார்கள். மழை காலங்களில் நீர் நிரம்பி, கால்நடைகள் தண்ணீருக்காக தேடி வரும்போது, புதைகுழியில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கிறார்கள். அருகாமையிலேயே தொழிற்பேட்டை இயங்கி வரும் நிலையில் அங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கும்கூட இதே கதிதான் என்கிறார்கள்.

ஏற்கெனவே, ஒருமுறை இதே ஏரியாவில் இதே மாதிரி கிராவல் மண் அள்ளப்பட்டபோதும் அதிகாரிகள் தரப்பில் எந்த எதிர்வினையும் இல்லையாம். ஏரியா விட்டு ஏரியா அள்ளிட்டு போனப்பவே எந்த நடவடிக்கையும் இல்லை. இப்போ அள்ளுனது லோக்கல் ஏரியா பெருந்தலையாச்சே. எப்படி நடவடிக்கை எடுத்துவிடுவார்கள்? என ஏரியாவாசிகள் புலம்புகிறார்களாம்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அவர்கள் எல்லோரும் கை காட்டுவது, சாட்சாத் பணத்துக்கு அதிபதியான கடவுள் பெயரை கொண்டவரை. போலீசு அதிகாரி போல மூன்றெழுத்து பெயரில் மாவட்டத்தில் செல்வாக்கு செலுத்துபவரை.

வரைமுறையற்ற கிராவல் மண் அள்ளப்பட்டதை கண்டு கொதித்துப்போன, சமூக ஆர்வலர்கள் சிலர் கனிமவளத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு போயிருக்கிறார்கள். கனிமவளத்துக்கு பொறுப்பான, காம்பினேசன் காமெடிக்கு பெயர்போன நடிகரின் பெயரில் பாதியை கொண்ட அந்த அதிகாரி பொறுப்பாக சம்பந்தபட்ட பார்ட்டிக்கே அலெர்ட் கொடுத்துவிட்டு, ஒப்புக்கு வருவாய்த்துறைக்கு தகவல் கொடுத்திருக்கிறாராம்.

கனிமவள கொள்ளைவருவாய்த்துறை அதிகாரிகளோ, ”ஹேய் நீ போ … இல்லை, இல்லை நீ போ … ” என ஒருவர் ஒருவர் மாற்றி ஐஸ்பாய் விளையாடிவிட்டு, கடைசியாக, தலையாரியை ஸ்பாட்டுக்கு போகச் சொல்லியிருக்கிறார்கள். மேலிட உத்தரவின் பேரில், வி.ஏ.ஓ. வழியாக ஒப்புக்கு ஒரு புகாரும் லோக்கல் ஸ்டேஷனில் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். ”வெறும் பேப்பரை கொடுத்தா எப்படி? அள்ளுன ஆளுக எங்கே? ஆளு இல்லாம எஃப்.ஐ.ஆர். எப்படி போடுறது”னு மடக்கினாராம் ஸ்டேஷன் அதிகாரி. பிறகு, “சரி, சரி கிளம்புங்க பார்த்துக்கிறோம்”னு வழியனுப்பி வச்சிட்டாங்களாம்.

கடைசி வரைக்கும், எந்த அதிகாரியும் ஸ்பாட்டுக்கே போகலியாம். அதுக்குள்ள, பொக்லைன் எந்திரத்தையும் மற்றொரு லாரியை வைத்து சம்பந்தபட்ட பார்ட்டி எடுத்து சென்றுவிட்டதாம்.

மலைக்கோட்டை மாநகரில், மூலவரான அந்த அமைச்சரின் பெயரை சொல்லியே பல இடங்களிலும் பலரும் காரியம் சாதித்து வருகிறார்களாம். சம்பந்தபட்ட அதிகாரிகளும், இதை அமைச்சரிடமா கேட்க முடியும்? என புலம்பி வருகிறார்களாம். இப்படியே, போனால் ஆளும்கட்சியின் இமேஜை அமைச்சரின் பெயரை சொல்லி காரியம் சாதித்துக் கொள்ளும் நபர்களே கெடுத்துவிடுவார்கள் என தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக புலம்புகிறார்களாம், லோக்கல் உடன்பிறப்புகளே!

 

—              ஸ்பை டீம்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.