அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தேர்தல் களத்தில் MMM முருகானந்தம் : வளைக்கப்போவது யாரு ?

திருச்சியில் அடகு நகையை விற்க

எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. தேர்தல் தேதி அறிவித்துவிட்டார்களோ என்றே எண்ணத்தோன்றும் அளவுக்கு, பிரதான அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் கால பிரச்சார திட்டங்களை இப்போதே செயல்படுத்த தொடங்கிவிட்டார்கள்.

தொழில்நகரத்தின் தொழிலதிபர் மனைவி ஒருவரை வேட்பாளராக களமிறக்க, கட்சியின் தலைவர் ஒருவரே நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார் என்ற தகவலை ஸ்பை நியூசாக சொல்லியிருந்தோம்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

எம். முருகானந்தம்
எம். முருகானந்தம்

இதற்கு மத்தியில், திருச்சியை சேர்ந்த தொழிலதிபரும் மக்கள் நீதி மையத்தில் இருந்தபோது சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளருமான MMM முருகானந்தம், தனது அரசியல் பயணம் குறித்த கருத்தை சூசகமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

https://www.livyashree.com/

தீபாவளி பண்டிகையையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்து கலந்துரையாடியபோது, அரசியல் பிரவேசம் குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

“நான் பிறந்து வளர்ந்த ஊரில், நான் படித்த அதே பள்ளியில் ஓட்டுப் போடும் வாய்ப்பை பெற்றவன். இன்னும் சொல்லப்போனால், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது அதே ஓட்டுச்சாவடியில் எனக்கான வாக்கை பதிவு செய்யும் வாய்ப்பை பெற்றவன். கண்டிப்பாக, எனது மண்ணில்தான் எனது போட்டி இருக்கும்.” என்பதாக தெரிவித்தார்.

தனது சொந்த தொகுதியின் அமைச்சரும் நண்பருமான பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழியுடன்  இணைந்து ஆயிரம் அரசுப்பள்ளிகளை தத்தெடுத்திருப்பது குறித்த கேள்விக்கு, அது கல்வி சார்ந்த செயல்பாடு குறிப்பிட்ட கட்சிக்கும் இதற்கும் தொடர்பேதும் இல்லை என்றார். மாநில கட்சியா? தேசிய கட்சியா? என்ற கேள்விக்கும் கடைசிவரை பிடிகொடுக்காமல் மூன்று மாதத்தில் விடை கிடைக்கும் என்றார். தனது பத்துநிமிட உரையினூடாக, பாப்பா உமாநாத் பற்றி குறிப்பிட்டு கம்யூனிச சித்தாந்தத்தை வியந்து பேசியது பல்ஸ் மேலும் கூட்டியிருக்கிறது.

MMM முருகானந்தம்”ஓசூர் நகரம் வளர்ந்தது போல, சேலம் வளர்ந்தது போல திருச்சி வளராமல் போனது ஏன்? திருச்சியிலிருந்து கொச்சி துறைமுகம் 300 கிலோமீட்டர். விளிஞ்சம் துறைமுகம் 300 கிலோமீட்டர். தூத்துக்குடியும் 300 கிலோமீட்டர். சென்னையும் 300 கிலோமீட்டர். கப்பல் போக்குவரத்துக்கு ஏற்ற மண் இது. அப்படி என்றால், மற்ற மாவட்டங்களைவிட இங்குதான் அதிகளவிலான தொழிற்சாலைகள் அமைந்திருக்கனும். கோயம்புத்தூருக்கு அடுத்து திருச்சிதான் முக்கியமான தொழில் மையமாக இருக்க முடியும். இன்னும் சொல்லப்போனால், இந்தியாவின் தலைசிறந்த நகரங்கள்னு எடுத்துக் கொண்டால், பூனே, ஹைதராபாத், திருச்சி எல்லாம் இப்போது டாப் 3 இல் இருக்கின்றன. இது நிறைவேறாம போனதுக்கு காரணம் சரியான தலைவர் இங்கிருந்து உருவாகவில்லை. அமைப்பு ரீதியாக இதனை யாரும் முன்னெடுக்கவில்லை.” என்பதாக தனது வருத்தத்தையும் பதிவு செய்யத் தவறவில்லை.

அரசியல்வாதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், தொழிலதிபர்களாக மாறிய பலரை தமிழகம் கண்டிருக்கிறது. ஆனால், தன்முனைப்பான முயற்சியில் உலகளாவிய வலைபின்னலுடன் எக்ஸெல் குழுமத்தின் தலைவராக தொழிலதிபராக, ரோட்டரி இன்டர்நேஷனலின் இயக்குநர்களில் ஒருவராக அங்கம் வகிக்கும் MMM முருகானந்தம் அரசியலில் அடியெடுத்து வைக்க ஆர்வத்தை முன்வைத்தியிருக்கிறார். தன்னை உலகளவில் உயர்த்திய மண்ணுக்கு எந்த வகையிலாவது ஏதேனும் செய்துவிட வேண்டுமென்ற வேட்கையை விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். தொழிலதிபரான இந்த வேட்பாளரை எந்தக் கட்சி ஏந்தப்போகிறது என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பாக எகிறியிருக்கிறது.

 

—    ஆதிரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.